4.11.15

ஓரிதழ்தாமரை hybanthus enneaspermus மருத்துவகுணங்கள்

ஓரிதழ்தாமரை

ஓரிதழ்தாமரை
ஓரிதழ்தாமரை
ஓரிதழ்தாமரை
ஓரிதழ்தாமரை
ஓரிதழ்தாமரை வேர்


தாமரை என்றவுடன் நீரில் இருக்கும் என்று நினைத்துவிடாதீர்கள். இது நிலத்தில் வளரும் சிறு செடி வகையாகும். இதன் இலையை வாயில் வைத்து சுவைத்தால் வாயில் குழகுழப்பு தட்டும்.

   இதன் இலை, தண்டு, பூ, வேர், காய் அனைத்துமே மருத்துவக் குணம் கொண்டது. இதற்கு இரத்தின புருஷ்என்ற பெயரும் உண்டு.
 
உடல் வலுப்பெற
ஓரிதழ் தாமரையை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து   பாலில்கலந்து காலை, மாலை என இருவேளையும் அருந்திவந்தால் உடல் வலுப்பெறும்ஆண்மை பெருகும். நோயின்தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களுக்கு உடல் தேற ஒரிதழ்  தாமரை        நல்ல மருந்தாகும்.

விஷக்காய்ச்சலால் அவதியுறுபவர்கள் ஓரிதழ் தாமரையை கசாயம் செய்து அருந்தி வந்தால், விஷக்காய்ச்சல் நீங்கும். இரைப்பு நோய்க்கு இது அருமருந்தாகும். உடல் எடை குறைய ஓரிதழ் தாமரை கசாயம் சிறந்தது.

ஓரிதழ் தாமரை இலை, பச்சை கற்பூரம், கோரோசனை இவற்றை சம அளவு எடுத்து இடித்து பசுவின் நெய்யுடன் கலந்து மேகவெட்டை தாக்கிய பகுதிகளில் பூசி வந்தால் மேகவெட்டை தீரும்.

ஓரிதழ் தாமரையின்வேரை  600ml நீரில் 200ml வரும் வரை காய்ச்சி கசாயம் செய்து அருந்திவந்தால் உடல் வலுபெறும்.