7.11.14

எருக்கு calotropis gigantea -மருத்துவகுணங்கள்>எருக்கு வாததைலம்


நீலஎருக்கு

வெள்ளெருக்கு



நாம் அவ்வளவாகக் கண்டுகொள்ளாத எருக்கஞ்செடியில் பலவகையான மருத்துவகுணங்கள் உள்ளது. இதில் இரண்டு வகை உள்ளது (நீலஎருக்கு,வெள்ளெருக்கு) நீலஎருக்கு நீலநிறபூவை கொண்டு காணப்படும் வெள்ளெருக்கு வெள்ளை நிறபூவை கொண்டுகாணப்படும். இதில்வெள்ளெருக்கு அரியவகை ஆகும் . 

குறிப்பாக வெள்ளை எருக்கன் செடிக்கு விசேஷ மருத்துவக் குணங்கள் இருக்கின்றன.

* எருக்கின் இலை, பூ, வேர், பால் அனைத்தும் சிறப்பான மருத்துவ குணங்கள் நிறைந்தவை. எருக்கம் இலையை வதக்கிக் கட்ட கட்டிகள் பழுத்து உடையும். செங்கல்லைப் பழுக்கக் காய்ச்சி அதன் மீது எருக்கின் பழுத்த இலையை  வரிசையாக அடுக்கிக் குதிகாலால் அழுத்தி மிதித்து வர குதிகால் வாயு நீங்கும்.

* இலைகளைக் காய வைத்து எரித்து, அதிலிருந்து வரும் புகையை மூக்கினுள் இழுக்கஆஸ்துமா இருமல் போன்ற உபாதைகள் குறைந்து விடும்.

* எருக்கு இலைகளை மூட்டை கட்டி சூடாக்கி வெதுவெதுப்பாக நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் ஒத்தடம் கொடுத்தால் அங்கு ஏற்படும் வலி குறைந்துவிடும்.

* காய்ந்த இலைகளைப் பொடித்து தூள் ஆக்கி புண்கள் மீது தூவ அவை விரைவில் ஆறி விடும். எருக்கம் இலைச்சாற்றை மஞ்சள் தூளுடன் கலந்து கடுகு எண்ணெயில் வேக வைத்து தோலில் ஏற்படும் படை, சொறி, சிரங்குகளில் பூசி வர விரைவில் குணமாகும்.
கடுகு எண்ணெய்


* எருக்கம் வேரின் தோலை சிவப்பு அரிசி வடித்த கஞ்சியுடன் அரைத்து யானைக்கால் நோய்க்கு பற்றிடலாம்.    

* தேள் கடித்த இடத்தில் எருக்கின் பாலைத் தடவி வர விஷத்தின் தீவிரம் உடனே குறையும். பொதுவான விஷக்கடிகளுக்கும் இதுபோல பயன்படுத்தலாம்.

*எருக்குஇலைகளை நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டிய  எண்ணெயை மூட்டு வலி, மூட்டு வாதம், இடுப்பு வலி, தொண்டை நரம்பு வலி  ஆகியவற்றுக்கு வலியுள்ள பாகத்தில் பூசினால் குணமாகும்.


*சிலருக்கு முகம் அழகாக இருக்கும். ஆனால், பல் அசிங்கமாக இருக்கும். முத்துப் போன்ற பற்களில் மஞ்சள்நிறக் கறைகள் படிந்து முகத்தின் அழகையே கெடுத்துவிடும். இதைப் போக்கி பற்களை பளபளப்பாக்கிட எருக்கு இலைகளை நிழலில் உலர வைத்து அத்துடன் மிளகு சம அளவில் சேர்த்து, அரைத்து பவுடராக்கிக் கொள்ள வேண்டும். இதைப் பல் பொடியாக, பல்லில் தேய்த்தால் கறைகள் நீங்கும்.


*எருக்கு இலைகளை நல்லெண்ணெயில் கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக்கொள்வார்கள். பக்கவாதம் நீங்கிட இதைத் தடவி மசாஜ் செய்வார்கள்.


எருக்கு வாததைலம்
தேவையானபொருள்>200ML நல்லேண்நெய் >துரிதமாக தோலில் ஊடுருவும் தன்மை கொண்டது.   
                         >10எருக்கு இலை வலியை குணப்படுத்தும்
                         >20 எருக்கு பூ>இது நரம்புகளுக்கு புத்துணர்ச்சிகொடுக்கும் தன்மை கொண்டது.              
                    செய்முறை
 எருக்கு இலையை,பூவை சிறுதுண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.பின்னர் சட்டியில் நல்லேண்னையை கொதிக்கவிடவும் நன்கு கொதித்தவுடன் அதில் இலை,பூவை போட்டுகாய்ச்சவும். இலை,பூவின் சாறு எண்ணெயில் இறங்கும் வரை எண்ணெய் மெல்லியபச்சைநிறமாக வரும்வரை காய்ச்சவும். பின்னர் இறக்கி ஆறவிட்டு வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

இந்த தைலம் முடக்குவாதம்,பக்கவாதம்,கை,கால்வலி, மூட்டுவலியை முற்றுமாக குணப்படுத்தும். முடக்குவாதத்தை முற்றுமாக குணப்படுத்தும் வல்லமை கொண்டது.
எருக்கு வாததைலம்

சிறுகண்பீளை Aerva lanata -மருத்துவ குணங்கள்

சிறுகண்பீளை(சிறுபீளை)


 இது சிறு செடிவகையை சார்ந்தது  ஈரப்பாங்கான இடங்களில்

 பரவலாக வளர்கிறது.இதன் இலைகள் சிறியதாக நீள் வட்டவடிவில்

 இருக்கும்ஒவ்வொரு இலைக்கும் இடையில் பூக்கள் இருக்கும் பூக்கள்
 தண்டுடன் ஒட்டி அவல் போன்ற வடிவமாக இருக்கும்.
 இதன் எல்லாபாகமும்மருத்துவதற்குப் பயன்படுத்தப் படுகிறது

 மருத்துவ குணங்கள்-இது சிறு நீரைப் பெருக்கி   சிறுநீரகற்களை கரைக்கும்  வல்லமை உடையது.


*சிறு கண் பீளை இலையை இடித்து சாறு எடுத்து பதினைந்து மி.லி.வீதம்  மூன்று வேளை அருந்தி வரநீர் எரிச்சல், நீரடைப்பு குணமாகும்.


*கருத்தரித்த பெண்களுக்கு ஏற்படும் தளர்ச்சியை நீக்கி உடலுக்கு வன்மை  கொடுக்க இதன் வேரைக் கொண்டு செய்யப்படும் கஞ்சி நல்லது.


*சிறுகண் பீளை வேர்ப்பட்டையையும், பனைவெல்லத்தையும் சம அளவாக

 எடுத்து நன்கு அரைத்து இருநூறு மி.லி.பசும் பாலுடன் கலந்து  தினந்தோறும்

 இரண்டு வேளை அருந்தி வந்தால்நீரடைப்பு, கல்லடைப்பு, முதலிய

 நோய்கள்குணமாகும்.


   
 *இதன் வேரைத்தட்டி சிறிய மண்பானையில் இட்டு சிறிதளவு நீர்

  விட்டு  சுண்டகாய்ச்சி வடிகட்டி வேளைக்கு

    1.5 
அவுன்ஸ் அளவு தினம் 2 -3 வேளை உட்கொள்ள


  நீர்கட்டுகல்லடைப்புசதையடைப்பு போம் .

  

11.10.14

நெல்லிமுள்ளி ரசம்


நெல்லிமுள்ளி(காய்ந்தநெல்லி தோல்)
நெல்லிமுள்ளி

தேவையான பொருள்கள்:
நெல்லிமுள்ளி = 1 கப்
மிளகாய் வற்றல்(காய்ந்தமிளகாய்) = 2
மிளகு= அரை ஸ்பூன்
சீரகம் = அரை ஸ்பூன்
பூண்டு = 4 பல்
இஞ்சி = புளியங்கொட்டை அளவு
பெருங்காயம் = சிறிது
தனியா( கொத்தமல்லி)= 1 ஸ்பூன்
புளி = சிறிதளவு
கடுகு = அரை ஸ்பூன்
எண்ணெய் = தேவையான அளவு
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
நெல்லிமுள்ளியை முதல் நாளே 2 கப் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் அந்த தண்ணீரை வடிகட்டி அதில் புளியைக் கரைத்துக் கொள்ள வேண்டும்.
மிக்ஸியில் பெருங்காயம், இஞ்சி, பூண்டு, மிளகு, மிளகாய் வற்றல், தனியா, சீரகம் சேர்த்து கரகரப்பாக அரைத்துச் சேர்க்கவும்.
உப்பு தேவையான அளவு சேர்த்து 4 கப் தண்ணீர் விட்டு அடுப்பில் கொதிக்க விடவும். கொதித்து வரும் போது தேவையான அளவு எண்ணெய் எடுத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
சுவையான நெல்லிமுள்ளி ரசம் தயார். நெல்லிக்காய் மிகவும் குளிர்ச்சியைக் கொடுக்கும். 
மருத்துவ குணங்கள்:
நெல்லியில் வைட்டமின் C மற்றும் வைட்டமின் B ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. வயிற்றுப்போக்கு, நீரிழிவு போன்றவற்றைக் குறைக்கும்.
பித்தத்தை குறைக்கும். கண் பார்வையை தெளிவாக்கும். இரத்தத்தை

தூய்மையாக்கும். மூலம், மலச்சிக்கல், வாய்வு, இருமல், சளி, வாந்தி, மஞ்சள்

காமாலை மற்றும் தோல் சம்பந்தப்பட்ட நோய்களை குறைக்கும்


5.10.14

வெள்ளறுகு enicostema axillare -மருத்துவ குணங்கள்





வெள்ளறுகு

வெள்ளறுகு
வெள்ளறுகு



வெளிறியஇலைகளை மாற்றடுக்கில் கொண்ட வெண்மையான பூக்களைக் கொண்ட சிறு செடி.இது சுமார் 5 – 30 செ.மீ.உயரம் வளரக்கூட்டயது. இதன் இலைகள்  15 செ.மீ.நீளத்திலும், 5 செ.மீ.அகலத்திலும் இருக்கும்.இதன் இலைகள் சாம்பல் நிறமாக தும்பை இலை போல் வளைந்து சுருண்டு இருக்கும் .பூக்கள் பால் வெள்ளை நிறமாக இருக்கும். கணுக்களில் பூக்கள் கதிர் போல் பூக்ககும்.இதன் தண்டுகள் சாம்பல் பூசினால் போல் இருக்கும்.

மருத்துவப் பயன்கள் –: வெள்ளறுகானது மலத்தை இளக்கி, வெப்பத்தை அகற்றி,பசியைத் தூண்டி, உடலை உரமாக்கும்  .இது காச்சல், வாதம்,தோல்வியாதி, வயிற்று உப்புசம், பாம்புக்கடி, அஜீரணம், மற்றம் தொழுநோய் ஆகிய நோய்களைக் குணப்படுத்த வல்லது. இதில் இரும்பு சத்து, பொட்டாசியம், சோடியம், கால்சியம், மெகனீசியம், சிலிக்கா,பாஸ்பேட். குளோரைடு, சல்பேட் மற்றும் கார்பனேட் உள்ளது.

வெள்ளறுகை அரைத்து கால் ஆணிகட்டின் மீது வைத்து பத்துபோல்
கட்டிவர குணமடையும்.

வெள்ளறுகு செடியை வேருடன் எடுத்து சுத்தமாகக்கழுவி இடித்து சாறு பிழிந்து 20 மி.லி.. முதல் 30 மி,லி. வரை பாம்பு கடித்திருப்பவர்களுக்கு உள்ளே கொடுத்துவர வாந்தி பேதியாகிநச்சு இறங்கும். அல்லது  கடிவாயில் செடியின் சக்கையை அரைத்து வைத்துக்கட்டநச்சு முறியும்.

வெள்ளறுகு செடியை தேவையான அளவு எடுத்து வெந்நீர் விட்டு அரைத்துகாலையில் சொறி,  தவளைச்சொறி சிரங்கு, மேகத்தடிப்பு உள்ளவர்கள் பூசி, ஒரு மணி நேரம் சென்ற பின்னர் பேய்பீர்க்கங்காய் கூட்டால் உடலைத் தேய்த்துக் குளித்து வந்தால் அவை குணமாகும்.





பீர்க்கங்காய் 


வெள்ளறுகு செடியை எடுத்து சுத்தம் செய்து நன்றாக இடித்து அதனுடன் பத்து மிளகு, ஒரு துண்டு சுக்கு, நான்கு சிட்டிகை சீரகம் ஆகியவைகளைத் தட்டி மண் சட்டியில் போட்டு, எண்ணூறு மி.லி. நீர்விட்டு அதனை இருநூறு மி.லி.யாக வற்றும் வரை நன்கு காச்சி வடிகட்டி காலை, மாலை இரண்டு வேளை நூறு மி.லி வீதம் அருந்தி வர கீள்வாதம், நரம்புக் கோளாறுகள் முதலியவை கட்டுப்படும். வெள்ளறுகுவை அரைத்து சிறு சிரங்குகளுக்கும் பூசி வரலாம்.


தேவையான வெள்ளறுகை வெண்மிளகுடன்சேர்த்து அரைத்து நீரில் கலந்து வடிகட்டி கொஞ்சம் பசுவின் வெண்ணெய் சேர்த்து அருந்தி வரஉடல் சூடு தணியும்.  

2.9.14

முசுமுசுக்கை mukia maderaspatana பயன்கள்,இளநரை போக்கும் முசுமுசுக்கை தைலம்

முசுமுசுக்கை




முசுமுசுக்கை

http://settikathir.blogspot.com/முசுமுசுக்கை







கொடி வகையைச் சேர்ந்த முசுமுசுக்கை , சுவர்களிலும், தரைகளிலும் தானாக வளர்ந்திருக்கும். 

இது நுரையீரல் நோய்கள், சுவாசக் கோளாறுகளை நீக்க வல்லது. சுவாசக்குழல், சுவாசப்பையில் நுண்ணறைகளில் ஏற்படும் ரணம், அழற்சி, ஆகியவற்றை ஆற்றிவிடும் ஆற்றல் கொண்டது. 

மேலும் சுவாசப்பைகளில் உண்டாகும் கபத்தை அகற்றி அதனை சுத்தம் செய்யும் சக்தி உடையது. 

அமைதியின்மை போக்கும் இக்கீரையை நன்றாக ஆய்ந்து புழுங்கல் அரிசியுடன் சேர்த்து மாவாக அரைத்து தோசை, அப்பம் சுட்டு சாப்பிடலாம். 

இதனை வழக்கமாக உணவில் சேர்த்துக்கொள்ள நாள்பட்ட நோய்களால் தளர்ந்து போன உடல் பலமடையும், மனதில் அமைதியின்மை, கோபம் ஆகியவற்றையும் சரி செய்யக்கூடியது இந்த முசுமுசுக்கை கீரை. உயர் ரத்த அழுத்த நோயினை இது குணப்படுத்த வல்லது.

சளி, இருமல் வரட்டு இருமல், இழுப்பு வலிகள் போன்றவற்றையும் ஒழித்துக் கட்டும். ஆஸ்துமா குணமாகும் முசுமுசுக்கையை சூரணமாக செய்து உட்கொள்ள நாள்பட்ட எலுப்புருக்கி, ஆஸ்துமா, காசநோய், இளைப்பு நோய், ரத்தசுவாசநோய் போன்றவை குணமடையும். 

முசுமுசுக்கை தைலம்
முசுமுசுக்கை இலை  எடுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு  அந்த எண்ணெயைத் தலைக்குத்தேய்த்து வந்தால் இளநரை மாறும்.ஆஸ்துமாகாசநோய்இளைப்பு நோய்ரத்தசுவாசநோய் போன்றவை குணமடையும்.






31.7.14

தாமரை- மருத்துவ குணங்கள்



செந்தாமரைப்பூ
வெண் தாமரைப்பூ:
தாமரை கிழங்கு

வெண் தாமரை மருத்துவ குணங்கள்

* வெப்பத்தால் ஏற்படும் கண் எரிச்சல், கண்களில் நீர் வடிதல், போன்ற கண் நோய்களுக்கு தாமரைப்பூவின் இதழ்கள் பயன்படுகின்றன. பசும்பால் 100 மில்லி, சுத்தமான தண்ணீர் 100 மி.லி. சேர்த்து, அதில் தாமரை பூவிதழ்களை போட்டு காய்ச்சவும். நன்றாக காய்ந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி, வரும் ஆவியை பாதிக்கப்பட்ட கண்ணில் படும்படி செய்ய வேண்டும். இதை காலை, மாலை, இருவேளை செய்து வந்தால் கண்குறைபாடுகள் நீங்கும். இதற்கு செந்தாமரை பூவையும் பயன்படுத்தலாம்.

*தாமரைப்பூ அதன் இலை, தண்டு கிழங்கு இவை ஒவ்வொன்றையும் தனித்தனியே எடுத்து, அரைத்து (வகைக்கு 100மில்லி அளவு) சாறுகளை சேகரித்து கொள்ளவும். இத்துடன் சுத்தமான நல்லெண்ணை (750 ml) கலந்து அடுப்பில் வைத்து காய்ச்சவும். எண்ணை கொதித்து காய்ந்தபிறகு, சிவப்பு நிறமடையும். நல்ல நறுமணம், எண்ணையிலிருந்து எழும். இந்த பக்குவ நிலையில் அடுப்பிலிருந்து இறக்கி, ஆறவைத்து வடிகட்டி, போத்தலில் போட்டு வைத்துக்கொள்ளவும். இந்த தைலத்தை   தலையில் தடவி வாரம் ஒரு முறை குளித்து வந்தால் கண் பார்வை சீராகும்


*வெண் தாமரை பூவால் ஈரலின் வெப்பமும், வெப்பமுள்ள மருந்துகளின் உட்சூடும் நீங்கும். தாமரை விதை ஆண்மையை பெருக்கும். கிழங்கு கண் ஒளி, குளிர்ச்சி இவற்றைத் தரும் விதைகளை பொடித்து 1 - 2 கிராம் எடை உள்ளுக்கு கொடுத்து வர உடலுக்கு வலிமை தரும். விதைகளை தேன் விட்டரைத்து நாக்கில் தடவ, வாந்தி, விக்கல், நிற்கும்.வெண்தாமரைப் பூ மூளையின் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஞாபக சக்தியைத் தூண்டுகிறது. நரம்புகளுக்கு பலம் கொடுக்கிறது என சித்தர்கள் பலர் கூறியுள்ளனர்.

*வெண் தாமரைப்பூ ஒன்றின் இதழ்களை, பழைய மண் பாண்டத்தில் போட்டு அதில் 200 மி.லி. நீரை ஊற்றவும். அடுப்பில் வைத்து, நீர் பாதியாக சுண்டும் வரை காய்ச்சவும். பிறகு இறக்கி வடிகட்டிக் கொள்ளவும். இந்த குடிநீரை வேளைக்கு 3 அவுன்ஸ் வீதம் தினமும் 3 வேளை குடித்து வந்தால் மூளை பலம் பெறும். அதன் செயல்பாடு சிறப்பாகும். 

*மேற்சொன்னது போல், தயாரித்த தாமரை குடிநீரில் பால், சர்க்கரை சேர்த்து, பருக, இருதய நோய்கள் அகலும். தினம் இருவேளை 3 வாரங்கள் சாப்பிட வேண்டும். காய்ச்சலுக்கும் இந்த தாமரை குடிநீர் நல்லது.

செந்தாமரை மருத்துவ குணங்கள்:
*வெண் தாமரைப்பூவை பயன்படுத்து வது போலவே, செந்தாமரைப்பூவையும் பயன் படுத்தலாம். செந்தாமரைப்பூ லேகியம் கண்ணுக்கும், மூளைக்கும் சிறந்த டானிக். செந்தாமரைப்பூ இதழ்கள், சீந்தில் கொடி, நெல்லிமுள்ளி, காசினி கீரை, சுக்கு, திப்பிலி இவற்றை பாலில் கொதிக்கவைத்து நெய் சேர்த்து செய்யப்படுகிறது. இந்த லேகியம்
சீந்தில் கொடி

நெல்லிமுள்ளி(காய்ந்த நெல்லித்தோல்)

*தாமரை குளத்து நீர் இரத்தக் கொதிப்பை தணிக்கும். கண் எரிச்சலை போக்கும். கண் எரிச்சலுடையவர்கள் காலை மாலை தாமரைக் குளத்து நீரை பருகி வரலாம்.

*தாமரையின் இதழ்களை நீரில் கொதிக்க வைத்து பனை வெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் சூடு தணியும். பித்தத்தைக் குறைக்கும்.

*காய்ச்சலுக்கும் இதனைக் கொடுத்து வந்தால் காய்ச்சல் படிப்படியாகக் குறையும்.
ஞாபக சக்தியைத் தூண்டும். மூளைக்கும், நரம்புகளுக்கும் புத்துணர்வூட்டும்.

*வயிற்றுப் புண்ணை ஆற்றும். சரும எரிச்சலைப் போக்கும்.
இதயத்தைப் பாதுகாக்கும். இதய தசைகளை வலுப்படுத்தும். இரத்த நாளங்களில் படிந்துள்ள கொழுப்புச்சத்தைக் குறைக்கும்.

*தாமரைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பனை வெல்லத்துடன் கலந்து பாகுபோல் காய்ச்சி சாப்பிட்டு வந்தால், இருமல், அதிக உதிரப் போக்கு போன்றவற்றிற்கு நிவாரணம் அளிக்கும்.

*வெண்தாமரைப் பூ மூளையின் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஞாபக சக்தியைத் தூண்டுகிறது. நரம்புகளுக்கு பலம் கொடுக்கிறது என சித்தர்கள் பலர் கூறியுள்ளனர்.

*தாமரைப் பூவின் மகரந்தப் பொடியுடன் தேன் சேர்த்து காலையில் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவுபெறும். காது கேளாமை நீங்கும். ஆண்மைத் தன்மை அதிகரிக்கும்.

*மருந்துகளால் சிலருக்கு ஒவ்வாமை உண்டானால் அது பலவகைகளில் பாதிப்பை உண்டுபண்ணும். அப்பாதிப்புகளைக் குறைக்க தாமரைப்பூவின் இதழ்களை நீரில் கொதிக்கவைத்து குடிநீராக தினமும் அரை டம்ளர் அளவு அருந்தி வந்தால் ஒவ்வாமையால் உண்டான பாதிப்பு குறையும்.

*தாமரை விதையை தேன் விட்டு அரைத்து நாக்கில் தடவினால், விக்கல், வாந்தி நிற்கும்.

மூளை வளர்ச்சி
உடல் ஆரோக்கியத்திற்கு வெண்தாமரைக்குடிநீர் மிகவும் ஏற்றது. மூன்று வாரங்களுக்கு தொடர்ந்து வெண்தாமரைப் பூ கஷாயம் குடித்து வர மூளை வளர்ச்சியடையும். இதயம் தொடர்புடைய எண்ணற்ற நோய்களை போக்க வெண்தாமரைப் பூ கஷாயம் ஏற்றது. தினம் மூன்று வேளை வெண்தாமரை பூ கஷாயம் சாப்பிட ஜன்னி நோய் குணமாகும்.
கண்பார்வை தெளிவு
வெண்தாமரைப்பூ,இலை,தண்டு, கிழங்கு ஆகியவற்றை தலா 100 கிராம் எடுத்து எடுத்து அதனை நன்றாக சாறுபிழிந்து முக்கால்கிலோ நல்லெண்ணையில் கலந்து அடுப்பில் கொதிக்கவைக்கவும். நன்றாக கொதித்த உடன் அதனை இறக்கி ஆறவைத்து காற்றுப்புகாத பாட்டிலில் அடைத்து வைக்கவும். தினமும் இதனை தலைக்கு தேய்த்து ஊறவைத்து குளித்துவர மங்கிய கண்பார்வை தெளிவுறும்.
உயர் ரத்த அழுத்தம்
வெண்தாமரைப்பூக்களைப் காயப்போட்டு பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். தினசரி 5 டீஸ்பூன் பொடியை ஒன்றரை டம்ளர் நீரில் போட்டு அடுப்பில் வைத்து சுண்டக் காய்ச்சவேண்டும். அதனை வடிகட்டி பால் சர்க்கரை சேர்த்து தினம் இரண்டு தடவை சாப்பிட உயர் ரத்த அழுத்தம் சீராகும்.
கூந்தல் தைலம்
தாமரைப்பூ ,அதிமதுரம்,நெல்லிக்காய், மருதாணிஇலை ஆகியவற்றை சமஅளவு எடுத்து பால்விட்டு அரைத்து உருட்டி எடுத்துக்கொள்ளவும். ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயை பாத்திரத்தில் விட்டு இந்த உருண்டையை அதில் போட்டு காய்ச்சி வடித்து எடுக்கவும். இந்த தைலத்தை தினமும் தலையில் பூசி வர இளநரை மறையும், கூந்தல் உதிர்வது நின்றுவிடும்.
இருதயநோய் போக்கும்
செந்தாமரை இதழ்களை எடுத்து வெயிலில் உலர்த்தி 300 கிராம் எடை எடுத்து ஒரு சட்டியில் போட்டு அதில் மூன்று லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் ஊற்றி மூடிவைத்து விடவும். இந்த கஷாயத்தை தினமும் அரை டம்ளர் அளவு எடுத்து அதில் ஒரு தேக்கரண்டியளவு தேன்விட்டு 21 குடித்து வர இருதய நோய் குணமடையும்.
இருமல் போக்கும் நீர்
தினமும் செந்தாமரை இதழை ஒரு கைப்பிடியளவு எடுத்து அதனை பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் நீர் விட்டு அதனை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் குடித்து வர வறட்டு இருமல் குணமடையும்.
தாமரை இலைகளை உலர வைத்துப் பொடியாக்கி, பாலில் கலந்து குடித்துவர ஞாபகசக்தி அதிகரிக்கும்.
வெண்தாமரை இதழ்களை நிழலில் உலர்த்தி ஒரு கிலோ அளவு எடுத்து 3 லிட்டர் நீரில் போட்டு ஒரு நாள் இரவு முழுவதும் ஊறப் போட்டு மறுநாள் அதை அடுப்பில் வைத்து 1 லிட்டர் அளவிற்கு சுண்டக் காய்ச்சி வடிகட்டி, சர்க்கரை 1 கிலோ கலந்து தேன் பதமாகக் காய்ச்சி வைத்துக்கொண்டு 15 மில்லி எடுத்து வெந்நீரில் கலந்து 2 வேளை குடித்து வந்தால் உடல் சூடு தனியும்.
தாமரைப் பூவின் மருத்துவப் பயன்களை நாமும் அறிந்து அதன் முழுப் பயனையும் பெற்று நீண்ட ஆரோக்கியம்பெறும்வோம்.