17.3.14

பால் வகைகளும் மருத்துவ குணங்களும்

பால்
milk



பால் வகைகள்:
 பசும் பால்
எருமைப் பால்.
  1. ஆட்டுப்பால்.
  2. குதிரைப்பால்.
  3. ஒட்டகத்தின் பால்.
  4. கழுதைப்பால்.
  5. பாத்திர வேறுபாட்டால் ஏற்படும் பால்.
  6. ஆடை எடுத்த பால்.
  7. தேங்காய் பால்.
  8. ஆலம்பால்.
  9. அத்திப்பால்.
  10. பேயத்திப்பால்.
  11. மட்டிப்பால்.
  12. சங்கன் முட்செடிப்பால்.
  13.  மரத்தின் பால்.
  14. கள்ளிப்பால்.
  15. எருக்கம் பால்.
  16. ஆமணக்கு பால்.
  17. பிரம்ம தண்டின் பால்.
  18. காய்ச்சும் பாலுக்கு நீர் அளவு.
  19. பாலேடு.
பசும் பால்:
  • பசுவின் பாலானது பாலருக்கும், விருத்தருக்கும், சுரமும், விரணம், சூலை பிரமேகம், துர்ப்பலம், அதிகஷ்கரோகம் ஆகியவைகள் உடையவர்களுக்கும் பயன்படும்.
பசும் பாலின் குணநலன்கள்:
  • பசும் பாலானது பித்த கோபத்தை தணிக்கும்.வாத தோஷத்தைக் குணப்படுத்தும்
  • கப ரோகத்தைத் தீர்க்கும்.திரிதோஷத்தை விலக்கும்.
  • கண்ணோய், ஷயம் மற்ற பால்களின் தோஷங்கள், ரத்த பித்த ரோகம் ஆகியவற்றைக் குணப்படுத்தும்.
  •  பசுவின் பால் பித்த ரோகத்தை நீக்கும். தனுஷ் தம்ப வாதம், சுக்கில தாது, கப நோய் ஆகியவற்றைக் குணப்படுத்தும்.
  • பசுவின் பால் நீடித்த சிலேஷ்ம நோயைக் குணப்படுத்தும்.
  • வாதாதி மூன்று தோஷங்களையும் அகற்றும். சரீர சுகமும், மகிழ்ச்சியும் உண்டாகும்.
  • பகலில் கறக்கும் பசுவின் பாலானது குழந்தைகளுக்கு ஏற்றது.  உட்சூட்டையும் வெப்பத்தையும் தணிக்கும்.ஆனாலும் பலவிதமான கபநோயையும், தாம்பூலம் புளிப்பு முதலியவை சேருமிடத்தை கெடுக்கும்.
  • பசுவில் சுரந்து இருக்கும் பாலை இரவில் கறக்கின்ற போது முறைப்படி காய்ச்சி அருந்தினால் தேக அழற்சி, கபரோகம், சுவாசம், பித்த கோபம், நேத்திர வியாதி, விந்துவின் கெடுதியால் அனுசரித்த சிற்சில ரோகங்கள் ஆகியவை நீங்கும். 

எருமைப்பால்:
  • திமிர் வாயுவை உண்டாக்கும். தெளிந்த புத்திக்கூர்மையையும், நல்ல மருந்தின் குணத்தையும் கெடுக்கும்.
ஆட்டுப்பால் இருவகைப்படும்:
  1. வெள்ளாட்டுப் பால்.
  2. செம்மறியாட்டுப் பால்.
வெள்ளாட்டுப் பால்:
  • வாதம், பித்தம், தொந்தம், சுவாசம், சீதாதிசாரம், கபதோஷம், விரணம், வாதத்தால் உண்டான வீக்கம் முதலான துன்பம் நீங்கும். நல்ல பசி உண்டாகும்.
செம்மறியாட்டுப் பால்:
  • வாத ரூபமான செம்மறியாட்டுப் பாலானது பித்த சிலேஷ்மம், தொந்தம், வயிற்றுப் பிசம், மேல் சுவாசம் முதலியவற்றை உண்டாக்கும். பத்தியத்துக்கு ஆகாது வாயுவை அதிகரிக்கும்.
குதிரைப்பால்:
  • சுக்கிலப் பெருக்கத்தையும், சரீர வனப்பையும், புணர்ச்சியில் நாட்டத்தையும் உண்டாக்கும்.
ஒட்டகத்தின் பால்:
  • அக்கினி மந்தம், வாத சூலை, எண் வகைக் கரப்பான், கர்ணநாத செவிடு, அதிக இருமல், இரைப்பு இவற்றை உண்டாக்கும்.
கழுதைப்பால்:
  • கழுதைப்பாலானது அதிக மதுரத்தையுடையது. இது வாத நோயை, கரைப்பான், புண், தழுதளை ரோகம் உள்விப்புரிதிக் கட்டி, ஒட்டுக் கிரந்தி, சீழ்ப்பிரமேகம், சொறி சிரங்கு, அற்புத விரணம், சித்தப் பி‌ரமை, பித்த தோஷம், கபநோய் இவற்றைப் போக்கும்.
பாத்திர வேறுபாட்டால் உண்டான பால்:
  • செம்புப் பாத்திரத்தில் காய்ச்சியப் பால் வாத சிலேஷ்மத்தைப் போக்கும். பொன் மண் பாத்திரங்களில் காய்ச்சிய பால் பித்த தோஷத்‌தைநீக்கும்.வெள்ளி வெண்கலம் இரும்புப் பாத்திரங்களில் காய்ச்சியப் பால் காச ரோகத்தைப் போக்கும்.
ஆடையெடுத்தப் பால்:
  • ஏடு நீக்கிய பாலால் அக்கினி மந்தமும் ஏழு தாதுக்களின் சீரணமும் உண்டாகும். வாத பித்த கப தோஷங்கள் நீங்கும்.
தேங்காய் பால்:
  • அதிக இனிப்பால் உணவை உள்ளே செலுத்துகின்ற தேங்காய் பாலால் வாத விகாரம், பித்தாதிக்கம், கரப்பான், சுக்கில விருத்தியும் ஆகும்.
ஆலம்பால்:
  • பிரமேகத்தை நீக்கும். ஆடுகின்ற பற்களை இறுக்கும். தலைக்கு குளிர்ச்சியையும், தாது புஷ்டியையும் தரும்.
அத்திப்பால்:
  • காரமும்,வெப்பமும் உள்ள அத்திப்பாலானது பித்தம், நீரழிவு, சூலை, ரத்த சிறுநீர்  இவற்றை நீக்கும்.
பேயத்திப்பால்:
  • கணையுடைய பேயத்திப்பால் பாதபேத ரோகம், மேகசொறி, குஷ்டரோகத் தடிப்பு, மூளை விரணம் இவற்றை விலக்கும்.
மட்டிப்பால்:
  • நறுமணமுள்ள மட்டிப் பாலினால் தலைவலி, ஜலதோஷம், யானைக்கால், கப வாந்தி ‌ஆகியவைப் போகும்.
சங்கன் முட்செடிப்பால்:
  • சங்கன் வேர்க்கட்டையை மெல்லியதாகச் சீவி அதிலிருந்து பிழிந்த பாலானது சோபையையும், நீரேற்றத்தையும், சுரவேகத்தையும் நீக்கும்.
புங்க மரப்பால்:
  • மெல்லியதாகச் சீவிப் பிழிந்த புங்கம் பால் விரணத்தை நீக்கும். தேகத்தில் பொன் ஒளி உண்டாகும்.
தில்லை மரப்பால்:
  • பஷபாத வாதம், சன்னிபாதம், சூலை, குஷ்டரோகம், முடவாதம், அரமகண்டன் முதலான ஐந்து வகை வலிகள், சில விஷங்கள் என்பது விதவாத ரோகங்கள் ‌ஆகியவை அகலும்.
திருகுக் கள்ளிப்பால்:
  • கஞ்ச வாதம், கிராந்தி, பெருநோய், சீதக்கட்டு, கிருமிரோகம், பக்கசூலை, கரப்பான் ஆகியவை நீங்கும்.
சதுரக் கள்ளிப்பால்:
  • வாதப்பிரமேகம், பெருவியாதி, கடி சூலை, வாதாதிக்கம், கிருமி நெளிகின்ற நுட்ட விரணம், கரப்பான் ஆகியவை விலகும். ஆறாத புண்கள், சதையிலுள்ள வரி கிரந்தி, தேக வறட்சி படை, பொரிக்கிரந்தி இவை நீங்கும். தோஷமற்ற மலமும் போகும்.
இலைக் கள்ளிப்பால்:
  • இதை முயல் செவிக் கள்ளி  என்றும் கூறுவர். இதனால் செங்கரப்பான், செவிநோய், வாதவிகாரம், சூலை விசர்ப்பக் கிரந்தி, உள்விரணம் இவை நீங்கும்.
கொடிக் கள்ளிப்பால்:
  • கரப்பான், சொறி சிரங்கு, பெரு விரணம், அக்கினி, கீடக்கடி, குஷ்டம், அடிக்கடி வலி்க்கும் குன்மம் ஆகியவை குணமாகும்.
எருக்கம் பால்:
  • வாதக் கட்டிகளை கரைப்பதோடு, வாதநோய், சன்னிப்பாதம், ஐவகை வலி இவற்றைப் போக்கும்.
வெள்ளெருக்கம் பால்:
  • சுளுக்கும், மகாவாதமும், ஐவகை வலியும், சன்னி பாதமும், எலி விஷமும், குளிர்சுரமும் தீரும்.
காட்டாமணக்கின் பால்:
  • சிறுநீரோடு விழுகின்ற மேகம், வெள்‌‌ளை, வயிற்று வலி, குறி விரணம், சருமக்கட்டி ஆகியவை நீங்கும்.
எலியாமணக்கின் பால்:
  • எலி விஷம், பீஜ வீக்கம், வண்டுக்கடி முதலான பற்பல விஷம், பீலிக நோய், வயிற்றுவலி ஆகியவற்றை நீக்குவதோடு அதிக விரோசனத்தை உண்டாக்கும்.
பிரம்மதண்டின் பால்:
  • கண் கூசுதல், கண் உறுத்தல், கண்ணீர் வடிதல், கண் வலி, கண் சிவப்பு குணப்படுத்த வல்லது.
காய்ச்சும் பாலுக்கு நீர் அளவு:
  • பசு, வெள்ளாடு இவற்றி்ன் பாலுக்கு எட்டில் ஒரு பங்கு தண்ணீர் அளவும் எருமை, செம்மறியாடு இவற்றின் பாலுக்குச் சரி பங்கு தண்ணீர் அளவும் ஊற்ற வேண்டும்.
வெள்ளாட்டுப் பாலுக்கு நிகர்:
  • எந்தவிதமான பால்களுக்கும் சுக்கு, சிறுகாஞ்சொறி வேர் சேர்த்துக் காய்ச்சினால் அவை வெள்ளாட்டுப் பாலுக்கு நிகராகும்.
பாலேடு:
  • பாலில் உண்டாகும் ஏட்டினால் மன அழுத்த வியாதியும், கொடிய வாந்தியும், மூர்ச்சையும் நீங்கும். மிகுந்த பலம், சுக்கிலம், ஜடராக்கினி விருத்தியாகும். பலவிதமான உடல் அமைப்பு உடையவர்களும் இவற்றை சாப்பிடலாம்.

No comments:

Post a Comment