14.9.17

கடுகு வகைகள்(mustard Category) வெண்கடுகு (White mustard) நாய்கடுகு(Cleome viscosa)

கடுகு வகைகள் > கடுகு,வெண்கடுகு,நாய்கடுகு
   

வெண்கடுகு,கடுகு 





நாய்கடுகு




                 வெண்கடுகு (White mustard)


வீக்கம் மற்றும் வலியை போக்க கூடியதும், கருப்பை கட்டிகளை கரைக்கவல்லதும், செரிமானத்தை தூண்டக் கூடியதும், இருமல், விக்கலை சரிசெய்ய கூடியதும், ரத்த ஓட்டத்துக்கு மருந்தாக பயன்படுவதுமான வெண்கடுகு பல மருத்துவ பலன்களை கொண்டது.

கடுகை போன்று பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது வெண்கடுகு. கடுகு வகையை சேர்ந்த இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். 

வெண்கடுகை பயன்படுத்தி கருப்பையில் ஏற்படும் கட்டிகளை கரைக்ககூடியதும், செரிமாணத்தை தூண்டும் மருந்து தயாரிக்கலாம். வெண் கடுகை வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். அரை ஸ்பூன் வெண்கடுகு பொடி, ஒரு சிட்டிகை மிளகு, சிறிது உப்பு, 2 சிட்டிகை பெருங்காய பொடி சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். 
இதை வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் 50 முதல் 100 மிலி வரை எடுத்துக்கொண்டால், இது செரிமானத்தை தூண்டும். கருப்பை கோளாறுகளை சரிசெய்யும். வெண்கடுகு உள் உறுப்புகளை தூண்டக் கூடியது. இரையறை கோளாறுகளை சரிசெய்யும் தன்மை உடையது. சிறுகுடலில் உள்ள மென் திசுக்களை தூண்டக் கூடியது. மாதவிலக்கு கோளாறுகளை சரிசெய்யும். கருப்பையில் உள்ள நீர்கட்டிகளை கரைத்து, கருப்பைக்கு பலம் தரக்கூடியது.

வெண் கடுகை பயன்படுத்தி கெண்டைக்கால் தசையில் வீக்கம், வாயுக்கான மருந்து தயாரிக்கலாம். 2 ஸ்பூன் விளக்கெண்ணெய்யில், ஒரு ஸ்பூன் வெண்கடுகு பொடியை வறுக்கவும். பின்னர், நீர்விட்டு கொதிக்க வைத்து, அரிசி மாவு சேர்த்து களி பதத்தில் தயாரிக்கவும். இந்த களியை மெல்லிய துணியில் தடவி வலி, வீக்கம் இருக்கும் இடத்தில் கட்டி வைக்க வேண்டும். இதனால் வலி, வீக்கம் சரியாகும். 

வெண்கடுகை பயன்படுத்தி விக்கலுக்கான மருந்து தயாரிக்கலாம். அரை டம்ளர் அளவுக்கு நீர் எடுத்து கொதிக்க வைக்கவும். தனியாக ஒரு பாத்திரத்தில் அரை ஸ்பூன் அளவுக்கு வெண்கடுகு பொடியை எடுத்துக்கொள்ளவும். இதில் வெந்நீரை ஊற்றி நன்றாக கலந்து 15 நிமிடம் வைத்திருந்தால் நீர் தெளிந்துவிடும். மேலே இருக்கும் தெளிந்த நீரை குடித்தால் விக்கல் சரியாகும்.விக்கலால் மது அருந்துபவர்கள், வயிற்று புண் இருப்பவர்கள் மிகவும் அவதிப்படுவார்கள். 

விக்கலை போக்க வெண்கடுகு மருந்தாகிறது. வெண்கடுகை பயன்படுத்தி இருமலுக்கான மருந்து தயாரிக்கலாம். கால் ஸ்பூன் வெண்கடுகு பொடியுடன் சிறிது தேன் சேர்த்து குழைத்து சாப்பிட இருமல் கட்டுப்படும். சுவாச பாதையில் ஏற்படும் அழற்சி, வீக்கத்தை குறைக்கும்.வெண்கடுகு, ஒரு வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வரும் வயிற்றுப்போக்கு, காய்ச்சல், இருமல், சளியை போக்கும். நுண்கிருமிகளை அழிக்கும் தன்மைகொண்டது. வலி நிவாரணியாகிறது. ரத்த ஓட்டத்தை சீர்படுத்தும் தன்மை கொண்டது.

வெண்கடுகு,நாய்க்கடுகு  இரண்டையும் சமஅளவு எடுத்து  தினமும் அல்லது வாரம் ஒருமுறை சாம்பிராணி போடுவது போன்று புகைக்க செய்தால் நோய்கிருமிகள் ,பூச்சிகள்,விஷபூச்சிகள்  எதுவும் வீட்டை அண்டாது.










நாய்கடுகு(Cleome viscosa)

வேறுபெயர்_நல்வேளை,தைவேளை,காட்டுக் கடுகு






முதல் பருவ மழைக்குப் பின்னர் இந்தத் தாவரத்தை அதிகமாகக் காணலாம். தைவேளை என்கிற மாற்றுப் பெயரும் இந்த தாவரத்திற்கு உண்டு.முழுத் தாவரமும் மருத்துவத்தில் பயன்படும். இலை, பூ, விதை, வேர் ஆகியவை அதிகமான மருத்துவப் பயன் கொண்டவை.

தாவரம் முழுவதும் ஒரு வித முக்கிய எண்ணெய் பரவிக் காணப்படுவதால் ஒரு விதமான மணமுள்ளதாகவும் பிசுபிசுப்பானதாகவும் இந்தச் செடி காணப்படும்.

ஓராண்டு வாழும் சிறுசெடிகள். நிமிர்ந்த வளரியல்பு கொண்டவை. தண்டில் நீண்ட வெண்மையான உரோமங்கள் காணப்படும். இவை இலேசாக ஒட்டும் தன்மை கொண்டவை. இலைகள் முட்டை வடிவமாகவும், ஐந்தாகக் கிளைத்தவை.

மருத்துவ பயன்கள்

காது வலி தீர இலைகளைக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 3 துளிகள் அளவு காதில் விட வேண்டும்

இருமல் தீர ஒரு பிடி நல்வேளை இலைகளை, தேவையான அளவு உப்புடன் சேர்த்து அரைத்து பசையாக்கி சாப்பிட வேண்டும்.

சீழ் கட்டிகள் உடைவதற்கு நல்வேளை இலையை அரைத்தோ அல்லது வதக்கியோ சீழ் கட்டிகள் மீது பற்றுப் போட வேண்டும்

குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல், மார்பு சளி குணமாக நல்வேளைப் பூக்களை சேகரித்து, கசக்கி, சாறு பிழிந்து ஒரு தேக்கரண்டி அளவு உள்ளுக்கு கொடுக்க வேண்டும்

குடல் தட்டைப் புழுக்களைக் கொல்ல நல்வேளை விதைகளை நெய் சேர்த்து வறுத்து, அரைத்து தூளாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறுவர்களுக்கு ½ கிராம் பெரியவர்களுக்கு 4 கிராம் என்கிற அளவில் காலை மாலை மூன்று நாள்கள் உள்ளுக்கு கொடுக்க வேண்டும். சிறிதளவு வெந்நீர் குடிக்கலாம். நான்காம் நாள் விளக்கெண்ணெய் (ஆமணக்கு எண்ணெய்)
½ தேக்கரண்டி அளவு உள்ளுக்குக் கொடுக்க பேதியாகி குடலின் தட்டைப் புழுக்கள் வெளியாகும்.

ஆமணக்கு எண்ணெய்


புண்கள் குணமாக 10 கிராம் இலைகளை 100 மிலி நெய்யில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு அதனைப் புண்களின் மீது பூச வேண்டும்.

No comments:

Post a Comment