30.3.20

பயறு green mung dal







காலை ஆரோக்கிய உணவு 
பயறு துவையல் 
150g (மூன்று சுறங்கை)11 உருண்டை 

பயறை ஒருபாத்திரத்தில் கழுவி போட்டு நீர் விட்டு ஒருநாள் வரை ஊறவிடவேண்டும் .
ஊறிய பயறை எடுத்து  கழுவி ஒருபாத்திரத்தில் போட்டு நீர் விட்டு சிறிதளவு உப்பு போட்டு அடுப்பில் வைத்து அவிய விடவேண்டும் (ஓரளவு நசியும் அளவு ).பின்னர் இறக்கி  நீரை வடித்து எடுக்கவும் .வடித்து எடுத்த பயறில் சிறிதளவு உப்பு ,சீனி அல்லது சக்கரை (வெல்லம் ) சிறிதளவு தேங்காய்பூ போட்டு மசித்து துவைக்கவும் .சிறு உருண்டைகளாக்கி சாப்பிடலாம் .

பயறு துவையல் 

7.2.20

நோய் எதிர்ப்பு சக்தி (தமிழர் பாரம்பரிய கலாச்சார ,சைவ உணவுப்பழக்கவழக்கங்கள்)

ஒவ்வொரு நாட்டுக்காரரும் அவர்களது உணவுப்பழக்கங்களுக்கு ஏற்ற நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டிருப்பார்கள் 


                                          immune system நோய் எதிர்ப்பு சக்தி


இயற்கையோடு ஒன்றிப்போனவர்கள் ,இயற்கையை போற்றியவர்கள் .
இயற்கையோடு சார்ந்த உணவுப்பழக்கவழக்கங்களை கட்டமைப்பை  உருவாக்கியவர்கள் .நம்முன்னோர்கள் .
சித்தர்கள் நமக்கான நோய்க்களுக்கான மருந்துகளை  மூலிகைகளிலிருந்து  கண்டுபிடித்து உருவாக்கினார்கள்.
அதை ஓலைசுவடிகளில் எழுதி வைத்தார்கள் .

தமிழர் பாரம்பரிய கலாச்சார  ,சைவ உணவுப்பழக்கவழக்கங்கள் என்றும் சிறந்தது .

#சூரிய வணக்கம் ,மூச்சுப்பயிற்சி ,உடற்பயிற்சி
#காய்கறி ,பழவகை ,கீரை வகைகள் ,தானிய வகைகள் ,பால்வகைகள் போன்ற    உணவுவகைகளை பெரும்பாலும்  நமது முன்னோர்கள் பின்பற்றினார்கள்
#மண்,செப்பு  பாத்திரங்களை பயன்படுத்தினார்கள் .
#உணவு உண்ண வாழை இலையை பயன்படுத்தினார்கள் .
#உணவுக்கேற்ப வேலை செய்தார்கள்
#தினமும் குளியல்.
# வாரம் ஒருமுறை தலைக்கு குளித்தல்
#எண்ணெய் குளியல்
#உறக்கம்

நமது சைவ உணவுப்பழக்கவழக்கங்கள்  என்றும் நமது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.

31.1.20

(மீள்பதிப்பு )மழைகால கசாயம்,மருத்துவகசாயம்

மருத்துவகசாயம் 
எந்த ஒரு வைரஸ் காச்சலோ , சாதரண காச்சலோ, சளியோ ,உடல் அசதியோ  உங்களை அண்டாது .
உங்கள்  உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்  .
வாரம் இருமுறை குடித்து வந்தால் போதும் .




மருத்துவகசாயம் 



தூதுவளை இலை 5   Solanum Trilobatum leaves 5
கற்பூரவள்ளி இலை 5 Mexican mint leaves 5
கொத்தமல்லி 25g          coriander seeds 25g
மிளகு 25g                           Black pepper  25g
600ml  நீர்                             Water 600ml
இவை அனைத்தும்  கழுவி  ஒரு பாத்திரத்தில்   போட்டு 600ml நீர் விட்டு 200ml ஆக வரும்வரை சுண்ட காச்சவும்  . பிறகு இறக்கி ஆறவைத்து குடிக்கவும் .

30.1.20

இயற்கையான காற்று வடிகட்டி Natural air filter (snake plant)

                                                                     snake plant




இயற்கையான காற்று வடிகட்டி Natural air filter
வீட்டினுள் ,படுக்கை அறையில் சாடியில் வைக்கலாம். 
வாரம் ஒருமுறை நீர் விட்டால்  போதும் 

நன்மைகள் 
காற்றிலுள்ள மாசுக்கள் நுண்கிருமிகளை உள்வாங்கி சுத்தமான ஒட்ஸிசனைO2 (பிராணவாயு ) வெளிவிடும் .

இரவில் காபனீர்ஓட்ஸைட்டைCO2 (கரியமிலவாயு ) உள்வாங்கி ஒட்ஸிசனை வெளிவிடும்.