15.6.14

ஆரோக்கியம் தரும் வீட்டு பொருட்கள்

200 மி.லி பாலில் 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் கலந்து காலை, மாலை 1 டம்ளர் சாப்பிட்டு வந்தால் இருமல் தீரும். நெல்லிக்காயை நீரில் போட்டு காய்ச்ச வேண்டும். பிறகு அதில் மஞ்சள் பொடி கலந்து காலை, மாலை சாப்பிட்டால் குடிப்பழக்கம் விரைவில் மறையும். தினமும் அகத்தி கீரையை சாப்பிட்டால் குடல் புண் குணமாகும். நெல்லி கனியை அதிகம் சாப்பிட்டால் ரத்தம் சுத்தமாகும்.
உத்தாமணி(வேலிப்பருத்தி)


வல்லாரை, உத்தாமணி(வேலிப்பருத்தி)இலை, மிளகு இவற்றை சமஅளவு எடுத்துக்கொண்டு அரைத்து குண்டுமணி அளவு மாத்திரையாய் செய்து காலை, மாலை 1 உருண்டையை வெந்நீரோடு சாப்பிடவேண்டும். இப்படி செய்தால் எவ்விதமான காய்ச்சலும் குணமாகும். அடிக்கடி மாம்பழத்தை சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி நீங்கும்.வெறும் வயிற்றில் இஞ்சி சாறில் தேன் கலந்து பருகினால் சோர்வு நீங்கும், மார்புச் சளி அகலும். எலுமிச்சம் பழச்சாற்றினை தேன் கலந்து குடித்தால், வறட்டு இருமல் குணமாகும்

நெல்லிக்காயை பற்களினால் நன்றாக மென்று சாப்பிட்டால் பற்களும், ஈறுகளும் உறுதியாகும். இஞ்சியை இடித்து சாறு எடுத்து அதனுடன் தேனை கலந்து தினமும் காலை, மாலை இருவேளை சாப்பிட்டால் ரத்த கொதிப்பு நோய் குணமாகும். சிறுநீரில் கல் அடைப்பு உள்ளவர்கள் பப்பாளிப்பழம் சாப்பிட்டால் கல் கரைந்து குணம் அடைவார்கள்.

துளசி இலையை கசக்கி முகத்தில் தேய்த்துக்கொண்டு இரவில் படுத்து காலையில் எழுந்து கழுவினால் முகம் அழகு பெறும். வல்லாரை 150 கிராம் 1 வசம்பு 15 கிராம் தூள் செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் ஞாபகசக்தி பெருகும்.  புதினா கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ டிகாக்ஷன் போல் செய்து சாப்பிட்டால் சளியால் வரும் காய்ச்சல் குணமாகும்.. 

No comments:

Post a Comment