குடம்புளி(கொருகாப்புளி)மரம்
இது மருத்துவப்புளி எனவும் அழைக்கப்படுகிறது. இதை
பழப்புளிக்குப்பதிலாக
கறிகளில் பயன்படுத்துவார்கள் இந்தபுளியை கறிகளில்
போட்டபின்னர் சிறிது
நேரம் கழித்து எடுத்துவிடவேண்டும் ஏனென்றால் இது
நேரம்செல்லசெல்ல புளிப்புதன்மையை கூட்டிக்கொண்டுருக்கும்.இதன் காயில் பலவகையான உடல்
மெலிவு மருந்துகள் தயாரிக்கப்படுகிறது.உ+ம்
இந்தபுளியை அன்றாடம் கறிகளில்
பயன்படுத்திவந்தால் ஆரோக்கியமான மெலிவான உடலை பெறமுடியும்.
பழப்புளியைவிடசிறந்தது குடம்புளி(கொருகாப்புளி)
வெட்டுக்காயத்தை போக்க
தேவையான அளவு கொருகாப்புளி இலையை அரைத்து வெட்டுகாயத்தில் கட்ட வெட்டுக்காயம்
குணமடையும்.
உடல்மெலிவதற்கு
கறிவேப்பிலை,கொருகாப்புளி,கறிமுருங்கையிலை,கருஞ்சீரகம்,உள்ளி இவையை சமஅளவு எடுத்து
உலர்த்தி இடித்து பொடியாக்கி வைத்துக்கொண்டு காலை மாலை 1 தே.க அளவு எடுத்து
வெந்நீருடன் பருகிவர உடல் எடைகுறையும்.
புளி வகைகள்
பழப்புளி,குடம்புளி(கொருகாப்புளி),கொடுக்காப்புளி,பட்டுப்புளி
பழப்புளி
கொடுக்காப்புளி
கொடுக்காப்புளி மரம்
பட்டுப்புளி
No comments:
Post a Comment