8.12.15

பொடுகைப் போக்க சில வழிமுறைகள் - அறிந்து கொள்வோம்

பொடுகைப் போக்க சில வழிமுறைகள் - அறிந்து கொள்வோம்


E-mailPrintPDF
மண்டை ஓட்டை போர்த்தியிருக்கும் தோலில் பொதுவாக புதிய தோற்கலங்கள் உற்பத்தியாக தோலின் வெளிப்படையாக அமைந்த இறந்த கலங்கள் தள்ளப்பட்டு அப்புறப்படுத்தப்படும். தோற்கலங்கள் புதுப்பித்தல் பல மடங்கு வேகத்தில் நடைபெறுமாயினின் அதிகளவு இறந்த கலங்கள் வெளித்தள்ளப்படும்.
இதுவே தலை சீவும் பொழுது ஆடைகளில் கொட்டிக்கிடக்கும். சில சமயங்களில் சொறியவும் நேரிடும்.  சில சமயங்களில் தலை மயிரில் மா தூவி விட்டது போன்று படிந்துமிருக்கும். எக்சிமா என்பது சொடுகு நோயின் தீவிரமடைந்த நிலையாகும். இது கண்புருவமி மூக்குஇ காது நெற்றி போன்ற இடங்களிலும் தோன்றக்கூடும்.  தோல் வியாதியும் சொடுகு போன்றே தலைத் தோலைப் பாதிக்கின்றது. இதன் பொழுது சிவப்பாகி சிறிது வீக்கமடைந்து வெள்ளி கலந்த வெள்ளைத் தகடுகள் போன்றிருக்கும். இது காது, முழங்கால் மூட்டு, முழங்கை போன்ற இடங்களிலும் தோன்றும்.
பெண்களைவிட ஆண்களையே இது அதிகம் பாதிக்கிறது. தலைத் தோலில் சிராய்வுகள் ஏற்படுத்தக் கூடிய  (கூரான, கடினமான சீப்பினால்ம்ம் ) சீப்பினால் சீவுதலாலும்,  நகத்தினால் சொறிவதனாலும்,  நுண்ணங்கிகளின் தாக்குதலினாலும் ஏற்படுவதாக  கருதப்படுகிறது.
பொடுகு ஏன் வருகிறது?
*   வரட்சியான சருமத்தினால் வரும்
*   அவசரமாக முழுகும்போது (தலைக்கு குளிப்பது) தலையை நன்றாக துடைப்பது கிடையாது. இதனால் தண்ணீர், சோ்பபு தண்ணீர் ஆகியன தலையில் தங்கிவிடும். இதனால் பொடுகு உற்பத்தியாகும்.
*   எப்பொழுதும் எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது, அழுக்கு தலையுடன் இருப்பது
*   ஒழுங்காக தினசரி குளிப்பதில்லை, இத்தகைய தலையில் வியர்வை உற்பத்தியாகி அந்த வியர்வை தண்ணி தலையில் தங்க நேரிடும். இதனாலும் பொடுகு வரும்
*   “பிடி ரோஸ்போரம் ஓவல்” என்ற நுண்ணியிர் கிருமியினாலும் பொடுகு வரலாம்.
*   எக்ஸீமா(Eczema), சொறாஸிஸ்(Psoriasis) போன்ற தோல் நொய்களாளும் பொடுகு வரலாம்
*   அதிகமாக சாம்பு பயன்படுத்தினாலும் பொடுகு வரலாம். கண்ட கண்ட (இரசாயன கலவைகளை)  செல்களை தலையில் தேய்ப்பதனாலும் இது வரலாம்.
*   மனஅழுத்தம், கவலையாலும் இது வரலாம்
பொடுகு வருவதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
*   ஒருவர் பயன்படுத்திய சீப்பு தலையணை துண்டு போண்றவற்றை அடுத்தவர் பயன்படுத்தக்கூடாது
*   தலையை எப்பொழுதும் சுத்தமாக வைத்ததிருக்க வேண்டும்
*   கொழுப்பு சத்துள்ள நெய், பால், வெண்ணெய் முதலிய உணவுகளை சேர்க்க வேண்டும். இதனால் தோலுக்கு தேவையான எண்ணெய் பசை கிடைக்கும். இதன் மூலம் பொடுகுக்கு காரணமான கிருமிகளிடமிருந்து நமது தலையை பாதுகாக்க முடியும்
பொடுகு தொல்லை நீங்க என்ன செய்யலாம்?
*   தலையில் புண் அல்லது வெட்டுகாயம் இல்லாமல் இருந்தால் செலெனியம் சல்ஃபைடு அல்லது ஜிங்க் பைரிதியோன் என்ற மருந்துள்ள சாம்புவை பயனபடுத்தி தலையை சுத்தம் செய்யலாம். இது பொடுகு பெருகுவதை தடுக்கும். புண் இருந்தால் இதை பயன்படுத்தக்கூடாது.
*   சாலிசிலிக் அமிலம் சல்பர் கலந்த சாம்புகளை பயன்படுத்தலாம்.“பிடிரோஸ்போரம் ஓவல்” என்ற நுண்னுயிர் கிருமியால் ஏற்படும் பொடுகு தொல்லைக்கு டாக்டரை பார்கவும்.
*   சின்ன வெங்காயம் கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்த்த பின்னர் 15நிமிஷம் கழித்து முழுகலாம்
பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிஷம் கழித்து முழுகலாம்.
*   தலையில் தயிர் தேய்த்து முழுகலாம்
*   வாரம் ஒரு முறையாவது நல்லண்ணை தேய்த்து முழுகலாம்.
*   பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து முழுகுவது பொடுகுக்கு மிகவும் நல்லது
*   வெந்தய பவுடரை தலையில் தேய்த்து முழுகினால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும்.
*   அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த்து நல்லா காய்ச்சி ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்
*   வேப்பிலைசாறும் துளசி சாறும் கலந்து தலையில் தேய்கலாம்
*   வசம்பு பவுடரை தேங்காய் எண்யெயில் ஊறவைத்து தேய்கலாம்
*   முழுகியபின்பு தலையை துடைக்காது கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து தலைக்கு பிரட்டி திரும்பவும் முழுகியபின் துடைக்கலாம்.
*   அரைத்த மருதாணி இலையையுடன் கொஞ்சம் தயிர், எழுமிச்சை சாறு கொஞ்சம் சேர்த்து தைலையில் பூசலாம்.
*   வேப்பிலை கொஞ்சமும் அதனுடன் கொஞ்சம் மிளகையும் சேர்த்து நல்லா அரைத்து தலையில் தேய்த்து 1மணி நேரம் ஊறவிட்டு பின்பு முழுகலாம்.
*   தேங்காய் எண்ணையுடன் வேப்பெண்ணையும் சேர்த்து காய்ச்சி தேய்த்து வந்தால் பொடுகு நீங்கும்.
*   நெல்லிமுள்ளி, வெந்தயம், சிறிது மிளகு இவற்றை ஊறவைத்து மைபோல அரைத்து தலையில் தடவி ஒரு மணிநேரம் ஊறிய பிறகு, நன்கு அலசினால் பொடுகு தொல்லை மறையும்.
*   நீலகிரி தைலத்தை சூடாக்கி தலையில் தடவி, வெந்நீரில் ஒரு பெரிய துவாயை நனைத்து தலையில் கட்டி விடுங்கள். பிறகு நன்கு அலசி விடவும்.
*   தேங்காய் எண்ணெயுடன் சிறிது கற்பூரத்தை போட்டு வைத்து, அந்த எண்ணெயை தொடர்ந்து தேய்த்து வந்தால் பொடுகு மறைந்துவிடும்.
*   பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறியபின் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.
*   ஆலிவ் எண்ணெயுடன் இஞ்சிச்சாறு சேர்த்து நன்றாக கலந்து தலைக்கு தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து ஊற வைத்து பிறகு முழுகி வந்தால் பொடுகு குறையும்.

No comments:

Post a Comment