4.9.17

எள்ளு(Sesamum) தலைமுடி வளர எள்எண்ணெய் (நல்லெண்ணெய்)

நவதானியங்களில் ஒன்றான எள்
இளைத்தவனுக்கு எள், கொழுத்தவனுக்கு கொள்ளு என்ற பழமொழிஉண்டு . 

நம் தமிழர் உணவுப் பழக்கத்தில் எள்  முக்கிய இடம் வகிக்கிறது. எளிய உணவு தானியங்களில் ஒன்றான எள் நமது உடலுக்கு நன்மை தரும் பல சத்துக்களை கொண்டுள்ளது. எள் நாவுக்குச் சுவை தருவதோடு உடலுக்கு மருந்தும் ஆகிறது.


எள்ளுசெடி




கோதுஉடைக்காதஎள்ளுவிதை



கோதுஉடைத்தஎள்ளுவிதை


கோதுஉடைக்காதஎள்ளுவிதை (கறுப்பு எள்ளு) மலத்தை இளக்கும் வல்லமை கொண்டது.

பெரும்பாலும் வெள்ளைஎள்ளு மருந்துகாகவும்உணவுக்காக பயன்படுத்தப்படுகிறது.

இது இந்தியா முழுவதும் பயிரிடப்படும் சிறிய செடி வகையாகும். இதற்கு திலம்(திலம் என்றால் எள். ராமர் தன் தந்தை தசரதருக்கும், சீதை எங்கிருக்கிறாள் என்று தனக்கு தெரிவித்த ஜடாயுவுக்கும் திலதர்ப்பணபுரி தலத்தில் எள்ளால் தர்ப்பணம் செய்ததால் இப்பெயர் வந்தது).

என்று மற்றொரு பெயர் உண்டு. இதன் தாவரவியல் பெயர் Sesamum . இதிலிருந்து பெறப்படும் எண்ணெய்தான் நல்லெண்ணெய். Sesaminமற்றும் sesamolin என்ற இரண்டு வேதிப் பொருட்கள் இருப்பதால் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை கொண்டது மேலும் இரத்த அழுத்தத்தை சீர்படுத்துகிறது.

எள்ளில் உள்ள கால்சியம் மிக அதிகம் உள்ளதால் எலும்புகள், பற்கள், நகங்கள் வலுவடைய இது உதவுகிறது. குறிப்பாக எலும்புகளின் அடர்த்தியை அதிகப்படுத்தும் தன்மை எள்ளில் உள்ள கால்சியத்திற்கு உண்டு. வளரும் குழந்தைகளின் ஆரோக்கியமும், மூளை வளர்ச்சியும் சீராக நடைபெற தரமான கால்சியச் சத்து போதுமான அளவு உடலுக்கு தேவை. இந்த கால்சியம் எள்ளில் இருப்பதால் தினமும் இதனை உபயோகப்படுத்தும் போது ஆரோக்கியம் மேம்படும். பெரியவர்களின் கால் மூட்டு தேய்மானம் கால்சிய சத்துக் குறைவால் ஏற்படுகிறது. இதற்கு எள் ஒரு சிறந்த மருந்து உணவுப் பொருளாக உபயோகமாகிறது.


எள்ளில் உள்ள சத்துக்கள்:

எள்ளில் அதிக அளவு காப்பர் சத்தும், கால்சியச் சத்தும் உள்ளது. மக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, வைட்டமின் ஈ, இரும்புச் சத்து, ஜீங்க் மற்றும் புரதச் சத்து உள்ளது என்று விஞ்ஞான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதனால் நாம் அடிக்கடி எள்ளை உட்கொள்வதினால் ஏற்படுத் நன்மைகளை காண்போம்.

சுவாச மண்டல ஆரோக்கியத்தை பராமரிக்கிறது
எலும்பு அடர்த்தியை பராமரிக்கிறது
எலும்பு தேய்மானம் ஏற்படாமல் தடுக்கிறது.
கொழுப்பின் அளவை குறைக்கிறது
இரத்தக் குழாய்களின் ஆரோக்கியம் பராமரிக்கப்படுகிறது.

எள்ளுருண்டை



எள்ளுப்பாகு


இத்தகைய நன்மைகளைக் கொண்ட எள்ளை நாம் ஏதாவது ஒரு பக்குவத்தில் உட்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

எள்ளும், வெல்லமும் சேர்த்து செய்யப்படும் எள்ளுருண்டை அல்லது எள்ளு மிட்டாய் அடிக்கடி உட்கொள்ளலாம்.

ஏள், வெல்லம், தேங்காய் சேர்த்து பூரணமாக கொண்டு நீராவியில் வேக வைக்கும் கொழுக்கட்டை அல்லது மோதகம் போன்றவற்றை உண்ணலாம்.

சாதத்தில் எள்ளை பொடி செய்து சேர்த்து உண்ணுதல்

எள், காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்து எள்ளு பொடியை இட்லி, தோசை போன்றவற்றிற்கு தொட்டு சாப்பிட உபயோகிக்கலாம்.

எள்ளின் மருத்துவ பயன்கள்:

வைட்டமின் பி1.,பி6,நியாசின், தையாமின், ஃபோலிக் அமிலம், ரிபோபிளேவின் போன்ற வைட்டமின்கள் எள்ளில் அபரிதமான அளவில் உள்ளது. 100 கிராம் எள்ளில் 97 µp ஃபோலிக் அமிலம் இருக்கிறது. இது நமக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு தேவையோ அதில் 25 சதவித தேவையை பூர்த்தி செய்கிறது.
ஒரு கப் பாலில் உள்ள கால்சியச் சத்து ஒரு கையளவு எள்ளில் உள்ளது. பால் சாப்பிட முடியாதவர்கள் எள்ளு மிட்டாய் சாப்பிட்டாலே தேவையான கால்சியம் உடலுக்கு கிடைத்து விடும்.

மூட்டு வலி உள்ளவர்களுக்கு வலியையும், வீக்கத்தையும் எள் குறைக்கிறது. எள்ளில் உள்ள செம்பு சத்து, கால்சியச் சத்து, மக்னீசியம் சத்து போன்றவை மூட்டுகளின் ஜவ்வுகளுக்கு தேவையான பலத்தை கொடுக்கிறது.
எள்ளில் உள்ள செம்புச்சத்து இரத்தக் குழாய்களின் சுருங்கி விரியும் தன்மை அதிகப்படுத்துகிறது. இதனால் இருதய சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது.

மாதவிடாய் வருவதற்கு முன் உடலில் ஏற்படும் மாற்றங்களான வயிறு உப்புசம், மார்பகங்களில் வலி, தலை வலி, உடல் கனத்து போதல் போன்றவை எள் சாப்பிடுவதால் குறைகிறது.

எள்ளில்  Phytpsterol  என்ற வேதிப்பொருள் அதிகம் உள்ளது. அதாவது 400 – 413 மி.கி அளவு 100 கிராம் எள்ளில் உள்ளது. இது மற்ற எந்த விதைகள் கொட்டைகளின் அளவை விட அதிகம். இவை இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க செய்கிறது. மேலும் பல விதமான புற்று நோய் வராமல் தடுப்பதற்கு உதவுகிறது.
அசைவ உணவில் உள்ளதைக் காட்டிலும் சைவ உணவில் இரும்புச் சத்து மற்றும் ஜிங்க் சத்து எள்ளில் அதிக அளவு கிடைக்கிறது.
100 கிராம் எள் 573 கலோரி சக்தியை கொடுக்கிறது. 100 கிராம் எள்ளில் 18 கிராம் புரதச் சத்து உள்ளது. குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான புரதச் சத்து அதிகம் உள்ளது.


எள் எண்ணெய்

(நல்லெண்ணெய்)

பாரம்பரிய முறைஎண்ணெய்செக்கு

தலைமுடி வளர
எள்ளேண்ணெய் தினமும் தலைமுடிக்கு தடவிவர நன்கு வளரும்.தலை சூட்டை தணிக்கும்.


வைட்டமின் மற்றும் தாது உப்புகள்
நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளதால் மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆக  செயல்படுகிறது. இது உடலில் கொழுப்பு சத்தை குறைத்து உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதை குறைக்கிறது. நல்லெண்ணெயில் உள்ள துத்தநாகம்,  எலும்புகளை பலப்படுத்துகிறது. தாமிரம், கால்சியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகள் உடல் நலத்திற்கு பயன்படுகிறது. மன அழுத்தத்தையும்  போக்குகிறது.

இனிப்பு, கசப்பு, காரம்
நல்லெண்ணெய் சற்று கசப்பும், சிறிது இனிப்பும், காரத் தன்மையும் கொண்டது. எளிதாக சருமத்துக்குள் ஊடுருவக்கூடியது.  ஆயுர்வேத மருத்துவத்தில் பல்வேறு நோய்களைப் போக்க நல்லெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. நல்லெண்ணெய் சருமத்தின் ஈரப்பதத்தைச்  சமப்படுத்துகிறது. அதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழ உதவுகிறது.

வாரத்திற்கு ஒருமுறையாவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் உடல் சூடு குறையும். தலைமுடி வறட்சி நீங்கும். பொடுகு முற்றிலும்  நீங்கும். நல்லெண்ணெய் புத்திக்கு தெளிவு, கண்ணுக்கு குளிர்ச்சி, உடல் பூரிப்பு, வலிமை ஆகியவற்றை தருகிறது. கண் நோய், தலைக் கொதிப்பு,  சொரி, சிரங்கு, புண் முதலியவற்றை தணிக்கிறது.


கண்நோய்கள் நீங்கும்
நல்லெண்ணெயை தினமும் 2 இல்லது 3 தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் உடல் பூரிக்கும். கோழி முட்டையின் வெள்ளைக்  கருவுடன் நல்லெண்ணெய் கலந்து பருக்களின் மேல் பூசி வந்தால் கட்டிகளின் வலி நீங்கும். நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வந்தால், கண் சிவப்பு,  கண் வலி, கண்ணில் நீர் வடிதல் மண்டைக் குத்தல் போன்றவை நீங்கும் என்று பாரம்பரிய மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ஆயில் புல்லிங்

உடலை மசாஜ் செய்வதில் நல்லெண்ணெயின் பங்கு முக்கியமானது. உடலுக்கு குளிர்ச்சியும் உள்ளத்திற்கு புத்துணர்வும் தருவதில்  நல்லெண்ணெய்க்கு ஈடு இணையில்லை. சூரிய ஒளிக்கதிரினால் ஏற்படும் கொப்புளங்களைப் போக்குவதில் நல்லெண்ணெய் மருந்தாக செயல்படுகிறது.  பாக்டீரியாகொல்லி, நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. பாதங்களில் ஏற்படும் பூஞ்சை நோய்களை போக்க வெண்ணீரில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி  பாதத்தை கழுவினால் நோய் தீரும். ஆயுர்வேதத்தில் ஆயில்புல்லிங் எனப்படும் மருத்துவமுறை உடலை உற்சாகமாக்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது.  ஒரு கரண்டி எண்ணெயை சிறிதளவு வாயில் ஊற்றி நன்றாக நுரை வர கொப்பளித்து துப்பினால் பற்களும் ஈறும் பலப்படும்.

No comments:

Post a Comment