மருத்துவப்
பயன்கள் –: வெள்ளறுகானது
மலத்தை இளக்கி, வெப்பத்தை அகற்றி,பசியைத் தூண்டி, உடலை உரமாக்கும் .இது காச்சல், வாதம்,தோல்வியாதி, வயிற்று உப்புசம், பாம்புக்கடி, அஜீரணம், மற்றம் தொழுநோய் ஆகிய நோய்களைக் குணப்படுத்த வல்லது. இதில் இரும்பு சத்து, பொட்டாசியம், சோடியம், கால்சியம், மெகனீசியம், சிலிக்கா,பாஸ்பேட். குளோரைடு, சல்பேட் மற்றும் கார்பனேட் உள்ளது.
வெள்ளறுகை அரைத்து கால் ஆணிகட்டின் மீது வைத்து பத்துபோல்
கட்டிவர குணமடையும்.
வெள்ளறுகை அரைத்து கால் ஆணிகட்டின் மீது வைத்து பத்துபோல்
கட்டிவர குணமடையும்.
வெள்ளறுகு
செடியை வேருடன் எடுத்து சுத்தமாகக்கழுவி இடித்து சாறு பிழிந்து 20 மி.லி.. முதல் 30 மி,லி. வரை பாம்பு கடித்திருப்பவர்களுக்கு உள்ளே கொடுத்துவர வாந்தி பேதியாகிநச்சு இறங்கும். அல்லது கடிவாயில் செடியின் சக்கையை அரைத்து வைத்துக்கட்டநச்சு முறியும்.
வெள்ளறுகு
செடியை தேவையான அளவு எடுத்து வெந்நீர் விட்டு அரைத்துகாலையில் சொறி, தவளைச்சொறி சிரங்கு, மேகத்தடிப்பு உள்ளவர்கள் பூசி, ஒரு மணி நேரம் சென்ற பின்னர் பேய்பீர்க்கங்காய்
கூட்டால் உடலைத் தேய்த்துக் குளித்து வந்தால் அவை குணமாகும்.
வெள்ளறுகு
செடியை எடுத்து சுத்தம் செய்து நன்றாக இடித்து அதனுடன் பத்து மிளகு, ஒரு துண்டு சுக்கு, நான்கு சிட்டிகை சீரகம் ஆகியவைகளைத் தட்டி மண் சட்டியில் போட்டு, எண்ணூறு மி.லி. நீர்விட்டு
அதனை இருநூறு மி.லி.யாக வற்றும் வரை நன்கு காச்சி வடிகட்டி காலை, மாலை
இரண்டு வேளை நூறு மி.லி வீதம் அருந்தி வர கீள்வாதம், நரம்புக் கோளாறுகள் முதலியவை கட்டுப்படும். வெள்ளறுகுவை அரைத்து சிறு சிரங்குகளுக்கும் பூசி வரலாம்.
தேவையான வெள்ளறுகை வெண்மிளகுடன்சேர்த்து அரைத்து நீரில் கலந்து வடிகட்டி கொஞ்சம் பசுவின் வெண்ணெய் சேர்த்து அருந்தி வரஉடல் சூடு தணியும்.
No comments:
Post a Comment