நாம் அவ்வளவாகக் கண்டுகொள்ளாத எருக்கஞ்செடியில் பலவகையான மருத்துவகுணங்கள் உள்ளது. இதில் இரண்டு வகை உள்ளது (நீலஎருக்கு,வெள்ளெருக்கு) நீலஎருக்கு நீலநிறபூவை கொண்டு காணப்படும் வெள்ளெருக்கு வெள்ளை நிறபூவை கொண்டுகாணப்படும். இதில்வெள்ளெருக்கு அரியவகை ஆகும் .
குறிப்பாக வெள்ளை எருக்கன் செடிக்கு விசேஷ மருத்துவக் குணங்கள் இருக்கின்றன.
* எருக்கின் இலை, பூ, வேர், பால் அனைத்தும் சிறப்பான மருத்துவ குணங்கள் நிறைந்தவை. எருக்கம் இலையை வதக்கிக் கட்ட கட்டிகள் பழுத்து உடையும். செங்கல்லைப் பழுக்கக் காய்ச்சி அதன் மீது எருக்கின் பழுத்த இலையை வரிசையாக அடுக்கிக் குதிகாலால் அழுத்தி மிதித்து வர குதிகால் வாயு நீங்கும்.
* இலைகளைக் காய வைத்து எரித்து, அதிலிருந்து வரும் புகையை மூக்கினுள் இழுக்கஆஸ்துமா இருமல் போன்ற உபாதைகள் குறைந்து விடும்.
* எருக்கு இலைகளை மூட்டை கட்டி சூடாக்கி வெதுவெதுப்பாக நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் ஒத்தடம் கொடுத்தால் அங்கு ஏற்படும் வலி குறைந்துவிடும்.
* காய்ந்த இலைகளைப் பொடித்து தூள் ஆக்கி புண்கள் மீது தூவ அவை விரைவில் ஆறி விடும். எருக்கம் இலைச்சாற்றை மஞ்சள் தூளுடன் கலந்து கடுகு எண்ணெயில் வேக வைத்து தோலில் ஏற்படும் படை, சொறி, சிரங்குகளில் பூசி வர விரைவில் குணமாகும்.
* எருக்கம் வேரின் தோலை சிவப்பு அரிசி வடித்த கஞ்சியுடன் அரைத்து யானைக்கால் நோய்க்கு பற்றிடலாம்.
* தேள் கடித்த இடத்தில் எருக்கின் பாலைத் தடவி வர விஷத்தின் தீவிரம் உடனே குறையும். பொதுவான விஷக்கடிகளுக்கும் இதுபோல பயன்படுத்தலாம்.
*எருக்குஇலைகளை நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டிய எண்ணெயை மூட்டு வலி, மூட்டு வாதம், இடுப்பு வலி, தொண்டை நரம்பு வலி ஆகியவற்றுக்கு வலியுள்ள பாகத்தில் பூசினால் குணமாகும்.
*சிலருக்கு முகம் அழகாக இருக்கும். ஆனால், பல் அசிங்கமாக இருக்கும். முத்துப் போன்ற பற்களில் மஞ்சள்நிறக் கறைகள் படிந்து முகத்தின் அழகையே கெடுத்துவிடும். இதைப் போக்கி பற்களை பளபளப்பாக்கிட எருக்கு இலைகளை நிழலில் உலர வைத்து அத்துடன் மிளகு சம அளவில் சேர்த்து, அரைத்து பவுடராக்கிக் கொள்ள வேண்டும். இதைப் பல் பொடியாக, பல்லில் தேய்த்தால் கறைகள் நீங்கும்.
*எருக்கு இலைகளை நல்லெண்ணெயில் கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக்கொள்வார்கள். பக்கவாதம் நீங்கிட இதைத் தடவி மசாஜ் செய்வார்கள்.
எருக்கு வாததைலம்
தேவையானபொருள்>200ML நல்லேண்நெய் >துரிதமாக தோலில் ஊடுருவும் தன்மை கொண்டது.
>10எருக்கு இலை வலியை குணப்படுத்தும்
>20 எருக்கு பூ>இது நரம்புகளுக்கு புத்துணர்ச்சிகொடுக்கும் தன்மை கொண்டது.
செய்முறை
எருக்கு இலையை,பூவை
சிறுதுண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.பின்னர் சட்டியில் நல்லேண்னையை கொதிக்கவிடவும் நன்கு கொதித்தவுடன் அதில் இலை,பூவை போட்டுகாய்ச்சவும். இலை,பூவின்
சாறு எண்ணெயில் இறங்கும் வரை எண்ணெய் மெல்லியபச்சைநிறமாக வரும்வரை காய்ச்சவும்.
பின்னர் இறக்கி ஆறவிட்டு வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
இந்த தைலம் முடக்குவாதம்,பக்கவாதம்,கை,கால்வலி, மூட்டுவலியை முற்றுமாக
குணப்படுத்தும். முடக்குவாதத்தை முற்றுமாக குணப்படுத்தும் வல்லமை கொண்டது.
No comments:
Post a Comment