தேவையான பொருள்கள்:
நெல்லிமுள்ளி = 1 கப்
மிளகாய் வற்றல்(காய்ந்தமிளகாய்) = 2
மிளகு= அரை ஸ்பூன்
சீரகம் = அரை ஸ்பூன்
பூண்டு = 4 பல்
இஞ்சி = புளியங்கொட்டை அளவு
பெருங்காயம் = சிறிது
தனியா( கொத்தமல்லி)= 1 ஸ்பூன்
புளி = சிறிதளவு
கடுகு = அரை ஸ்பூன்
எண்ணெய் = தேவையான அளவு
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
நெல்லிமுள்ளியை முதல் நாளே 2 கப் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள்
அந்த தண்ணீரை வடிகட்டி அதில் புளியைக் கரைத்துக் கொள்ள வேண்டும்.
மிக்ஸியில் பெருங்காயம், இஞ்சி, பூண்டு,
மிளகு, மிளகாய் வற்றல், தனியா, சீரகம் சேர்த்து கரகரப்பாக அரைத்துச் சேர்க்கவும்.
உப்பு தேவையான அளவு சேர்த்து 4 கப்
தண்ணீர் விட்டு அடுப்பில் கொதிக்க விடவும். கொதித்து வரும் போது தேவையான அளவு
எண்ணெய் எடுத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
சுவையான நெல்லிமுள்ளி ரசம் தயார். நெல்லிக்காய் மிகவும்
குளிர்ச்சியைக் கொடுக்கும்.
மருத்துவ குணங்கள்:
நெல்லியில் வைட்டமின் C மற்றும் வைட்டமின் B ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. வயிற்றுப்போக்கு, நீரிழிவு
போன்றவற்றைக் குறைக்கும்.
பித்தத்தை குறைக்கும்.
கண் பார்வையை தெளிவாக்கும். இரத்தத்தைதூய்மையாக்கும். மூலம், மலச்சிக்கல், வாய்வு, இருமல், சளி, வாந்தி, மஞ்சள்
காமாலை மற்றும் தோல் சம்பந்தப்பட்ட நோய்களை குறைக்கும்
No comments:
Post a Comment