27.4.16

உடல்குளிர்ச்சி பெற றோசாப்பூ மணப்பாகு





200கிராம் உலந்த றோசாப்பூ இதள்களை 800 மி.லீ வெந்நீரில் போட்டு ஒருநாள் ஊறவைத்து வடிகட்டி 400 மி.லீ ஆக வற்றக்காய்ச்சி 20மி.லீ பன்நீரும் 400கிராம் கற்கண்டு கலந்து தேன்பதமாகக் காய்ச்சி இறக்கி ஆறவைத்து கண்ணாடிப் போத்தலில் பத்திரப்படுத்தி .தினமும் 10 மி.லீ பாகில் 20 மி.லீ நீர்கலந்து காலை மாலை பருகிவர நீர்க்கட்டு ,மலக்கட்டு,மூலச்சூடு நீங்கி உடல்குளிர்ச்சிபெறும்.

21.4.16

TRICODESMA INDICUS கவிழ் தும்பை










50 கிராம் சமூலத்தை(பூ,இலை,வேர்,தண்டு) சிதைத்து 1லீட்டர் நீரிலிட்டு 250மி.லீ ஆகுமாறு காய்ச்சி வடிகட்டி காலை மாலை 125 மி.லீ குடித்து வர சீதபேதி,மூட்டுவலி,,பால்வினை நோயால் ஏற்ப்படும் கட்டிகள் ஆகியவை குணமாகும்

17.4.16

சிவனார் வேம்பு Indigofera aspalathoides

வேறு பெயர்கள் -: அன்றெரித்தான் பூண்டு, குறைவின் வேம்பு போன்றவை.

சிவனார் வேம்பு என்னும் மூலிகைச் செடி ஒரு வருடாந்திர வளர்ச்சிச் செடி. இதில்  750 வகைகள் உள்ளன. அவை வளர்வதிலும், பூக்களிலும் வேறு பாடு உள்ளன.  இதன் இலைகள் சிறிதாகவும் முட்டை வடிவிலும் இருக்கும்.  பூக்கள் சிவப்பு நிறத்திலு இருக்கும். கொத்தான காய்களையும், சிவப்பு நிற தண்டினையும் உடைய மிக சிறு செடி. இது செம்மண் நிலத்தில் நன்கு வளரும். தமிழகமெங்கும் காணப்படும். செடி பிடுங்கிய உடனே உலர்ந்தது போல எரியும் தன்மையுடையதாகையால் அன்றெரித்தான் பூண்டு என நாட்டுப் புறத்தில் குறிப்பிடுவதுண்டு. இது விதை மூலம் இன விருத்தி செய்யப் படுகிறது.

சிவனார் வேம்பின் மருத்துவப் பயன்கள் - இது தாது எரிச்சல் தணித்தல், வீக்கம், கட்டிகளைக் கரைத்தல், நஞ்சு முறித்தல் குடல்புண் குணமாக்குதல் ஆகியவை குணமாக்க வல்லது. 

செடியை வேருடன் உலர்த்திப் பொடித்துச் சமன் கற்கண்டுத் தூள் கலந்து ஒரு தெக்கரண்டிப் பாலில் சாப்பிட்டு வர ஆயுளை நீட்டிப்பதோடு தொழு நோய் போன்ற கடும் நோய்களையும் குணப்படுத்தும்.

செடியைச் சுட்டுச் சாம்பலாக்கித் தேங்காயெண்ணையில் குழைத்துத் தடவி வரச் சொறி, சிரங்கு, கபாலக் கரப்பான் ஆகியவை தீரும்.
இலையை அரைத்துப் பற்றிடக் கட்டிகள் உடைத்துக் கொள்ளும் அல்லது அமுக்கி விடும்.
இதன் வேரால் பல் துலக்கவோ மென்று துப்பவோ செய்தால் வாய்புண், பல் வலி ஆகியவை தீரும்.


இதன் சமூலத்தை வெண்ணெய் கூட்டி மெழுகுபோல் அரைத்து நீர்
 சம்பந்தமான புரைக்குழலுக்கு (கிரந்தி கட்டுக்குமேற்றடவி வரக்கரைந்துபோம்.
இதைச் சுட்டுச் சாம்பலாக்கித் தேங்காய் எண்ணெயிற் குழைத்துத் தலையில்
 உள்ள சிரங்குகளுக்குத் தடவ ஆறும்.







16.4.16

பெருமருந்து Aristolochia indica

Aristolochia indica பெருமருந்து
leaf Antidote for snake-bite


நீண்ட மாற்றடுகில் அமைந்த இலைகளையும் பச்சை வெள்ளை சுழல் வடிவ பூக்களையும் கொண்டது.ஏறு கொடிவகை.மிகவும் கசப்பு சுவையுடையது .
 வேறுபெயர்கள்.ஈஸ்வரமூலி, தலைச்சுருளி

இதன் இலை வேர் ஆகியவை மருத்துவப்பயனுடையவை.
இதன் வேரை தேனில் அரைத்து 1கிராம் உள்ளுக்கு கொடுத்துவர வெண்குட்டம்,சோகை தீரும்.


பாம்புக்கடி,தேள்கடி போன்ற விசக்கடிகளுக்கு கடிவாயிலில் இதன் இலை சாறை விட விஷம் முறியும்




15.4.16

மணலிக்கீரை (gisekia pharnaceoides)

மணலிக்கீரை:
  • மணலிக்கீரையின் இலை, தண்டு, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக்குணம் வாய்ந்தது.
மலச்சிக்கல் குணமாக:
  • மணலிக்கீரையை பாசிபருப்புடன் சேர்த்து கூட்டு தயார் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.
ஞாபக சக்தி பெருக:
  • ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் பித்த அதிகரிப்பே காரணம் ஆகும். மேலும் மூளைக்குத் தேவையான சத்து குறைவதாலும் இப்பிரச்சனை ஏற்படுகிறது. இப்பிரச்சனை தீருவதற்கு மணலிக்கீரை‌யை மசியல் செய்து சாப்பிட வேண்டும்.
குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் குறைய:
  • மணலிக்கீரையின் வேர், இலைகளை நீர் விட்டு  நன்கு அரைத்து அதில் 70 கிராம் அளவு எடுத்து நீரில் கலக்கி அதிகாலையில் வெறும் வயிற்றில் பருகினால் குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் குறையும். மார்புசளி வயிற்றுப்புண் குணமாகும்.
மூளை நரம்புகள் பலம்பெற:
  • மணலிக்‌கீரை வதக்கி சாப்பிட்டால்  மூளை நரம்புகள் பலப்படும்.
ஈரல் பலம்பெற:
  • மணலிக்கீரையை கஷாயம் செய்து குடித்தால் ஈரல் பலப்படும்.






14.4.16

முத்தக்காசு(Cyperus rotundus)


முத்தக்காசு
தட்டையான இலையுடைய கோரை இன சிறுபுல் ,முட்டைவடிவ சிறுகிழங்குகளை கொண்டிருக்கும்.இதில் கிழங்குகளே மருத்துவபயன் கொண்டவை.திசுக்களை இறுகச்செய்தல்,உடல் மனம் ஊக்கியாக செயல்படுத்தல்,உடலுரமாக்கல்,சிறுநீர்,வியர்வை பெருக்கல்,மாதவிலக்குத் தூண்டுதல்,வெப்புத்தணித்தல்(உடல்சூடுதணிதல்) குடலைப்பலமாக்கும் ,நுண்புழுக்களை கொல்லும்,சிறுநீரக கல்கரைத்தல் ஆகிய மருத்துவப் பண்புகளுடையது.


1கிராம் கிழங்குப் பொடியை காலை மாலை தேனில் கலந்து உட்கொள்ள புத்திக்கூர்மை,தாதுப்பெருக்கம்,பசியை தூண்டும், உடற்பொலிவு ஆகியன உண்டாகும்.

பல்வலிக்கு பச்சைகிழங்கை அரைத்து தாடையில் பற்றுப்போட பல்வலி குணமடையும்.





13.4.16

கிணற்றுப்பாசான் ( TRIDAX PROCUMBENS.)

:கிணற்றுப்பாசான்

மருந்தாகும்பாகங்கள்  இலைகள், செடிமுழுதும்.

வேறுபெயர்கள்  கிணற்றுப்பாசான்,வெட்டுக்காயபச்சிலை, செருப்படித்தழை,மூக்குத்ததிப்பூண்டு, காயப்பச்சில்லை முதலியன.


வளரியல்பு- கிணற்றடிப்பூண்டு எல்லாவித வளமான மண்ணில் வளரும் ஒரு சிறு செடி. 
இதன் தாயகம் மத்திய அமரிக்கா.பற்களுள்ள சற்று நீண்ட தடிப்பான
சொரசொரப்பான பச்சை இலைகளையும், மஞ்சள் நிறப் பூக்களையும் உடைய சிறு செடி .ஈரமான இடங்களில் தானே
வளரும் தன்மையுடையது .இலையின் நீளம் 3-6 1.5-3செ.மீ.தண்டு 5 -10  எம்.எம்.நீளம், பூவின்விட்டம் 1.3  1.5செ.மீ. பூவின் இதழ்கள் 5.நடுவில் வெண்மையாகஇருக்கும். இது தன்மகரந்தச் சேர்க்கையால்
விதை உண்டாகும். ஒரு செடியில் 1500 விதைகள் இருக்கும் அவை காற்றில் பரவி ஒட்டிக் கொள்ளும்.
இது சாலை யோரங்களில், தரிசு நிலங்களில்,தோட்டங்கள், புல்வெளிகள் எங்கும்  பரவி வளரும்.சீதோஸ்ண, மிதசீதோஸ்ண வெப்பத்தில் வளரக்கூடியது.உலகெங்கும்பரவியுள்ளது.
லேசான பஞ்சுபோன்ற விதைகள் மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது.

மருத்துவப்பயன்கள்  இது புண்ணாற்றும், ,குறுதியடக்கி, கபநிவாரணி.மூச்சுக்குழாய்ச்சிரை, மூக்கடைப்பு, தடுமல், நீர்கோப்பு,வயிற்றுப்போக்கு, பேதிமுதலியவை குணமாகும்.


இலையை நீர்விடாது அரைத்து வெட்டுக்காயம்,சிராய்ப்பு ஆகியவிற்றில் பற்றிடச் சீழ் பிடிக்காமல் விரைந்து ஆறும்.


கிணற்றுப்பூண்டின் இலைச்சாறும்,   குப்பைமேனி இலைச்சாறும் மருத்துவரின் அலோசனைப்படி கலந்து குடித்தால் நஞ்சு முறிவு ஏற்படும் .மேலும் வயிற்றுக் கோளாருகள் தீரும்