பிரணாயாமம் என்னும் மூச்சுப் பயிற்சி செய்யும்
போது உடலுக்கு அதிக சக்தி கிடைக்கிறது. மனம் அமைதி பெறுகிறது. மன அழுத்தம்
குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. தினசரி பிராணாயாமம் செய்பவர்களுக்கு நோய் வந்தால் அது தானாகவே எளிதாக குணமடைந்து விடும்.
பிரணாயாமம் செய்வது எப்படி? கபாலபதி
என்னும் மூச்சுப் பயிற்சி செய்யும்போது அதிக அளவு ஆக்ஸிஜன் உடலுக்குக்
கிடைக்கிறது. மேலும் உடலிலுள்ள நச்சுப் பொருட்கள் அதிக அளவில் நீங்கி விடுகின்றன.
முதலில் கபாலபதி எப்படி செய்வது என்றுபார்ப்போம். நேராக
முதுகு வளையாமல் உட்கார்ந்து கொள்ளுங்கள். மூச்சுக் காற்றை சாதரணமாக உள்ளே
இழுங்கள். அதை வேகமாக வெளியே தள்ளுங்கள். அப்படி செய்யும்போது உங்கள் அடி வயிறு
உள்ளே செல்லும். அது தான் நீங்கள் சரியாக செய்கிறீர்கள் என்பதற்கு சாட்சி. இதை
சுமார் 20 முறை செய்யுங்கள்.
நாடி சுத்தி பிரணாயாமம் செய்வது எப்படி? வலதுக்கை கட்டை விரலால் வலது மூக்குத் துவாரத்தை அடைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது இடது துவாரத்தின் மூலமாக காற்றை உள் இழுங்கள்.
இப்பொழுது உங்கள் வலதுக் கை மோதிர விரலால் இடது துவாரத்தை அடைத்துக் கொண்டு வலது
துவாரத்தின் வழியாக காற்றை சற்று மெதுவாக வெளி விடுங்கள். இப்பொழுது வலது
துவாரத்தின் மூலமாக காற்றை உள் இழுத்து மீண்டும் இடது துவாரத்தின் வழியாக மெதுவாக
காற்றை வெளி விடுங்கள். இது ஒரு சுற்று ஆகும். இது போல் நீங்கள் 10 முதல் 20
சுற்றுகள் வரை செய்யலாம்.
பிரணாயாமம் செய்த பின் தியானம் செய்தால் எளிதாக மனம் தியானத்தில்
லயிக்கும். தியானமும் செய்தால் பலன்கள் ரெட்டிப்பாகும்.
மூச்சுப்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
👌 நம் உடலில் உள்ள ஏழு சக்கரங்களைத் தூண்டச் செய்து சக்கரங்கள் நன்றாக செயல்பட உதவுகிறது.
👌 உடலில் ஏற்பட்டுள்ள நோய்களை குணமாக்கும் சக்தி மூச்சுப் பயிற்சிக்கு உண்டு.
👌 மூச்சுப் பயிற்சி செய்வதால் சகஸ்ரார சக்கரம் தூண்டப்பட்டு, உடலை சுறுசுறுப்புடன் வைத்திருக்க உதவுகிறது.
👌 மூச்சுப் பயிற்சி செய்வதால் நினைவாற்றல் பெருகும்
.
👌 மூச்சுப் பயிற்சி செய்வதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகும்.
👌 தினமும் மூச்சுப் பயிற்சி செய்து வர உடலுக்குள் கிருமிகள் நுழைவதைத் தடுத்து நிறுத்தும்.
👌 தினமும் மூச்சுப் பயிற்சி செய்வதால் உடல் எப்போதும் ஆரோக்கியமாகவும், புத்துணர்வுடனும் இருக்கும்.
👌 பதட்டம் ஏற்படாமல் இருக்க மூச்சுப்பயிற்சி மிகவும் பயன்படுகிறது.