3.8.16

துளசி வகைகள்(Basil Categories) ,இலவங்கப்பட்டைதுளசி (திருநீற்றுப்பச்சை),Cinnamon basil ,thai basil

துளசி வகைகள் 
Basil Categories

1.African blue basil (Ocimum basilicum X O. kilimandscharicum)
2.Anise basil or Persian basil (Licorice basil || O. basilicum 'Licorice'||)
3.Camphor basil, African basil (O. kilimandscharicum)
4.Cinnamon basil (Ocimum basilicum 'Cinnamon')
5.Dark opal basil (Ocimum basilicum 'Dark Opal')
6.Globe basil, dwarf basil, French basil (Ocimum basilicum 'Minimum'[12])
7.Hoary basil (Ocimum americanum formerly known as O. canum)
8.Holy basil (Ocimum tenuiflorum, formerly known as O. sanctum)
9.Spice basil (a cultivar of Ocimum americanum, which is sometimes sold as holy basil)
10.Lemon basil (Ocimum americanum)
11.Lettuce leaf basil (Ocimum basilicum 'Crispum')
12.Purple basil (Ocimum basilicum 'Purpurescens')
13.Queen of Siam basil (Ocimum basilicum citriodorum)
14.Red Rubin basil (Ocimum basilicum 'Rubin')

1.ஆப்பிரிக்க நீல துளசி
2.சோம்பு துளசி
3.கற்பூர செடிவகை துளசி
4.இலவங்கப்பட்டை துளசி
5.டார்க் ஒருவகை மாணிக்ககல் துளசி
6.குளோப் துளசி
7.கிழட்டு துளசி
8.புனித துளசி
9.காரமான உலகம் துளசி
10.எலுமிச்சை துளசி
11.கீரை இலை துளசி
12.ஊதா துளசி
13.சியாம் துளசி ராணி
14.ரெட் ரூபின் துளசி

இலவங்கப்பட்டை துளசி,திருநீற்றுப்பச்சை
                                              Cinnamon basil,thai  basil

இலவங்கப்பட்டை துளசி பூ



இலவங்கப்பட்டை துளசி

இலவங்கப்பட்டை துளசி
இலவங்கப்பட்டை துளசிஇளங்கண்டு


வேறுபெயர்கள் திருநீற்றுப்பச்சை,இலவங்கபட்டை துளசி,சப்ஜா,தாய் துளசி

துளசி அரசன் என்றுஅழைக்கப்படும்.

 மருத்துவ பண்புகள்
திருநீற்றுப்பச்சை என்பது எல்லோரும் அறிந்த செடி வகை. இது துளசி இனத்தோடு சேர்ந்தது. இதன் விதைதான் சப்ஜா.
திருநீற்றுப்பச்சை செடியில் ஊதா கலந்த வெண்மை  நிறத்தில் சிறு பூக்கள் பூக்கும். இதன் இலைகள் நறுமணம் கொண்டவை. இந்த இலைகளில் இருந்து கற்பூர மணம் கொண்ட நறுமணமிக்க எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. அது மருத்துவ குணம் நிறைந்தது. உலகமெங்கும் ‘தாய்பேசில்’ என்று அழைக்கப்படும் மூலிகை பிரபலம். திருநீற்றுப்பச்சை இலையைத்தான் தாய்பேசில் என்று அழைக்கிறோம்.
இதன் இலைக்கு உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும் சக்தி இருக்கிறது. வியர்வையாக அது வெளியேறும். அதனால் மூக்கடைப்புதலைவலிதலைபாரம் இருப்பவர்கள் அதனை பயன்படுத்தலாம். இந்த தொந்தரவுகள் இருக்கும்போது ஒரு கைபிடி அளவு இலையை, 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து அருந்தவேண்டும். மூக்கடைப்புதலைபாரம் நீங்கும். 
படர்தாமரை தொந்தரவால் அவதிப்படுகிறவர்கள்இதனை அரைத்து சருமத்தில் பூசி வரலாம். எல்லாவிதமான தோல் நோய்களுக்கும்இந்த இலைச்சாறு ஏற்றது.
சாறை உடலில் பூசிக்கொண்டால்பூச்சிகள் எதுவும் நெருங்காது. விஷ ஜந்துக்கள் கடித்துவிட்டால் முதலுதவியாக கடிபட்ட பாகத்தில் இந்த சாறு தேய்க்கப்படுகிறது.
சிலருக்கு காய்ச்சல் இருக்கும்போது வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படும். இதற்கு ஒரு கைபிடி அளவு இலையை எடுத்து ஒரு லிட்டர் நீரில் கொதிக்க வைத்து அந்த நீரை தொடர்ந்து பருகிவரவேண்டும். காதுவலி மற்றும் காது நோய்களுக்கும் இந்த இலைச்சாறு நிவாரணியாக விளங்குகிறது.
டீன்ஏஜில் பெரும்பாலான பெண்கள் முகப்பருவால் அவதிப்படு கிறார்கள். அவர்கள் இந்த பச்சிலை சாற்றை முகப்பருக்கள் மீது தேய்த்துவந்தால் பரு நீங்கி இயல்பாகும். தழும்புகளும் மறையும்.
சப்ஜா விதைகளிலும் மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அவை பித்தத்தை குறைக்கும். உடல் சூட்டை நீக்கும். இந்த விதைகளை நீரில் ஊறவைத்து பயன்படுத்த வேண்டும். இது நீரை உறிஞ்சி வழுவழுப்பாக மாறும் இயல்புகொண்டது.
ஒரு தேக்கரண்டி விதைகள் நீரில் ஊறிய பின்பு பல மடங்காக அதிகரிக்கும். இந்த விதைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு தேக்கரண்டி விதையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு குறையும். எடையை குறைக்க விரும்புகிறவர்களும் தினம் ஒரு தேக்கரண்டி விதையை ஊறவைத்து சாப்பிடலாம்.
ஜீரண பாதையில் ஏற்படும் புண்களை இது ஆற்றும். நெஞ்செரிச்சலையும் போக்கும். மலச்சிக்கலை போக்குவதற்கு இது சிறந்த மருந்து.
மலச்சிக்கலால் அவதிப்படும் முதியோர்கள் ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை சூடான பாலில் கலந்து குடிக்கவேண்டும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலுக்கும் இது நிவாரணமாகும்.
சிறுநீர் பாதையில் ஏற்படும் புண்நீர் எரிச்சல் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதலுக்கும் இது நல்ல மருந்து. இது உடல் சூட்டை குறைத்துஉடலை சீரான சீதோஷ்ண நிலைக்கு கொண்டுவரும் இயல்புகொண்டது. அதனால் இதை கோடைகாலத்தில் மட்டுமின்றிஉடல் சூட்டால் அவதிப்படும் காலகட்டத்திலும் பயன்படுத்தலாம்.
கோடை காலத்தில் நன்னாரி சர்பத்தில் இதை கலந்து சாப்பிடுவது நல்லது. இந்த சப்ஜா விதை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

சப்ஜா என்பது இதன் விதை வேறுபெயர் கசகசா

சப்ஜா


சப்ஜா

சப்ஜா



இதன் இலை,விதை,பூ அனைத்தும் தாய்லாந்து,சீனா,மலேசியா,சிங்கபூர் ஆகிய நாடுகளில் உணவுகளில் பயன்படுத்தப்படுகின்றன .இதன் பெயரில் உணவகங்களும் உள்ளது.








No comments:

Post a Comment