26.8.16

கோபுரந்தாங்கி Andrographis Echioides

               
                            கோபுரந்தாங்கி
                                           Andrographis Echioides

நார்ப்பட்டையான தண்டுகளில் அடுக்கான,முழுமையான இலைகளையுடைய மிகச்சிறுசெடி பூக்கள் இலைகோணங்களில் இலைக்கு மேலாக கோபுரகலசம் போன்ற வடிவில் காணப்படும்.இலை,வேர் ஆகியவை மருத்துவ குணமுடையவை.

200ml நல்லேண்ணெயில் கழுவி சுத்தம்செய்த 30இலைச்சாறு விட்டு பதமுறக்காய்ச்சி ஆறவைத்து வடிகட்டி கண்ணாடி போத்தலில் பத்திரப்படுத்தி
தலையில் தடவி 15 நிமிடம் ஊறவிட்டு தலைமுழுகி வர மயிர் உருதல் நிற்கும்,மண்டைக்கொதிப்பு தணியும்,மயிர் செழித்து வளரும்,கரப்பான்,புழுவெட்டு,காளாஞ்சப்படை ஆகியவை தீரும்.


வேரை கழுவி சுத்தம்செய்து நிழலில் உலர்த்தி பொடிசெய்து சம அளவான கற்கண்டுப்பொடி கலந்து காலை,மாலை அரை தேக்கரண்டி நெய்யில் கலந்து சாப்பிட்டு வர எலும்பு,நரம்பு,தசை ஆகியவை வலுப்பெறும். 










கோபுரந்தாங்கி எண்ணெய்

No comments:

Post a Comment