30.3.20

பயறு green mung dal







காலை ஆரோக்கிய உணவு 
பயறு துவையல் 
150g (மூன்று சுறங்கை)11 உருண்டை 

பயறை ஒருபாத்திரத்தில் கழுவி போட்டு நீர் விட்டு ஒருநாள் வரை ஊறவிடவேண்டும் .
ஊறிய பயறை எடுத்து  கழுவி ஒருபாத்திரத்தில் போட்டு நீர் விட்டு சிறிதளவு உப்பு போட்டு அடுப்பில் வைத்து அவிய விடவேண்டும் (ஓரளவு நசியும் அளவு ).பின்னர் இறக்கி  நீரை வடித்து எடுக்கவும் .வடித்து எடுத்த பயறில் சிறிதளவு உப்பு ,சீனி அல்லது சக்கரை (வெல்லம் ) சிறிதளவு தேங்காய்பூ போட்டு மசித்து துவைக்கவும் .சிறு உருண்டைகளாக்கி சாப்பிடலாம் .

பயறு துவையல் 

7.2.20

நோய் எதிர்ப்பு சக்தி (தமிழர் பாரம்பரிய கலாச்சார ,சைவ உணவுப்பழக்கவழக்கங்கள்)

ஒவ்வொரு நாட்டுக்காரரும் அவர்களது உணவுப்பழக்கங்களுக்கு ஏற்ற நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டிருப்பார்கள் 


                                          immune system நோய் எதிர்ப்பு சக்தி


இயற்கையோடு ஒன்றிப்போனவர்கள் ,இயற்கையை போற்றியவர்கள் .
இயற்கையோடு சார்ந்த உணவுப்பழக்கவழக்கங்களை கட்டமைப்பை  உருவாக்கியவர்கள் .நம்முன்னோர்கள் .
சித்தர்கள் நமக்கான நோய்க்களுக்கான மருந்துகளை  மூலிகைகளிலிருந்து  கண்டுபிடித்து உருவாக்கினார்கள்.
அதை ஓலைசுவடிகளில் எழுதி வைத்தார்கள் .

தமிழர் பாரம்பரிய கலாச்சார  ,சைவ உணவுப்பழக்கவழக்கங்கள் என்றும் சிறந்தது .

#சூரிய வணக்கம் ,மூச்சுப்பயிற்சி ,உடற்பயிற்சி
#காய்கறி ,பழவகை ,கீரை வகைகள் ,தானிய வகைகள் ,பால்வகைகள் போன்ற    உணவுவகைகளை பெரும்பாலும்  நமது முன்னோர்கள் பின்பற்றினார்கள்
#மண்,செப்பு  பாத்திரங்களை பயன்படுத்தினார்கள் .
#உணவு உண்ண வாழை இலையை பயன்படுத்தினார்கள் .
#உணவுக்கேற்ப வேலை செய்தார்கள்
#தினமும் குளியல்.
# வாரம் ஒருமுறை தலைக்கு குளித்தல்
#எண்ணெய் குளியல்
#உறக்கம்

நமது சைவ உணவுப்பழக்கவழக்கங்கள்  என்றும் நமது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.

31.1.20

(மீள்பதிப்பு )மழைகால கசாயம்,மருத்துவகசாயம்

மருத்துவகசாயம் 
எந்த ஒரு வைரஸ் காச்சலோ , சாதரண காச்சலோ, சளியோ ,உடல் அசதியோ  உங்களை அண்டாது .
உங்கள்  உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்  .
வாரம் இருமுறை குடித்து வந்தால் போதும் .




மருத்துவகசாயம் 



தூதுவளை இலை 5   Solanum Trilobatum leaves 5
கற்பூரவள்ளி இலை 5 Mexican mint leaves 5
கொத்தமல்லி 25g          coriander seeds 25g
மிளகு 25g                           Black pepper  25g
600ml  நீர்                             Water 600ml
இவை அனைத்தும்  கழுவி  ஒரு பாத்திரத்தில்   போட்டு 600ml நீர் விட்டு 200ml ஆக வரும்வரை சுண்ட காச்சவும்  . பிறகு இறக்கி ஆறவைத்து குடிக்கவும் .

30.1.20

இயற்கையான காற்று வடிகட்டி Natural air filter (snake plant)

                                                                     snake plant




இயற்கையான காற்று வடிகட்டி Natural air filter
வீட்டினுள் ,படுக்கை அறையில் சாடியில் வைக்கலாம். 
வாரம் ஒருமுறை நீர் விட்டால்  போதும் 

நன்மைகள் 
காற்றிலுள்ள மாசுக்கள் நுண்கிருமிகளை உள்வாங்கி சுத்தமான ஒட்ஸிசனைO2 (பிராணவாயு ) வெளிவிடும் .

இரவில் காபனீர்ஓட்ஸைட்டைCO2 (கரியமிலவாயு ) உள்வாங்கி ஒட்ஸிசனை வெளிவிடும்.

18.1.20

ஆரோக்கியமான வாழ்க்கை வட்டம் Healthy Life Circle

ஆரோக்கியமான வாழ்க்கை வட்டம் 



A
1தாய்ப்பால்  Breastfeeding
2குளித்தல்   Bathing           
3நித்திரை   sleep                
4வளர்ச்சி    Growth             

B
1ஆரோக்கியமான உணவு  Healthy eating
2உடற்பயிற்சி             Fitness
3குளித்தல்                Bathing
4.நித்திரை                 sleep
5ஆரோக்கியமான ஆயுள்   Healthy durability 

உறக்கம் sleep 
             வயது                         உறங்கும் நேரம் hours           
0-3                           14 or 17  hours 
4-11                          12 or 15 hours 
1-2                           11 or 14 hours 
3-5                           10 or 13 hours 
6-13                         09 or 11 hours 
14-17                         08 or 10 hours 
18-25                         07 or 09 hours 
26-64                          07 or 09 hours 
65+                             07 or 08 hours 

மெலடோனின்
அதிசயம்
மெலடோனின் கடவுளால் வளங்கப்பட்ட அற்புதம் .



9.1.20

இலவமரம் கடவுளின் வரம் Kapok tree (Ceiba pentandra )2

ஆண்மையை அதிகரிக்க
இலவம் பிசின் 50g 
கருவேலம் பிசின் 50g 
முருங்கை பிசின் 50g 
 (பாதி அளவு )25g ஏலக்காய் 
 இலவம் பிசின்,கருவேலம் பிசின், முருங்கை பிசின் சம அளவாக எடுத்து அதனுடன் சிறிது (பாதி அளவு )ஏலக்காய் சேர்த்து இடித்து பொடியாக்கி  வைத்துக்கொள்ளவும் .தினமும் காலை ,மாலை   5g அளவு  எடுத்து 100ml காய்ச்சிய   பசுவின் பாலில் போட்டு இரண்டு குங்குமப்பூ இதழையும்  போட்டு  கலக்கி குடித்துவர ஆண்மை அதிகரிக்கும் .

இலவம் பிசின்


கருவேலம் பிசின்

முருங்கை பிசின்

ஏலக்காய்
குங்குமப்பூ 



இலவமரம்
கருவேல மரம் 
முருங்கை மரம் 



இலவம் பஞ்சு மெத்தை ,தலையணை  சிறு விளம்பரங்கள் 





இலவமரம் கடவுளின் வரம் Kapok tree (Ceiba pentandra )

உடல் சூட்டை ,வலியை போக்கி நிம்மதியான உறக்கத்தை (தூக்கத்தை (நித்திரையை )தரும் இலவம் மரம் ஆண்மையை அதிகரித்து சந்ததியை பெருக்கும் இலவம் மரம்.


இலவம் மரம்








இலவம்பஞ்சு மெத்தையில் படுப்பது உடலை குளிர்ச்சியாக வைக்கும். இல்லற வாழ்க்கையில் இருப்பவர்களுக்கும் இலவம் பஞ்சு மெத்தை சிறந்தது.  உணவு செரியாமை, உடலில் ஏற்படும் கட்டிகள், அதிக பித்தம் ஆகியவற்றையும் நீக்கும்


இலவம்  இலவம் பிசின் உடல் உஷ்ணத்தைக் குறைத்து குளிர்ச்சியாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதேபோல மூல நோய்க்கும் ஆண்மையைப் பெருக்குவதிலும் மிக முக்கியப் பணியாற்றுகிறது.

இலவம் பிசினை  பனம்  வெல்லத்துடன் சேர்த்து காச்சிய பசும்பாலில் கலந்து குடித்துவர  மூல நோய்  குணமடையும் உடல் குளிர்ச்சி அடையும் .

பனை வெல்லம்(பனம் கட்டி )


4.1.20

பீர்க்கங்காய் Luffa (பிசுங்கங்காய் ) முழுக்கமுழுக்க தோல் நோய்க்கு அருமருந்து

பீர்க்கங்காய் Luffa










பீர்க்கன் காய் வெள்ளரிக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது. முற்றிய ( d )பிறகு தான் பீர்க்கங்காயைச் சமையலில் சேர்க்க வேண்டும். காயாக இருக்கும் போது சேர்த்தால் முதுகுவலி, பித்தக் கோளாறுகள், முடக்கு வாதம் போன்றவை தோன்றும்.சளிக் கோளாறுகளும் தோன்றும்.



 அதனால்தான் மார்க்கெட்டுகளில் முற்றிய  d பீர்க்கன் காய்களே விற்பனை செய்யப்படுகின்றன.
நிறைந்துள்ள சத்துக்கள்:
100 கிராம் பீர்க்கில் புரதம் 0.5% உள்ளது. கால்சியம் 40 மி.கிராமும், பாஸ்பரஸ் 40 மி. கிராமும், இரும்புச் சத்து 1.6 மி.கிராமும், வைட்டமின் ‘ஏ’ 56 அகில உலக அலகும், ரிஃபோபிளவின் 0.01 மி.கிராமும், தயாமின் 0.07 மி. கிராமும், நிகோடின் அமிலம் 0.2 மி.கிராமும், வைட்டமின் 5 மி.கிராமும் உள்ளன.

நார்ச்சத்து, ‘ஏ’, ‘பி’, ‘சி’ வைட்டமின்கள், தாது உப்புகள் போன்றவை அளவுடன் அமைந்திருப்பதால் நீரிழிவு நோயாளிகள் பயமின்றிப் பீர்க்கங்காயைச் சேர்த்துக் கொள்ளலாம். இது சத்துணவாகவும் டானிக் மருந்து போலவும் செயல்பட்டு உடல் நலத்தைக் பாதுகாக்கும்.
100 கிராம் பீர்க்கனில் கிடைக்கும் கலோரி 18 தான். எனவே, இது நீரிழிவு நோயாளிகளுக்கும், குண்டான மனிதர்களுக்கும் கெடுதல் செய்யாத காய்கறியாகவும் திகழ்கிறது.முற்றிய பீர்க்கனில் லுஃபின் (Luffin) என்னும் கசப்புப் பொருள் இருக்கிறது. பீர்க்கனின் விதைகளில் ஒரு விதமான நறுமண எண்ணெய் இருக்கிறது. நார்ச்சத்தும் உடனடியாக இரத்தத்தால் கிரகித்துக்கொள்ளக்கூடிய மாவுச்சத்தும் பீர்க்கனில் உள்ள முக்கிய சிறப்பு அம்சங்களாகும்.

 சொறி, சிரங்கு, நாள்பட்ட புண்கள் முதலியன குணமாகப் பீர்க்கன் கொடி இலைகளை அரைத்து, குறிப்பிட்ட இடங்களில் வைத்துக் கட்டினால் போதும்; இரண்டு மூன்று கட்டுகளிலேயே குணமாகிவிடும். பற்றாகவும் இடலாம்

.
 பீர்க்கன் இலையைச் சாறு பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் சூடுபடுத்தி, அந்த இலைச்சாற்றை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.

 பீர்க்கன் காயின் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் தோல் நோய், தொழுநோய் முதலியவற்றுக்குச் சக்தி வாய்ந்த மேல் பூச்சு எண்ணெய்யாய்த் திகழ்கிறது.

இரத்த சோகை நோயாளிகள் இதன் வேரைக் காய்ச்ச வேண்டும். ஆறியதும் நீரை வடித்து, அருந்த வேண்டும். இலைச்சாற்றைப் போலவே இதுவும் கசப்பாகத்தான் இருக்கும்; ஆனால், சக்தி மிக்கது. இரத்த சோகை விரைந்து குணமாகும். கால் வீக்கமும் இதே கஷாயத்தால் குறையும்.

 மருத்துவ குணம் உடைய இக்காய் முற்றிய நிலையில் உலர்ந்தபின் தோல் மற்றும் விதைகளை நீக்கி எஞ்சிய நார்ப்பகுதி குளியலுக்கு உடலை தேய்த்து உதவ பயன்படுகிறது.

தோல் நோயாளிகள் தவறாமல் இதைச் சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாகி நோய் விரைந்து குணமாவது உறுதி!

வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் காய்ந்த பீர்கங்காய்  பஞ்சு   உற்பத்தி பொருட்கள் 





"லூஃபா" உண்மையில் பல நூற்றாண்டுகள் பழமையான கண்டுபிடிப்பு

பண்டைய எகிப்தியர்கள் அனைவருமே தனிப்பட்ட சுகாதாரத்தைப் பற்றி இருந்தனர் ... மேலும் அவர்களின் உடல்களை சுத்தம் செய்யும்போது, ​​அவர்கள் "லூஃபா" - வெள்ளரி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நீண்ட மற்றும் குறுகிய காய்கறியைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.