மருத்துவக் குணங்கள்:
- பழம்பாசி ஒருசிறிய செடியாகும். இதன் இலைகள் இதய வடிவமாக
பச்சையாக இருக்கும். இதன் பூக்கள் கரு மஞ்சளாகவும் 5 இதழ்களைக் கொண்டதாக இருக்கும். இதன் மேல் பாகத்தில் மொசு மொசுப்பான முடிகள் இருக்கும். - இது 50-200 செண்டி மீட்டர் உயரம் வளரக்கூடியது. இதன் தண்டு பசுமை கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் தாயகம் வட கிழக்கு பிரேசில், இந்தியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென் அமரிக்கா, அவாய்தீவுகள், புது கினியா, பிரான்ஸ் மற்றும் இலங்கைக்குப் பரவிற்று.
இது எல்லா வகை நிலங்களிலும் வளரக்கூடியது. தமிழகமெங்கும் தரிசு நிலங்களிலும், சாலையோரங்களிலும் தானே வளரக்கூடியது.
இதை நிலத்துத்தி என்றும் சொல்வார்கள். விதைமூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. - பழம்பாசியின் இலை சதை நரம்புகளைச் சுருங்கச் செய்தல், உடலின் எடையை குறையச்செய்தல், இரத்த அழுத்தம் குறையச் செய்தல் காய்ச்சல், நரம்புத்தளர்ச்சி, ஆஸ்துமா, வலிப்புகளைப் போக்கல், தாது வெப்பகற்றுதல் போன்ற குணங்களையுடையது. வேர் எண்ணெய் காயத்தைக் குணமடையச் செய்யும் தன்மையுடையது.
- இதன் இலையுடன் சிறிது பச்சரிசி சேர்தரைத்துக் குழப்பிக் களி போல் கிளறி கட்டிகளுக்கு வைத்துக் கட்ட அவை பழுத்து உடையும்.
- 20 கிராம் இலையைப் பொடியாய் அரிந்து அரை லிட்டர் பாலில் போட்டு வேக வைத்து வடிகட்டிச் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து 3 வேளை சாப்பிட மூலச்சுடு தணியும். இதை 20 மி.லி. அளவாகக் குழந்தைகளுக்குக் காலை மாலை கொடுத்து வர இரத்தக் கழிசல், சீதக் கழிசல் ஆகியவை தீரும்.
No comments:
Post a Comment