மருத்துவக் குணங்கள்:
- நொச்சி இலையை இடித்து சாறு பிழிந்து கட்டிகளின் மீது பூசி வர கட்டி கரையும். வீக்கம் குறையும்.
- நொச்சி, தழுதாழை, மாவிலங்கம் ஆகியவற்றை சம அளவு எடுத்து சாறு பிழிந்து, ஒரு ஆழாக்கு எடுத்து அதில் 35 கிராம் பெருங்காயத்தை பொடித்துப் போட்டுக் காய்ச்சவும்.
- அது குழம்பு பதத்தில் வந்ததும் அதில் ஒரு கரண்டி வீதம் எடுத்து தொடர்ந்து 10 நாட்கள் சாப்பிட குன்மம் எனப்படும் அல்சர் வயிற்றுவலி குணமாகும்.
- நொச்சி மலர்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து இரண்டு சிட்டிகை அளவு எடுத்து பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட ரத்த பேதி, ரத்த வாந்தி குணமாகும்.
- நொச்சி இலையை சிறிது ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி ஒத்தடம் இட, மூட்டுவலி, மூட்டு வீக்கம் குறையும்.
- நொச்சிக் கொழுந்து, சுக்கு சேர்த்து அரைத்து, அதனுடன் சர்க்கரை, நெய் சேர்த்து லேகியம் போல கிண்டி ஒரு மண்டலம் உட்கொண்டு வர சீதக்கழிச்சலினால் ஏற்படும் கடுப்பு குணமாகும்.
No comments:
Post a Comment