21.3.14

சருமத்திற்கு பொலிவு தரும் கடுகு ஃபேஸ்ட்


வீட்டில் சமையலில் பயன்படும் கடுகு, சருமத்திற்கு மிகவும் ஆரோக்கியமானது. இந்த கடுகை வைத்து முகத்திற்கு ஸ்கரப் செய்தால், சருமம் நன்கு பொலிவோடு இருக்கும். 

* ஒரு டேபிள் ஸ்பூன் கடுகில் 2 டேபிள் ஸ்பூன் ரோஸ் அல்லது லாவண்டர் எண்ணெயை விட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதனை முகத்திற்கு தடவி, நன்கு மென்மையாக 3-4 நிமிடம் தேய்க்க வேண்டும். பின் அதனை கழுவிட வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, சருமம் நன்கு பொலிவோடு காணப்படும். 

* ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு, 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, சற்று நேரம் மசாஜ் போல் செய்ய வேண்டும். பின் அதனை குளிர்ந்த நீரால் கழுவி விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமத்தில் உள்ள இறந்த செல்களும் நீங்கிவிடும். 

* 1 டேபிள் ஸ்பூன் கடுகு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் கலந்து, முகத்திற்கு ஸ்கரப் செய்ய வேண்டும். இந்த முறையால், கடுகு நிச்சயம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கிவிடும். கடுகு உடன் கற்றாழையை கலந்து செய்வதால் சருமத்திற்கு தேவையான ஈரப்பசை கிடைப்பதோடு, முகத்தில் உள்ள பிம்பிள், சரும துளைகளில் உள்ள தூசிகள் போன்றவை போய்விடும். 

* ஒரு டேபிள் ஸ்பூன் மில்க் கிரீம் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் கடுகு சேர்த்து, முகத்திற்கு தடவி, 3-4 நிமிடம் தொடர்ந்து தேய்த்து, பின் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் பொலிவோடு காணப்படுவதோடு, ஸ்கரப்பிற்குப் பின் சருமத்தின் நிறம் சற்று கூடும்.

No comments:

Post a Comment