8.3.14

நீரழிவு நோயாளிகளுக்கு உகந்த கோதுமை ரவா தோசை


நீரழிவு நோயாளிகளுக்கு உகந்த கோதுமை ரவா தோசை


தேவையானவை

கோதுமை மாவு - முக்கால் கப், 
அரிசி மாவு - கால் கப், 
கோதுமை ரவை - அரை கப், 
புளித்த மோர் - ஒரு கரண்டி, 
சீரகம் - ஒரு டீஸ்பூன், 
வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று, 
இஞ்சி - சிறு துண்டு, 
கொத்தமல்லி - ஒரு டேபிள்ஸ்பூன்,  
கறிவேப்பிலை - சிறிதளவு, 
ஆயில் - சிறிதளவு, 
உப்பு - தேவையான அளவு. 


செய்முறை

• தோல் நீக்கி இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் 

• பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

• ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கோதுமை மாவு, கோதுமை ரவை, உப்பு, சீரகம், மோர், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து, தண்ணீர் விட்டு, தோசை மாவை விட நீர்க்கக் கரைத்துக் கொள்ளவும். 

• அடுப்பில் நான்ஸ்டிக் தோசைக்கல்லைப் போட்டு சூடானதும் சிறிது எண்ணெயை தடவி, மாவை விளிம்பிலிருந்து வட்டமாக உள்புறம் ஊற்றவும். 

• எண்ணெயை சுற்றிலும் விட்டு, தோசை சிவந்ததும் திருப்பிப் போட்டு, எடுத்துப் பரிமாறவும். 

• நீரழிவு நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது இந்த கோதுமை ரவா தோசை.

No comments:

Post a Comment