பாதாம் பருப்பு-மருத்துவ பயன்கள்
பாதாம் பருப்பு
அதிகமான சத்துக்களை உள்ளடக்கிய பருப்பு வகைகளில் பாதாம் பருப்பும் உண்டு. பாதாம் பருப்பு உடலில் கொழுப்பை அதிகரிக்கும் என்ற தவறான எண்ணம் பலருக்கு உண்டு. பாதாம் இனிப்புகளில் சேர்க்கப்படும் சீனியும், கொழுப்பும்தான் உடல் கொழுப்புக்கும் வேறு பல நோய்களுக்கும் இட்டுச் செல்கிறது. இவை இரண்டையும் நீக்கிவிட்டால் பாதாம் பருப்பு உடல் செழிக்கச் செய்யும் ஓர் ஆரோக்கியமான உணவு. இதன் மகத்துவத்தை அறியாத பலர் இதனை உணவில் சேர்த்துக் கொள்வதில்லை.
பாதாமில் வைட்டமின்களும் தாதுச்சத்துக்களும் மலிந்து கிடக்கின்றன. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நீங்கள் நாட வேண்டிய பருப்பு வகைகளில் இதுவும் ஒன்று. புரதம், நார்ப்பொருள்களோடு சேர்த்து உடலுக்குத் தேவையான கொழுப்பு அமிலங்களான ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 இதில் உள்ளது. இதனைத் தவிர்த்து வைட்டமின் ஈ, துத்தநாகம் சுண்ணாம்புச் சத்து, இரும்புச்சத்து, போஸ்பரஸ், தாமிரம் பொட்டேஸியம் செலேனியம், நியாஸின் மற்றும் மெக்னீஸியமும் இதில் உள்ளன. பாதாமில் உள்ள கொழுப்பு இருதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் கொழுப்பாகும்.
25 கிராம் பாதாமில் ஒரு நாளைக்குத் தேவையான 70% வைட்டமின் ஈ உள்ளது. மற்ற பருப்புகளை விட பாதாமில் கால்சியம் நிரம்ப இருக்கிறது. இதனோடு சேர்த்து புற்றுநோயை எதிர்க்கும் வைட்டமின் பி17 என்ற சத்தும் இதில் உள்ளது.
மலச்சிக்கல், சுவாசக் கோளாறுகள், இருமல், இருதயக் கோளாறுகள், நீரிழிவு நோய், சருமக் கோளாறுகள், கேச பிரச்சனைகள், சொரைஸிஸ், பல் பாதுகாப்பு, இரத்த சோகை, ஆண்மைக் குறைவு, பித்தப்பை கல் போன்ற பிரச்னைகளைக் களைவதில் பாதாம் பருப்பு துணை புரிகிறது.
தினந்தோறும் பாதாம் பருப்பு உட்கொண்டு வருபவர்களுக்கு உடலில் நல்ல கொழுப்பு கூடி கெட்ட கொழுப்பு குறைகிறது.
பாதாமில் உள்ள நல்ல கொழுப்பு, புரதம் மற்றும் பொட்டேஸியம் இருதயத்திற்கு நல்லது. வைட்டமின் ஈ என்டிஒக்சிடண்டாக செயல்பட்டு இருதய நோய் வரும் ஆபத்துக்களைக் குறைக்கிறது. பாதாமில் உள்ள போலிக் அமிலம் தமனிகளில் கொழுப்பு படிவதைத் தடுத்து நிறுத்துகிறது.
இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. பாதாமில் உள்ள பொட்டஸியம் இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க உதவுகிறது.
பாதாமில் உள்ள சத்துக்கள் மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றன. மூளைத் திறனை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது.
இரத்தத்தில் சீனி மற்றும் இன்சுலின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதால் நீரிழிவு நோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.
சீனி சேர்க்கப்படாத பாதாம் பால் எடையைக் குறைக்க உதவுகிறது. உடல் பருமன் உடையவர்கள் பாதாமின் துணை கொண்டு எடையைக் குறைக்க முயற்சி செய்யலாம்.
பாதாமில் உள்ள நார்ப்பொருள் மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது.
மங்கானிஸ், தாமிரம் மற்றும் ரிபோபிளாவின் சக்தியை உற்பத்திக்கு உதவுவதால் பாதாம் உட்கொள்பவர்கள் புத்துணர்வோடு இருப்பர்.
முதியவர்களுக்கு ஏற்படும் ஞாபக மறதி நோயை, பாதாம் உட்கொண்டு வருவதன் மூலம் தடுக்க முடியும்.
பாதாம் ஒருவருடைய முகப் பொலிவைக் கூட்டுகிறது. நோய் எதிர்ப்புச் சக்திய அதிகரிக்கிறது. இப்படிப்பட்ட பாதாமை உணவாகக் கொண்டால் ஆரோக்கியம் மேம்படும்.
No comments:
Post a Comment