21.3.14

பச்சை நிறப் பழங்கள் மற்றும் காய்கறிகள்

பச்சை நிறப் பழங்கள்:
  • பச்சை திராட்சை, பச்சை ஆப்பிள், பேரிக்காய், பச்சை வாழைப்பழம், பீன்ஸ், கோஸ் ஆகியவை பச்சை நிறப்பழங்கள் ஆகும்.
பச்சை நிறத்திற்கு காரணம்:
  • காய்கறி மற்றும் பழங்களின் பச்சை நிறத்திற்கு முக்கிய காரணம் அதில்  உள்ள குளோரோஃபில் ஆகும்.
  • இவை பாக்டீரியாவின் வளர்ச்சியை குறைத்து நம் உடலில் புதிய திசுக்களை உருவாக்குகிறது.
பச்சை நிறப் பழங்களில் உள்ள சத்துகள்:
  • நார்ச்சத்து, குளோரோபில், வைட்டமின் ”சி”, கால்சியம் மற்றும் பீட்டா கரோடின் உள்ளிட்ட உயிர்சத்துகள் ஆகிய சத்துகள் இதில் அடங்கியுள்ளன.
  • மேலும் ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிஃபங்கல் ரசாயானம் ஆகிய சத்துகளும் இதில் அடங்கியுள்ளன.
மருத்துவ குணங்கள்:
  • இவை புற்றுநோயை குணப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
  • இரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்பை நீக்கி இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
  • எலும்புகள்,  தசைகள் மற்றும் மூளை வலுப்பெற இந்த பச்சை காய்கறிகளும் பழங்களும் உதவுகிறது.
இத்தகைய சத்துகள் நிறைந்த பழவகைகளை நம் அன்றாட ‌உணவில் பயன்படுத்தி ”நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழிக்கு ‌ஏற்ப வாழ்வோம்; வாழ்வில் வளம் பெறுவோம்.

No comments:

Post a Comment