மருத்துவக் குணங்கள்:
- காடுகள், மலைகள், மலைச்சாரல்கள், ஆற்றங்கரைகள் என பலவகை மூலிகைச் செடிகள் நிறைந்த புதர்ப்பகுதிகள் போன்ற இடங்களில் பலவித செடிகொடிகளையும், மூலிகைகளையும் மேய்ந்து வருகின்ற வெள்ளாடுகளின் பாலை பூலோக தேவாமிர்தம் எனக் கூறலாம்.
- வெள்ளாட்டின் பாலை வயதிற்கு ஏற்ப 5 மி.லி. முதல் 100 மி.லி. வரை சம அளவு தண்ணீர் கலந்து காய்ச்சிப் பருகி வர எத்தகைய நோய், வலி வியாதிகளை உடையவர்களுக்கும் சிறந்த பலன் கிடைக்கும்.
- வெள்ளாட்டுப் பாலை கறந்த உடனேயே அருந்தக்கூடிய வசதியுடையவர்கள் சம அளவு தண்ணீர் மட்டும் கலந்து காய்ச்சாமலேயே அருந்திட மேலும் மிகுதியான பலனைப் பெறலாம்.
- வெள்ளாட்டுப் பால் வலிப்பு, புற்றுநோய், நீரிழிவு, சரும நோய்கள், யானைக்கால் வியாதி, மஞ்சள் காமாலை போன்ற எவ்வித கொடூர நோய்களையும் குணப்படுத்தக்கூடியது. ஆண்மைக்குறைவு, உடையவர்கள் வெள்ளாட்டுப் பாலை தொடர்ந்து 3 – 4 மாதங்கள் தினசரி ஒரு வேளை குடித்து வர நல்ல பலன் தெரியும்.
- வெள்ளாட்டுப் பாலினால் வாத, பித்த, கப தொந்தரவுகளினால் ஏற்படக் கூடிய நோய்களைப் போக்குவதுடன் சுவாச காசம், சீதாதி சாரம், கபத்தோடம், விரணம், வாதத்தினால் உண்டாக்கிய வீக்கங்கள் முதலிய துன்பங்களைத் தீர்ப்பதுடன் பசியையும் உண்டாக்கும்.
- இப்பாலை மஞ்சள்காமாலை நோய் உடையவர்களுக்குத் தினமும் கொடுக்க விரைவில் குணமடையும்.
- செம்மறியாட்டுப்பால் மூத்திரப்பையின் கற்களை அகற்றும் மற்றும் இதனுடன் சேர்த்து காய்ச்சிய தைலத்தினால் தலைமுடி செழித்து வளரும் என்று சொல்லப்பட்டாலும் செம்மறியாட்டுப் பாலை தவிர்க்கவும். பலருக்கு ஒத்துக் கொள்ளாது. பல வியாதிகளை கிளப்பி விடும். வாயுவை அதிகரிக்கும்.
- செம்மறி ஆட்டின் பால் பித்த கப தொந்தரவுகளையும், வயிற்று உப்புசம், மேற்சுவாசம் ஆகியவற்றை உண்டாக்கும். பத்தியத்திற்கு ஆகாது. ஆனால் வாயுவை அதிகரிக்கச் செய்யும். இப்பாலிற்கு அநேக நோய்களை உண்டாக்கும் குணத்தைப் பெற்றிருக்கிறது.
No comments:
Post a Comment