புல் இனத்திலேயே முதன்முதலில் தோன்றியது அறுகம்புல். இது உறுதியான வேர்களை கொண்டிருப்பதால் புல்லை பிடித்திழுத்தால் மேல்பாதி அறுபட்டு புல் மட்டும் கையில் வரும். வேர் மட்டும் பூமியில் தங்கி மீண்டும் முளைக்கும். அறுபட்டு மீண்டும் உடனே தழைத்து நிற்பதால் இதற்கு "அறுகம்புல்" எனப் பெயர் வழங்கலாயிற்று. (Botanical Name: Cynodon dactylon)
இதற்கு பல மருத்துவ குணங்கள் உள்ளன. அதனாலேயே இறை வழிபாடுகளிலும், மங்கள காரியங்களிலும் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. அறுகம்புல்லின் மகிமைக்கு ஒரு பழமொழி கூட உண்டு.
அதாவது "ஆல் போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி வாழ வேண்டும்" என்பது தான். அறுகம்புல்லிற்கு மூதண்டம், தூர்வை, அறுகு, பதம், மேகாரி என பல மூலிகைப் பெயர்களும் உண்டு.
பெரும்பாலும் வயல் வரப்பு ஒரங்களிலும் வட்டவெளி மைதானங்களிலும், லேசான நீர் பாங்கான இடங்களிலும் வளரும் தன்மையுடைய இந்த புல்லின் இலை சற்று கரும்பச்சை நிறமாகவும், ஒரங்களில் சுனைப்புடன் ரம்பம் போல் இருக்கும்.
அறுகம்புல்லின் மருத்துவப் பயன்
1. உடலில் ஏற்படும் நாள் பட்ட தோல் நோய்களுக்கு ஒரு பிடி அறுகம்புல்லுடன் சிறிய அளவு கிழங்கு மஞ்சளை சேர்த்து மைய அரைத்து அவற்றின் மீது போட்டு வந்தால் விரைவில் குணமாகும்.
2. அறுகம்புல்லை பறித்து அதன் கணுக்களை நீக்கி நன்றாக அரைத்து அதனுடன் பசுவெண்ணெய் சரியாக கலந்து குழைத்து காலையில் உட்கொள்ளலாம். 20 முதல் 48 நாட்கள் வரை சாப்பிட்டால் உடல் உஷ்ணமும், தேகத் தளர்ச்சியும் நீங்கி முகம் வசீகரத்துடன் இருக்கும்.
3. சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சர்க்கரையின் அளவை குறைக்க அறுகம்புல் ஜீஸ் குடிக்கலாம்.
4. அறுகம்புல்லை சுமார் 50 கிராம், நல்மிளகு 35 கிராம் எடுத்துக் கொண்டு இதனை இடித்து சுத்தமான நல்லெண்ணெய் 50 மி.லி.யுடன் சேர்த்து சூரிய ஒளியில் 3 நாட்கள் வைக்க வேண்டும். பிறகு இதனை தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக உச்சந்தலையில் தேய்த்து வந்தால் கண் நோய்கள் தீரும். மேலும் கபால சூடும் தணியும்.
5. முக்கியமாக மாதவிடாய் காலத்தில் வெள்ளைபடும் பெண்களுக்கு அறுகம்புல் மிகுந்த பயன் தருவதாக உள்ளது. அதாவது வெள்ளைபடும் பெண்கள் ஒரு கைபிடி அளவு அறுகம்புல்லையும், கீழாநெல்லியையும் சேர்த்து அரைத்து அதனை தயிரில் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வெள்ளைபடுதல் தீரும். மேலும் நீர் தாறை எரிச்சல், ரத்தப்போக்கு, உடல் எரிச்சல், நீர் தாறை புண்களின் வலி ஆகியவை தீரும்.
6. மேலும் அறுகம்புல் குடிநீர் ஆசன வாய் ரத்த மூலம், கண், காது, மூக்கு இவற்றில் உண்டாகும் சீர்கேடுகளை சரி செய்கிறது. அறுகம்புல்லை எடுத்து கணுக்களை நீக்கி மாதுளை இலை கலந்து நன்றாக காய்ச்சி குடிப்பதே அறுகம்புல் குடிநீர்.
7. 35 கிராம் அளவிற்கு அறுகம்புல்லை எடுத்து நன்கு அரைத்து சூடுபடுத்தியதை பசும்பாலில் கலந்து குடித்தால் இரத்த மூலம் தீர்ந்து விடும்.
8. அறுகம்புல்லுடன் சிறிது கிழங்கு மஞ்சளை சேர்த்து மைய அரைத்து உடல் முழுவதும் சாந்து போல் அரைமணி நேரம் தடவி பிறகு குளித்தால் உடலில் ஏற்படும் சிறுசிறு அரிப்பு நீங்கும்.
விநாயகர் வழிபாட்டில் அறுகம்புல் தான் மிக முக்கியமானது. அறுகம்புல்லை வாழ்வில் பயன்படுத்தினால் நோயின்றி வாழலாம்.

No comments:
Post a Comment