23.2.14

குழ‌ந்தைகளை சுயமாக சா‌ப்‌பிட ‌விடு‌ங்க‌ள்


குழ‌ந்தைகளு‌க்கு 2 வயது‌க்கு மே‌ல் அவ‌ர்களாக சா‌ப்‌பிடு‌ம் பழ‌க்க‌த்தை கொ‌ண்டு வாரு‌ங்க‌ள்.

ஒரு பெ‌ரிய த‌ட்டி‌ல் சா‌ப்பா‌ட்டை‌ ப‌ரிமா‌றி, அதனுட‌ன் கா‌ய்க‌றி, ‌கீரை, மு‌ட்டை போ‌ன்றவ‌ற்றை வை‌த்து அதையு‌ம் சா‌ப்‌பிடுமாறு சொ‌ல்லு‌ங்க‌ள்.

சா‌ப்‌பிடு‌ம் போது குழந்தைகள் உணவைச் சிந்திவிட்டால் திட்டுவதோ, அடிப்பதோ, மிரட்டுவதோ கூடாது. 
கூடவே, குழந்தைகளுக்கு எவ்வளவு உணவு தேவையோ அந்த அளவு மட்டுமே உண்ணப் பழக்குங்கள்.

குழ‌ந்தை‌க‌ள் ஓரள‌வி‌ற்கு சா‌ப்‌பி‌ட்டது‌ம் அவ‌ர்களாக‌ப் போது‌ம் எ‌ன்று சொ‌ல்லுவா‌ர்க‌ள். அத‌ற்கு மேலு‌ம் அதிகமாக உண்ணச் சொல்லிக் கட்டாயப்படுத்த வேண்டாம்.

சா‌ப்பா‌ட்டை அவ‌ர்க‌ள் ரு‌சி‌த்து‌ச் சா‌ப்‌பிட ‌நீ‌ங்க‌ள் வ‌ழி ஏ‌ற்படு‌த்‌தி‌க் கொடு‌ங்க‌ள்

No comments:

Post a Comment