குழந்தைகள் உறங்கும் போது அதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டியது பெற்றோரது கடமையாகிறது.
டிவி ஓடிக் கொண்டிருக்கும் அறையில் குழந்தைகளை படுக்க வைக்க வேண்டாம். குழந்தைகளுக்கு உறக்கம்தான் உடல் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். எனவே குழந்தைகள் ஆழ்ந்து தூங்க வேண்டியது மிகவும் அவசியம்.
எனவே, திடீரென ஏற்படும் சத்தம் குழந்தைகள் தூங்குவதை பாதிக்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.
குழந்தைகள் விளையாடும் போதே மிக்ஸி போடும் வேலை, மோட்டர் போடும் வேலைகளை முடித்துக் கொள்வது நல்லது.
வீட்டில் இருக்கும் பெரிய குழந்தைகளை வெளியில் விளையாட அனுமதியுங்கள். சிறிய குழந்தைகள் அருகில் விளையாட ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்.
குழந்தைகள் அமைதியான இடத்திலும், காற்றோட்டமான, சற்று வெளிச்சம் இருக்கும் அறையில் தூங்க வைப்பது நல்லது.
No comments:
Post a Comment