தேவையானவை :
துவரம் பருப்பு வேக வைத்த தண்ணீர் - 2 கப்,
தக்காளி - 2,
புளி - நெல்லிக்காய் அளவு,
மஞ்சள் தூள்,
பெருங்காயம் - தலா கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை, மல்லித் தழை - சிறிது,
உப்பு,
நெய் - தேவைக்கேற்ப.
பொடிப்பதற்கு:
மிளகு, சீரகம் - தலா 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2.
தாளிக்க:
கடுகு - அரை டீஸ்பூன்,
வேப்பம் பூ - 2 டேபிள் ஸ்பூன்,
வெல்லம் - 1 நெல்லிக்காய் அளவு.
செய்முறை :
1. புளியை ஒன்றரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். அத்துடன் தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்துக் கரைத்து, பொடித்து வைத்திருக்கும் பொடியைச் சேர்த்துக் கொதிக்க விடவும்.
2. பச்சை வாசனை போனதும் பருப்புத் தண்ணீர் சேர்த்து, நுரைத்து வரும் போது, நெய்யில் கடுகு, வேப்பம் பூ சேர்த்துப் பொரித்து ரசத்தில் சேர்க்கவும். இறக்கும் போது கொத்தமல்லி சேர்த்துப் பரிமாறவும்.
|
25.2.14
வேப்பம் பூ ரசம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment