விளாம்பழத்தின் மகத்துவம்
விளாம்பழம் இந்தியாவிலும் அதை சுற்றிய நாடுகளிலும் அதாவது பங்களாதேஷ் , பாகிஸ்தான் ,ஸ்ரீலங்காவிலும் தான் அதிகம் பயிராகிறது .இதில் விட்டமின்களும் தாதுபொருட்களும் அதிகம் உள்ளன . ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த பழம் அதிகம் உபயோகப்படுகிறது பழம் மட்டுமல்லாது இதன் வேரும் இலைகளும் கூட மருத்துவ குணங்கள் நிறைந்தவை நன்றாக பழுத்த பழம் அதன் ஓட்டிலிருந்து விடுபட்டு இருக்கும் குலுக்கிப் பார்த்தால் பழம் ஆடுவது தெரியும். தமிழில் ஒரு பழமொழி உண்டு விட்டதடி உன் ஆசை விளாம்பழத்தின் ஓட்டோடு என நன்கு பழுத்த பழம் புளிப்பு கலந்த இனிப்பாக இருக்கும். இதில் எண்ணற்ற விதைகள் இருக்கும். இந்த விதைகளும் தனி சுவையாக இருக்கும்.
விளாம்பழத்தின் மகத்துவம் :
1.விளாம்பழம் மலச்சிக்கலை தீர்க்கும்
2.காயாக இருந்தால் கொஞ்சம் கசப்பு கலந்த துவர்ப்பாக இருக்கும்.இது வயிற்றுப் போக்கையும் , சீதபேதியையும் கட்டுப்படுத்தும்
3.இதன் ஓட்டை உடைத்து உள்ளே இருக்கும் பழத்தை வெல்லம் அல்லது சர்க்கரை கலந்து சாப்பிட ரொம்ப சுவையாக இருக்கும்.இந்த பழத்தை வெய்யிலில் காய வைத்து பொடி செய்து சாப்பிட சர்க்கரை நோய் கட்டுப்படும்.
4.இந்த பழம் அதிக இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். இது மூளையையும் இருதயத்தையும் பலப்படுத்தும்
5.இதன் இலைகள் வாந்தி பேதி காய்ச்சல் இவைகளை குணப்படுத்த உதவும்
6.இதன் இலைகளை அரைத்து மூட்டுகளின் மேல் தடவ மூட்டுவலி குணமாகும்
7.இளம் துளிர் இலைகளை கொதிக்க வைத்து அருந்தினால் இருமல் குணமாகும்
| |
22.2.14
விளாம்பழத்தின் மகத்துவம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment