22.2.14

பொடுகுத் தொல்லையா-டிப்ஸ்


சின்ன வெங்காயத்தை கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்த்து 15 நிமிடத்திற்கு பிறகு குளிக்கவும்.

தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம்.

பொடுகை தடுக்க வாரம் ஒரு முறையாவது நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கலாம்.

வெந்தய பவுடரை தலையில் நன்றாக தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும், உடல் உஷ்ணமும் குறையும்.

வேப்பிலை சாறும், துளசி சாறும் கலந்து தலைக்கு தேய்க்கவும்.

வசம்பு பவுடரை தேங்காய் எண்ணையில் கலந்து தேய்ப்பது நல்லது.

பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிதத்திற்கு பிறகு நன்றாக தேய்த்து குளிக்கவும்.

அறுகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த்து, நன்றாக காய்ச்சி பிறகு ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு விரைவில் மறையும்.

தலைக்கு குளித்த பின் தலையை துவட்டாமல் கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து தலைக்கு குளித்து அதன்பின்பு துவட்டி கொள்ளலாம்.

மருதாணி இலையை அரைத்து, அதனுடன் கொஞ்சம் தயிர், எலுமிச்சை சாறு சேர்த்து தலையில் தேய்த்து வர பொடுகு தொல்லை நீங்கும்.

ஆலிவ் எண்ணெயுடன் இஞ்சிச்சாறு சேர்த்து நன்றாக கலந்து தலைக்கு தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து ஊற வைத்து பிறகு குளித்து வந்தால் பொடுகு குறையும்.

நெல்லிமுள்ளி, வெந்தயம், சிறிது மிளகு இவற்றை ஊறவைத்து மைபோல அரைத்து தலையில் தடவி ஒரு மணிநேரம் ஊறிய பிறகு, நன்கு அலசினால் பொடுகு தொல்லை மறையும்.

தேங்காய் எண்ணெயுடன் சிறிது கற்பூரத்தை போட்டு வைத்து, அந்த எண்ணெயை தொடர்ந்து தேய்த்து வந்தால் பொடுகு மறைந்துவிடும்.

தேங்காய் எண்ணையுடன், வெப்ப எண்ணையை கலந்து தேய்த்து வர பொடுகு தொல்லை நீங்கும். 

No comments:

Post a Comment