22.2.14

25 வகையான மலர்களும் அதன் மருத்துவ குணங்களும்

25 வகையான மலர்களும் அதன் மருத்துவ குணங்களும் !!


அழகுக்காவும், ஆராதனைக்காவும் மட்டுமே மலர்கள் என நம்மில் பலர் நினைக்கிறோம். ஆனால் பச்சிலைப் போல பூக்களும் நோய் நீக்கும் மருந்துகளாக ஆயுர்வேதத்திலும் யுனானி மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது என்பது நம்மில் சிலருக்கு தான் தெரியும்.  பல மலர்களின் மகத்துவம் குறித்து இங்கு காண்போம்.

அகத்திப்பூ:   

பீடி,சிகரெட், சுருட்டு, உக்கா போன்றவற்றை பிடிப்பதால் ஏற்படுகின்ற விஷ சூட்டையும், பித்தத்தையும், வெயிலினால் உண்டாகும்

சூட்டையும் நீக்கும்.

முருங்கைப் பூ

பித்தம் நீக்கும்.வாந்தி குணமாகும்.கண்கள் குளிர்ச்சி அடையும். 


செந்தாழம் பூ:  

தலைவலி தீரும். கபம்,ஜலதோஷம், க்ஷயம், வாத நோய் ஆகியவை அகலும். 

உடலுக்கு அழகு அளிக்கும்.

செவ்வந்திப் பூ

உடற்சுடு, மூக்கிலிருந்து இரத்தம் வடிதல் போன்ற நோய்களை குணமாக்கும்.

வாகைப்பூ:       

கசப்பு சுவையுடைய இப்பூவினால் சுட்டால்  உண்டாகும் நோயை  நீக்கும்.

இலுப்பைப்பூ    

நல்ல சுவையுடைய  இப்பூவினால் பாம்பின் விஷம் நீக்கும், வாத நோய்  குணமாகும். 

புளியம் பூ    :      

மலையை சார்ந்த காட்டில் முளைக்கும்  இப்பூவினால் பித்த நோய்,

சுவையின்மை வாந்தி ஆகியவை தீரும்.                         

மாதுளம்பூ.        

அனல் பித்தம், ஏப்பம், வாந்தி,  இரத்த மூலம் ஆகிய நோய் நீங்கும்.

இரத்தம் மிகுதியாகும். உடலுக்கு ஊட்டம் அளிக்கும்.              

வேப்பம்பூ:         

நாட்பட்ட புளிதல் ஏப்பம், சுவையின்மை, மலப்புழுக்கள், நாக்கு நோய்கள், ஜன்னி ஆகிய நோய்கள் தீரும்                    .

பனம் பூ:            

பல் நோய், சிறுகட்டு, வாத குன்மம்,நாட்பட்ட சுரம் ஆகியவை தீரும்.

முள்முருக்கம் பூ:    

சூதக கட்டு [மாத விலக்கு தடை ] நீங்கும்.

வாழைப்பூ

சீதபேதி, இரத்தமூலம், பால்வினை நோய், வெள்ளைப்பாடு, இருமல், உடற்சூடு, கைகால் எரிச்சல் ஆகியவை  குணமாகும். விந்து விருத்தியாகும்.

தென்னம்பூ:        

பால்வினை நோய்,வெள்ளை ஒழுக்கு, உடலில் உள் கொதிப்பு, இரத்த போக்கு, விஷக்கடி நோய்கள் நீங்கும், குருதிக்கத்திப்பு. கசப்பும், இனிப்பும் சுவையுள்ள இப்பூவினால், தலைநோய், தாகம், கபம்,  புண் பித்தம், பல்வகை விஷக்கடி ஆகியவை குணமாக்கும்.

மல்லிகை பூ

இல்லறதில் ஆர்வமுண்டாக்கும். கபம், கண் மயக்கம், உடற்சூடு, குறையும்.

உடலுக்கு சூட்டை அளிக்கும். அதிகப் பால் சுரப்பால் அவதியுரும் பெண்கள் இப்பூவை மார்பில் மூன்று நாட்கள் கட்டி வந்தால் பால் சுரப்பு குறையும்.

பன்னீர் பூ      

வாந்தி, நாக்கில் சுவையின்மை, விந்து விரையம், தண்ணீர் தாகம், உடற்சூடு ஆகியவை தீரும்.

மந்தார்ப்பூ     

உடல் கொதிப்பு நீங்கும். கண்கள் குளிச்சியடையும்.உடலும் குளிச்சியடையும்.

மகிழம் பூ:        

இதனை முகர வாந்தி நிற்கும். உடலிலுள்ள அனல் நீங்கும். புணர்ச்சியின் மீது ஆசையுண்டாகும்.

புன்னைப்பூ:      

கரப்பான்,சொறி,சிறங்கு, பால்வினை நோய் ஆகியவை நீங்கும். ஆனால், பித்த மயக்கம் ஏற்படும்.                

பாதிரிப்பூ:        

பித்த சுரம் நீங்கும்.வெள்ளை போக்கு நிற்கும்.

பச்சைக் குங்குமப்பூ

மூக்கடைப்பு, ஜலதோஷம், காது நோய், கப-பித்த நோய்கள் நீங்கும்

சண்பகப்பூ      

வாத, பித்த நோய்,  எலும்பு காய்ச்சல்,  பால்வினை நோய், விந்து விரையம் ஆகியவை தீரும். வாசனை மனமகிழ்ச்சியினை உண்டாக்கும். 

இந்தப் பூக்களை நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி,  நீங்கும். தலைமுடி நன்றாக வளரவும், கருமை நிறத்தினை தரும்.

கொன்றைப்பூ     

சர்க்கரை நோய், குடல்வலி, மலப்புழுக்கள் யாவும் ஒழியும். 

காட்டாத்திப்பூ    

சீதபேதி, இரத்த பேதி,பால்வினை நோய் குணமாகும்.

No comments:

Post a Comment