23.2.14

பிற‌ந்த குழ‌ந்தை‌யி‌ன் செ‌ய்கைக‌ள்

பிற‌ந்த குழ‌ந்தை‌யி‌ன் செய‌ல்க‌ள் எ‌ல்லா‌ம் பெரு‌ம்பாலு‌ம் அ‌‌னி‌ச்சை‌ச் செயலாகவே இரு‌க்கு‌ம். ‌பிற‌ந்த குழ‌ந்தைக‌ள் பாலு‌றி‌ஞ்சவு‌ம், ‌விழு‌ங்கவு‌ம், கைகளையு‌ம், கா‌ல்களையு‌ம் அசை‌க்கு‌ம்.

மேலு‌ம் த‌ன்னுடைய தேவைகளை‌த் தெ‌ரி‌வி‌‌ப்பத‌ற்காக அழவு‌ம் செ‌ய்‌கி‌ன்றன. படு‌க்கை‌யி‌ல் படு‌த்‌திரு‌க்கு‌ம் போது, அது கரு‌ப்பை‌யி‌ல் எ‌வ்வாறு படு‌த்‌திரு‌ந்ததோ அதை‌ப் போ‌ன்ற ‌நிலை‌யி‌ல் ‌திரு‌ம்‌பி‌ப் படு‌த்து‌க் கொ‌ள்ளு‌ம்.

உர‌த்த ச‌த்த‌த்தை‌க் கே‌ட்டு ‌‌திடு‌க்‌கி‌ட்டா‌ல் அ‌ல்லது ‌திடீ‌ர் அசைவை உண‌ர்‌ந்தா‌ல் அ‌னி‌ச்சையாக தனது கையையு‌ம், கா‌லையு‌ம் உதறு‌ம் இத‌ற்கு ‌திடு‌க்‌கிடு‌ம் அ‌னி‌ச்சை செய‌ல் எ‌ன்று பெய‌ர்.

சில குழ‌ந்தைக‌ள் த‌ன்‌னி‌ச்சையாகவே நெ‌ளியவு‌ம், ‌பிடி‌யி‌ல் இரு‌ந்து ‌விலகவு‌ம் செ‌ய்யு‌ம்.

த‌ங்களது கை ‌விர‌ல்களா‌ல் முக‌த்‌தினை, முடியை ப‌ற்‌றி‌க் கொ‌ள்ளு‌ம் செயலையு‌ம் செ‌ய்‌கி‌ன்றன.

சில குழ‌ந்தைக‌ள் ‌பிற‌ந்ததுமே கை ச‌ப்பு‌ம் வேலையை செ‌ய்‌கி‌ன்றன. இதுபோ‌ன்ற குழ‌ந்தைக‌ள் கரு‌விலேயே இ‌ந்த‌ப் பழ‌க்க‌த்தை கடை‌பிடி‌த்‌திரு‌க்கு‌ம் எ‌ன்று ந‌ம்ப‌ப்படு‌கிறது.

No comments:

Post a Comment