23.2.14

குழந்தை எந்தச் சூழல்களில் அழுகிறது?



படுக்கையை நனைத்தல், பசி, நோய் வேறு சில காரணங்களால் அன்றி, பொதுவாக குழந்தை அழுவதில்லை. குழந்தையின் நிலைமையையும், அதன் தேவைகளையும் அழுகையின் தன்மையிலிருந்தே வேறுபடுத்தி அறியத் தாய்மார்கள் கற்றுக்கொள்ள வேண்டும். 

எரிச்சலுடன், பசியுடன் இருந்தால்
வாயில் விரல்களை வளைத்து வைத்துக்கொண்டு, மிகுந்த சத்தமாக அழுவதை வைத்து இதை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். 

எரிச்சலுடன், அஜீரணக் கோளாறு இருந்தால்.
பச்சையாக மலம் கழிப்பதையும், அதைத் தொடர்ந்து வாயு பிரிவதையும் அடுத்து குழந்தை அழுவதை வைத்துக் கண்டறியலாம். 

நோயில், முழுமையற்ற நிலையில், அல்லது மிகுந்த பலவீனமாக இருந்தால் சிணுங்கி சிணுங்கி தொடர்ச்சியாக அழும். 

உரக்க சத்தமிட்டு, கைகால்களை உதைத்துக்கொண்டு அடம்பிடித்து அழுதால், குழந்தைக்கு வயிற்றுவலி போன்றவை இருப்பதை உணர்ந்துகொள்ளலாம். 

விந்தையாக, வீறிட்டு சத்தத்தோடு குழந்தை அழுதால், குழந்தைக்கு அடிபட்டிருக்கக் கூடும். ஒரு மருத்துவரை உடனடியாகப் பார்ப்பது சிறந்தது. 

பொதுவாக, தனது தேவைகளை தெரிவிக்கும் குழந்தையின் வழக்கமான முறையில் ஏதேனும் வேறுபாடுகள் இருக்கிறதா என்பதை அடையாளம் காணவேண்டும். 

தனது தேவைகளை பிறருக்கு தன்னுடைய தோரணை, மற்றும் தனது குரல் மூலமாக மட்டுமே பிறந்த குழந்தை தெரிவிக்கிறது. எனவே, தாய் தன்னுடைய குழந்தையின் சிணுங்கலை விளக்கிக் கூற கற்றுக்கொள்வது அவசியம்.

No comments:

Post a Comment