23.2.14

குழ‌ந்தைக‌ளி‌ன் குணமு‌ம் தொலை‌க்கா‌ட்‌சியு‌ம்

குழ‌ந்தைகளை அ‌திகமாக ‌டி‌வி பா‌ர்‌ப்பதை‌க் குறை‌ப்பது ‌மிகவு‌ம் மு‌க்‌கியமா‌கிறது. ஆனா‌ல் அத‌ற்காக டி‌வியே பா‌ர்‌க்க‌க் கூடாது எ‌ன்று தடை போடுவது ‌மிகவு‌ம் தவறு.

கு‌றி‌ப்பாக தொட‌ர் கதைக‌ள், வ‌ன்முறை ச‌ம்ப‌வ‌ங்க‌ள் ‌நிறை‌ந்த ‌சி‌னிமா, டி‌வி தொட‌ர்களை பா‌ர்‌ப்ப‌தினாலேயே குழ‌ந்தைகளு‌ம் அ‌திக கோப‌ம், வேக‌ம் ‌நிறை‌ந்தவ‌ர்களாக வள‌ர்‌‌கி‌ன்றன‌ர்.

இத‌ற்காக பெ‌ற்றோ‌ர் ‌தியாக‌ம் செ‌ய்ய வே‌ண்டியது‌ம் மு‌க்‌கிய‌ம். பெ‌ற்றோரு‌ம், ஆபாச ‌சி‌னிமா, வ‌ன்முறை ‌சி‌னிமா, டி‌வி ‌சீ‌ரிய‌ல்க‌ள் போ‌ன்றவ‌ற்றை பா‌ர்‌ப்பதை த‌வி‌ர்‌க்க வே‌ண்டு‌ம்.

பொது அ‌றிவு ‌விஷய‌ங்க‌ள், ‌விளையா‌ட்டு, டி‌ஸ்கவ‌ரி சேன‌ல், குழ‌ந்தைக‌ள் ப‌ங்கு பெறு‌‌ம் போ‌ட்டி ‌நிக‌ழ்‌ச்‌சிக‌ள் இவ‌ற்றை கா‌ண்பதை வழ‌க்கமா‌க்‌கி‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

ந‌ல்ல நா‌ட்க‌ளி‌ல் அதாவது ப‌ண்டிகை ‌தின‌ங்க‌ளி‌ல் குழ‌ந்தைக‌‌ள் டி‌வி‌யி‌ன் மு‌ன் அம‌ர்‌ந்து பொழுதை‌க் க‌ழி‌ப்பதை த‌வி‌ர்‌த்து ந‌ல்ல ‌விஷய‌ங்க‌ளி‌ல் ஈடுபடு‌த்துவது ந‌ல்லது.

No comments:

Post a Comment