22.2.14

ஆப்பிள் பழத்தின் ஆச்சரியமூட்டும் மகத்துவம்

ஆப்பிள் பழத்தின் ஆச்சரியமூட்டும் மகத்துவம்


ஆப்பிள்  ஒரு குளிர்ப்பிரதேச  பழம் ஆகும். பழுத்த ஆப்பிள் வெளிப்புறம் பெரும்பாலும் சிவப்பாகவும், சில இரகங்களில் இளம்பச்சை அல்லது மஞ்சளாகவும் காணப்படும். ஆப்பிள் பழத்தின் தோல் மெல்லியதாயும், பழச்சதை உறுதியாகவும் இருக்கும். சதையின் உள்ளே சில சிறு விதைகள் இருக்கும்.மத்திய ஆசியாவில்தான் ஆப்பிள் முதலில் பயிர் செய்யப்பட்டது. தற்போது, ஆப்பிள் உலகின் எல்லாவிதமான குளிர்ப் பகுதிகளிலும் வளர்க்கப்படுகிறது. ஆப்பிள் மற்ற பழங்களைப் போலப் பெரும்பாலும் சமைக்கப்படாமலேயே சாப்பிடப்பட்டாலும், அது பல பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

ஆப்பிளின்  மகத்துவம் :

1.தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரையே அணுக அவசியமில்லை என சொல்கிறது ஆங்கில பழமொழி. ஆனால் ஆப்பிள் ஒரு அழகுக்கலை நிபுணரையே உள்ளே அடக்கியிருக்கிறது என்பதுதான் லேட்டஸ்ட் அழகுமொழி.

 2.ஆப்பிளில் உள்ள மாலிக் அமிலம் மலச்சிக்கலை நீக்குகிறது. குடல் பாதையில் உள்ள நுண்கிருமிகளை கொல்கிறது. ஆப்பிளை நன்கு மென்று சாப்பிட்டால் வாய் மற்றும் தொண்டைப் பகுதியில் உள்ள நுண்கிருமிகள் நீங்குகின்றன.

3.வயதானவர்களுக்கு ஆப்பிளின் மேற்புறத் தோலானது செரிக்கக் கடினமாக இருக்கும். அதனால் அவர்கள் அதன் மேற்புறத் தோலை நீக்கி உட்கொள்வது நல்லது.

4.நீர்ச்சத்து அதிகம் கொண்ட ஆப்பிள் பழத்தை கோடைக் காலத்தில் அதிகம் உட்கொள்ளலாம். இதில் மாவுச்சத்தும் நிறைந்திருப்பதால் சர்க்கரை நோயாளிகள் தங்கள் சரிவிகித சம உணவுக்கு ஏற்றவாறு மருத்துவரின் ஆலோசனையின் படி ஒன்று அல்லது இரண்டு கீற்றுகளாக ஆப்பிளை எடுத்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment