22.2.14

சிறுநீரகக் கல் கரைய சில டிப்ஸ்







யானை நெருஞ்சில்
pedalium murex

கால் கிலோ யானை நெருஞ்சில் விதையை (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) இரண்டு பங்கு தண்ணீர் ஊற்றி நன்கு காய்ச்சி வடித்து, முக்கால் பங்கு ஆகும் வரைக் காய்ச்ச வேண்டும். சிறிது பொரிகாரத் தூள் சேர்த்து குடிக்க நீரடைப்பு, நீர் எரிச்சல் தீரும்.

வாழை மரத்தை வெட்டியபின் உள்ள அடிப்பாகத்தில் மூங்கிலில் உள்ளது போல துளை போட்டு, அதில் ஊறும் நீருடன் வெடியுப்பு சேர்த்துப் பருக நீரடைப்பு, கல்லடைப்பு, சதையடைப்பு தீரும்.

உலர்ந்த கருவேலங்காயை நெய்யில் வறுத்து சம அளவு வெல்லம் கலந்து தர சொட்டு நீர் நிற்கும்.

யானை நெருஞ்சில் இலையை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் தொடர்ந்து குடித்து வர சிறுநீரகக் கல் கரையும்.

No comments:

Post a Comment