பொதுவாக குழந்தைகளுக்கு சத்தான உணவை மட்டுமே பெற்றோர் அளிப்பர். ஆனால், அவர்களை அறியாமல் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் என்பதால் சில உணவுப் பொருட்களையும் பெற்றோர் அளித்து விடுகின்றனர்.
இதனால், குழந்தையின் உடல் மட்டுமல்ல, மூளையும் பாதிக்கப்படுகிறது என்று தெரிய வந்துள்ளது.
சிக்கன் ப்ரை, ஐஸ்க்ரீம், சாக்லேட், பாம் ஆயில், பப்ஸ், உருளைக் கிழங்கு வறுவல் போன்றவை குழந்தையின் மூளையை மந்தமாக்கி விடும்.
குழந்தையின் செயல்பாடுகள் மந்தமாக இருந்தால் டிஸ்லெக்சியா என்ற நோய் ஏற்பட வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
எப்போதும் ஓடி விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தை திடீரென மந்தமாகக் காணப்பட்டால் அதை உடனடியாக கவனிக்க வேண்டும். சாதாரணமாக விட்டால் விஷயம் விபரீதமாகலாம்.
நாம் கொடுக்கும் உணவு பற்றிய அக்கறை அவசியம் இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment