25.2.14

முட்டைக்கோஸின் முக்கிய மருத்துவ குணங்கள் !

முட்டைக்கோஸின் முக்கிய மருத்துவ குணங்கள் !

உலகம் முழுவதும் அதிகமாக விளையும் காய்கறிகளில் ஒன்று முட்டைக்கோஸ். சீனர்கள் எப்போதும் சுறு சுறுப்பாக இருப்பதற்கு காரணம் அவர்கள் தினமும் உண்ணும் உணவில் முட்டைகோஸை சேர்த்து கொள்வதுதான். முட்டைகோஸ் பச்சை, பழுப்பு, சிவப்பு என பல நிறங்களில் விளைகிறது. முட்டைக்கோஸில் எத்தனையோ சத்துகள் இருகின்றன. அவற்றி சிலவற்றை பற்றி இங்கு காண்போம்,

1. முட்டைகோசில் குறைந்த அளவு கலோரி இருப்பதால் கொழுப்பு சத்து மிகவும் குறைந்துள்ளது.

2. பல்வேறு உடற்செயல்களில் பங்குபெறக்கூடிய, முக்கியமாக நோய் எதிர்பு சக்தியை தரக்கூடிய தயோசயனேட், கார்பினால், லுடின், ஸிசாந்தின், சல்பராபேன், இசோதயோ சயனேட் போன்ற ரசாயன மூலக்கூறுகள் முட்டைக்கோஸில் உள்ளது. இவை மார்பகம், தொண்டை, குடற் புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படும் தன்மையுடையது.

3. அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கக்கூடிய வைட்டமின் சி முட்டைக்கோசில் நிறைந்துள்ளது.

4. தீங்கு விளைவிக்கும் 'பிரீ-ரேடிக்கல்'களை சுத்தப்படுத்தும் தன்மை 'வைட்டமின் சி'-க்கு உண்டு. ஆக்சிஜன் பிரீ ரேடிக்கல்களை உறிஞ்சி அகற்றும் அளவை கணக்கிட்டால், 100 கிராம் பச்சை முட்டைக்கோசானது, 508 மைக்ரான் ரேடிக்கல்களை விரட்டி அடிக்கிறது. சிவப்பு முட்டைக்கோஸில் 2 ஆயிரத்து 252 மைக்ரான் அளவு ரேடிக்கல்களை சுத்தப்படுத்தும் சக்தி கிடைக்கிறது.

5. வைட்டமின் பி-5, வைட்டமின் பி-6, வைட்டமின் பி-1 போன்ற அத்தியாவசிய வைட்டமின்களும் முட்டைக்கோஸில் நிறைந்துள்ளது. இவை உணர்வுக்கும், இதர உடற்செயல்பாட்டிற்கும் உறுதுணை செய்யக்கூடியவை.

6. பொட்டாசியம், மாங்கனீசு, இரும்பு, மக்னீசியம் போன்ற தாதுஉப்புக்கள் முட்டைக்கோசில் உள்ளது. பொட்டாசியம் உடற்செல்கள் மற்றும் சருமம் வளவளப்புடன் இருக்க துணை செய்யும். இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதிலும் பங்கெடுக்கும். மாங்கனீசு, நோய் எதிர்ப்பு நொதிகள் செயல்பட துணைக் காரணியாக விளங்கும். இரும்புத் தாது, சிவப்பு ரத்த செல்கள் உருவாக்கத்தில் பங்கெடுக்கிறது.

7. முட்டைக்கோஸில் 'வைட்டமின் கே', நிறைய அளவில் உள்ளது. எலும்பு வளர்ச்சிதை மாற்றத்தில் இது பங்கெடுக்கும். அல்சீமர் மற்றும் நரம்பு வியாதிகளின் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் ஆற்றலும் 'வைட்டமின் கே' -விற்கு உண்டு.

No comments:

Post a Comment