23.2.14

நஞ்சுமுறிய -அரிவாள்மனைப் பூண்டு.

நுனிப்பற்கள் ஆப்பு வடிவ இலைகளை உடைய குறுஞ்செடி இனம் அரிவாள்மனைப் பூண்டு. இலையே மருத்துவக் குணம் உடையது. இரத்தக் கசிவைத் தடுக்கும் மருந்தாகப் பயன்படுகின்றது. 


வேறு பெயர்கள்:
அரிவாள் மூக்குப் பச்சிலை  ஆங்கிலத்தில்: sida caprinifoli


மருத்துவக் குணங்கள்
   அரிவாள்மனைப் பூண்டின் இலையை கசக்கி வெட்டுக் காயத்தில் பிழிய ரத்தப்பெருக்கு சட்டென்று நின்றுவிடும். அரிவாள்மனைப் பூண்டின் இலை, அதேயளவு குப்பை மேனி இலை கைப்பிடியளவு, பூண்டுப் பல் 2, மிளகு, 3 சேர்த்து அரைத்த புன்னக்காய் அளவு உள்ளுக்குக் கொடுத்து, காயத்திலும் வைத்துக் கட்ட நஞ்சு முறியும் (உப்பு, புளி நீக்கவும்).அரிவாள்மனைப் பூண்டின் இலை, கிணற்றுப் பாசான் இலை சம அளவு எடுத்து அரைத்து புழுவெட்டின் மீது தடவி வர விரைவில் முடி வளரும். இதன் இலையை மஞ்சள் சேர்த்து அரைத்து சொறி சிரங்கு மீது தடவி வர குணமாகும். மேலும், அரிவாள்மனைப் பூண்டின் இலை, கிணற்றுப் பாசான் இலை, எலும்பு ஒட்டி இலை வகைக்கு சம அளவாக எடுத்து அரைத்துப் பற்றிட காயங்களில் உண்டான வீக்கம் விரைவில் குணமாகும்.அரிவாள்மனைப் பூண்டின் இலை, குப்பைமேனி இலை, மஞ்சள் சேர்த்து அரைத்து படர்தாமரை மீது தடவி வர விரைவில் குணமாகும்.

No comments:

Post a Comment