28.2.14

மருதோன்றி lawsonia inermis யின்மருத்துவ குணங்கள்



மருதோன்றி

மருதோன்றி பூ,காய்

மருதோன்றி

மருதோன்றி






மருத்துவக் குணங்கள்:
  1. மருதோன்றி இலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆபிரிக்காவிலும், ஆசியாவிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது முடியை நிறம் மாற்றவும், அதன் பூவில் இருந்து நறுமணபொருள் தயாரிக்கவும் பயன்பட்டு வருகிறது.
  2. எகிப்தின் மம்மியில் சுற்றப்பட்ட துணிகள் மருதோன்றி இலை சாரில்  நனைத்து  தயார் செய்யப்பட்டிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறைத்தூதர்  முகமது நபி அவர்களுக்கு மருதோன்றி பூவில் இ௫ந்து செய்யப் பட்ட வாசனை தைலம் மிகவும் பிடித்ததாகவும் ஒரு செய்தி உண்டு.
  3. இந்தியாவிலும் இது ஒரு மூலிகை அழகு சாதன பொருளாக பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக உபயோகிக்கப்பட்ட வரலாறு உண்டு. இதைக்கொண்டு இயற்கை நிறங்கள் ஓவியத்திற்கு தயார் செய்யப்பட்டது. முடி, கரங்கள், கால்கள் அழகு படுத்தப்பட்டன.
  4. இது ஒரு சிறந்த தோல் காப்பான். மருதோன்றி இலையைப் பற்றி அறியாத  இந்திய பெண்களே இருக்க முடியாது. பெண்களின் அழகு சாதனப் பொருட்களில்  மருதோன்றியும் ஒன்று.
  5. இந்தியா முழுவதும் காணப்படும் பெருஞ்செடி மற்றும் சிறுசெடி வகையைச் சேர்ந்தது. இதன் பூ, இலை, விதை, பட்டை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. இலை பித்தத்தை அதிகமாக்கும்; சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும்; வேர் நோயை நீக்கி உடலைப் பலப்படுத்தி உடல் சூட்டை அகற்றும்; விதை, சதை- நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் குணம் உடையது. தமிழகம் எங்கும் வளர்கின்றது.
  6. நம் முன்னோர்கள் நகங்களின் மீது மருதோன்றி இலையை அரைத்து பற்று போட்டார்கள். அதனால்  நகக்கண்களில் ஏற்படும் நகச்சுற்று, புண், சொத்தை இவற்றைப் போக்கும் குணமுடையது. மேலும் நகங்களைப் பாதுகாக்கும் அரணாக  மருதோன்றி விளங்குகிறது.
  7. பாலியல் நோய்களால் தாக்கப்பட்டவர்கள் கீழ்கண்ட முறையில் பயன்படுத்தலாம்.
  8. மருதோன்றி இலை 6 கிராம், பூண்டுப்பல்,  மிளகு 5 இவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து காலை வேளையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் மேக நோய்களின் பாதிப்புகள் நீங்கும். இக்காலங்களில் உணவில் உப்பில்லாமல் சாப்பிட வேண்டும். மருதோன்றி இலையை நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி அதனை சுளுக்கு மற்றும் சிறு காயங்கள் ஏற்பட்ட இடத்தில் ஒற்றடமிட்டால் விரைவில் குணமாகும்.
  9. மருதோன்றியின் வேர், பட்டையை அரைத்து பாலில் கலந்து காலையில் அருந்தி  வந்தால் அதிக ரத்தப்போக்கு குணமாகும். பித்தத்தைத் தணித்து உடல் நிலையை  சீராக்க உதவும்.
  10. மருதோன்றி இட்டுக்கொண்டால் மனஅழுத்தம்  குறையும், வாதம், பித்தம் சம்பந்தப்பட்ட நோயைப் போக்கும் குணம் மருந்தோன்றிக்கு உண்டு.
  11. கை கால்களில் எரிச்சல் உண்டாவதை தடுக்க மருதோன்றி இலையை நன்கு நீர்விட்டு அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து கை கால்களிலும், உள்ளங்கால்களிலும் தேய்த்து வந்தால் கை கால் எரிச்சல் உடனே நீங்கும். மருதோன்றி வேர்ப்பட்டையை அரைத்துக்கட்ட கால் ஆணி குணமாகும்.
  12. கைப்பிடியளவு இலையை எடுத்து 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெய் போட்டு இலைகள் கருகும் வரை காய்ச்சி பின்னர் இறக்கி வடிகட்டி தலைக்குத் தேய்த்துவர முடி உதிர்வது நிற்கும். முடி விழுந்த இடத்தில் முடி முளைக்கும். இளநரை, பித்த நரை, பூனை முடி உள்ளவர்கள் தேய்த்து வர முடி கறுப்பு நிறமாக மாறும். மருதோன்றி இலையை எண்ணெயில் காய்ச்சிய பின்னர் பச்சை நிறமாக இருந்தால்தான் அது பதமாக இருப்பதாக பொருள். சிவப்பு நிறமாக இருந்தால் அது பதம் கெட்டு முறிந்துவிட்டது என்று தெரிந்து கொள்ள வேண்டும். இது போல முறிந்த எண்ணெய் முடி உதிர்வதைத் தடுக்க உதவாது. தலை முழுகுவதற்குத்தான் அதைப் பயன்படுத்த வேண்டும். பதமான எண்ணெயை தொடர்ந்து வழுக்கைக்குத் தேய்த்து வர வழுக்கையில் முடி வளரும்.
  13. கேசம் பளபளப்பாக இருக்கும். கேசத்தின் வேர்க்கால்கள் வலுவாகி முடி உதிர்வதைக் தடுக்கும். கேசம் நீண்டு வளரத் தூண்டும். ஈரத்தன்மையைத் தக்க வைக்கும். கண்களுக்கும், உடலுக்கும் குளிர்ச்சியைக் கொடுக்கும். மருதோன்றி பூவை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தைலமாகத் தடவ உடல் உஷ்ணம் குறையும். நல்ல உறக்கம் வரும். நீடித்த தலைவலிகள் அகலும். அழகுக்கூடும்.

மூக்கிரட்டை boerhavia diffusa யின்மருத்துவப்பயன்கள்

மூக்கிரட்டை
மூக்கிரட்டை





ஒரு பிடி  வேரும், 4 மிழகும் 100 மி.லி.விளக் கெண்ணையில் வாசனை வரக் காய்ச்சி ஆறவிட்டடு வடிகட்டி வைத்ததுக் கொண்டு
6 மாதக் குழந்தைக்கு 15 மி.லி.
அதற்கு மேல் 30 மி.லி. வாரம் 1 அல்லது 2 முறை கொடுத்துவர மலச்சிக்கல், மூலச்சூடு, நமைச்சல், சொறி சிரங்கு, மலக்கழிச்சல், வாந்தி,செரியாமை ஆகியவைத் தீரும். மாலையில் வசம்பு சுட்ட கரியைப் பொடி செய்து தேனில் உட்கொள்ளவும்.



ஒரு பிடி வேர், மிளகு 4, உந்தாமணிச்சாறு 50 மி.ல்லி. ஆகியவற்றை100 மி.லி. விளகெகெண்ணையில் காய்ச்சி வாரம் 2 முறை மேற்கண்ட முறையில் சொன்னவாறு கொடுத்து வர குழந்தைகளுக்குக் காணும் காமாலை, கப இருமல், சளி, மாந்த இழுப்பு, அடிக்கடி சளி, காய்ச்சல்  வருதல் குணமாகும்.



ஒரு பிடி மூக்கிரட்டை வேர், அருகம்புல் 1 பிடி, மிளகு 10 எண்ணிக்கை இவற்றைச் சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி 3 வேளையாகத் தினமும் குடித்து வர கீல் வாதம், ஆஸ்துமா, கப இருமல், மூச்சுத் திணரல் தீரும்.



வேர் ஒரு பிடி, அருகம்புல் ஒரு பிடி, கீழாநல்லி ஒரு பிடி, மிளகு 10 சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி தினம் 2 வேளை சாப்பிட்டு வரக் காமாலை, நீர் ஏற்றம், சோகை, வீக்கம், நீர்கட்டு, மகோந்தரம் தீரும்.



இலையைப் பொறியல், துவையலாக வாரம் 2 முறை சாப்பிட்டு வரக் காமாலை, சோகை, வாயு நோய்கள் வராமல் தடுக்கலாம்.


வேரை உலர்த்திப் பொடித்துக் காலை, மாலை ஒரு சிட்டிகை தேனில் கொள்ள மாலைக் கண், கண்படலம், பார்வை மங்கல் ஆகியவை குணமாகும்.



கீழாநெல்லி இலைமூக்கிரட்டை இலை,பொன்னாங்கண்ணி இலைசம அளவு அரைத்து கழற்சிக்காயளவு மோரில் கலக்கி 45 நாள்கள் கொள்ளமாலைக்கண்பார்வை மங்கல்வெள்ளெழுத்து தீரும்



இலையைத் தொடர்ந்து பயன்படுத்தி வரப் பொலிவும் இளமையும் வசீகரமிம் உண்டாகும்.
இதன் இலைகளை சுத்தம் செய்து நன்கு அரைத்து நெல்லிக் காயளவு எடுத்து கால் ஆழாக்கு கருங்குறவை அரிசியில் சேர்த்து சமைத்து அந்த மாவை அடையாகத் தட்டி வாணலியில் அதிக எண்ணெய்யிட்டு அதை வேகவைத்து வேளைக்கு ஒரு அடை வீதம் காலை, மாலை 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமாகும். அப்போது தவிர்க்க வேண்டியவை காரம், மீன், கருவாடு, ஆகியவை.



மூக்கிரட்டைப் பட்டை வேர்-20 கிராம், மாவிலங்கு மரப்பட்டை-20 கிராம், வெள்ளைச் சாரணை வேர்-20 கிராம் மூன்றையும் பொடியாக இடித்து முதல் நாள் இரவில் 250 மி.லி. தண்ணீரில் ஊரவைக்கவேண்டும். 50 மி.லி. வரும் வரை கொதிக்கவைத்து இறக்கி வைத்து ஆறவிட்டு வடிகட்ட வேண்டும். இத்துடன் 60 மி.லி. கிராம் நண்டுக்கல் பற்பம் சேர்க்க வேண்டும். தினமும் பல் துலக்கியதும் இதை அருந்திவர 2,3 மாதங்களில் முகவாத நோய் நிரந்தர குணம் ஏற்படும். 

27.2.14

தலை முடி வளர

தலை முடி வளர

சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையை எடுத்து அதிலுள்ள சதைப்பகுதியை ஒரு பாத்திரத்தில் வைத்து அதன் மீது சிறிது படிகாரப் பொடியை  தூவி வைத்திருக்க வேண்டும். இப்பொழுது  சோற்றுப் பகுதியிலுள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இவ்வாறு பிரிந்த நீருக்கு சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை கலந்து சுண்டக் காய்ச்சவேண்டும். காய்ச்சிய அந்த தைலத்தை தினசரி தலையில் தேய்த்து வந்தால் தலை முடி நன்றாக வளரும்.
அறிகுறிகள்:
  • முடி உதிர்தல்.
தேவையான பொருட்கள்:
  1. சோற்றுக்கற்றாழை.
  2. படிகாரம்
  3. நல்லெண்ணெய்அல்லது தேங்காய் எண்ணெய்.
செய்முறை:
சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையை எடுத்து அதிலுள்ள சதைப்பகுதியை ஒரு பாத்திரத்தில் வைத்து அதன் மீது சிறிது படிகாரப் பொடியை தூவி வைத்திருக்க வேண்டும். இப்பொழுது சோற்றுப் பகுதியிலுள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இவ்வாறு பிரிந்த நீருக்கு சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை கலந்து சுண்டக் காய்ச்ச வேண்டும். காய்ச்சிய அந்த தைலத்தை தினசரி தலையில் தேய்த்து வந்தால் தலை முடி நன்றாக வளரும்.

பொடுதலை phyla nodiflora - மருத்துவகுணங்கள்




பொடுதலை

பொடுதலை

பொடுதலை

பொடுதலை






  1. இத்தாவரம் வயல் வரப்புகளில் காடுகளில் தரையில் படரும் சிறிய கொடியினம். இதன் காய்கள் திப்பிலி போல் இருக்கும்.
  2. நூறு கிராம் பொடுதலை இலையை 50 மில்லி நீரிலிட்டு சிறு தீயில் எரித்து கால்பாகம் சுண்டின பின் வடிகட்டி அதை இரண்டு பங்காக்கி காலை, மாலை குடித்து வர சிறுநீரிலுள்ள இனிப்பை மாற்றும். இக்கஷாயத்துடன் வால்மிளகு, சூரணம் சேர்த்து குடித்துவர சிறுநீரக நீர்த்தாரைப்புண் அதனால் ஏற்படும் வெள்ளைப் படுதல் குணமாகும்.
  3. பொடுகு உள்ளவர்களுக்கு முடி உதிரும், எத்தனை தைலங்கள் தேய்த்தாலும் குணமாகாது. பொடுதலை 150 கிராம், தோலுரித்த சின்ன வெங்காயம் 250 கிராம், வெந்தயம் 50 கிராம் மூன்றையும் ஒன்றிரண்டாக இடித்து இரும்பு வாணலியில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய்விட்டு அதில் மேற்படி சரக்கை கலந்து சிறு தீயில் எரிக்கவும். நீர் சுண்டி தீயாமல் மிதக்கும் பக்குவத்தில் இறக்கி, ஆறவிட்டு வடிகட்டி பத்திரப்படுத்தவும், இதை தினமும் தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக தலையில் தேய்த்து தலைவாரிக் கொள்ள வேண்டும்.
  4. பொடுகுக்கு மேற்பூச்சு மட்டும் முழு பலனளிக்காது. உள்ளுக்கும் பொடுதலை இலைகளை நெய்விட்டு வதக்கி, புளி, உப்பு, மிளகாய் போட்டு சேர்த்து துவையல் செய்து சாப்பிட பொடுகு குணமாகும்.
  5. பொடுதலையை வதக்கி நீர்விட்டு கொதிக்க வைத்து இறுத்துக் கொடுக்க இருமல், வலிநோய்கள் ஆகியன தீரும். இலைகளை வதக்கி வறுத்த ஓமத்துடன் சேர்த்தரைத்து நீர்விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி ஒரு சங்களவு புகட்ட குழந்தைகளின் கழிச்சல் நீங்கும்.
  6. இலையுடன் சீரகம் அரைத்து கொடுக்க வெள்ளை படுதல் நிற்கும். இலையைத் துவையல் செய்து உண்டு வரை உள்மூலம் தணியும். இலையை அரைத்து கட்டி, கொப்புளத்தில் பற்றிட கட்டிகள் பழுத்து உடையும்.

ரோஜாவின் மருத்துவ பண்புகள் !

ரோஜாவின் மருத்துவ பண்புகள் !



ரோஜா






1.இந்த மலர் அன்பை சொல்லவும், அழகுக்காகவும் மட்டுமல்லாமல் மருத்துவத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
2.ரோஜா மலர்கள் மருத்துவ குணம் உடையவை. ரோஜாப்பூவின் அழகும், மணமும் மக்களை அதுவும் பெண்களை பெரிதும் கவரும். பொதுவாக ரோஜாப்பூவால் சரும நோய்கள் நீங்கும்.
3.ரத்த விருத்தி உண்டாகும். ரோஜா மலரின் இதழ்களை வேளைக்கு ஒரு கைப்பிடி வீதம் வெறுமனே மென்று சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.
4.செயல்திறன் மிக்க வேதிப்பொருள்கள் மலர்கள் நறுமண எண்ணெய் உடையவை. பினைல்எத்தானல், க்ளோ ரோஜினிக் அமிலம், டான்னின், சையானின், கரோட்டின், சர்க்கரைகள் போன்ற வேதிப்பொருட்கள் ரோஜாமலரில் அடங்கியுள்ளன.
5.ரோஜாப்பூ மொக்கு மற்றும் சதகுப்பை(தமிழ் மருந்து கடைகளில் கிடைக்கும்) ஆகியவற்றை உரலில் போட்டு இடித்து சுடு நீரில் போட்டு மூடி வைத்து விட வேண்டும். மூன்று மணி நேரம் குறையாமல் வைத்திருந்து பிறகு வடிகட்டி கொள்ள 
வேண்டும்.குழந்தைகளாக இருந்தால் கால் டீஸ்பூனும், பெரியவர்களாக இருந்தால் ஒரு டீஸ்பூனும் மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை கொடுத்துவர உஷ்ண வயிற்று வலி நீங்கும்.
6.களிம்பு ஏறாத பாத்திரத்தில் ரோஜா இதழ்களை எடுத்து கொதிக்கும் நீரை அதில் விட்டு நன்றாக கிளறி விட்டு அப்படியே மூடி வைத்திருக்க வேண்டும். இப்படி 12 மணி நேரம் மூடி வைத்திருக்க வேண்டும்.பிறகு மூடியை திறந்து கைகளை சுத்தம் செய்து விட்டு இதழ்களை கசக்கி பிழிந்து குழம்பு போல் ஆக்க வேண்டும். பிறகு இந்த நீரை வேறொரு பாத்திரத்திலிட்டு 500 கிராம் சர்க்கரை மற்றும் 200 மில்லி நீரும் சேர்த்து காய்ச்ச வேண்டும்.
7.சர்க்கரை பாகு வந்ததும் ஏற்கனவே செய்து வைத்த ரோஜாப் பூ நீரை இதில்விட்டு மறுபடியும் காய்ச்ச வேண்டும். இப்போது பாகு தேன் பதத்திற்கு வந்ததும் மூன்று அவுன்ஸ் அளவுக்குப் பன்னீரை கலந்து கிளறி இறக்கி ஆற வைத்துக் ஒரு பாட்டிலில் ஊற்றிக்கொள்ள வேண்டும்.
8.இரண்டு கரண்டி டம்ளரில் விட்டு தேவையான அளவு தண்ணீர்விட்டு சாப்பிட்டு வரலாம். இதனால் ரத்த விருத்தி உண்டாகும்.
9.ரோஜாப்பூ இதழ்களை தேவையான அளவு சேகரம் செய்து சம அளவு பயத்தம்பயிரை அதனுடன் சேர்த்து 4,5 பூலாங்கிழங்கை சேர்த்து அரைத்து விழுதாக எடுத்துக் கொண்டு தினமும் உடலில் இந்த விழுதை தேய்த்து அரை மணி பொறுத்து குளித்து வந்தால் சரும நோய்கள் ஒழிந்து உடல் நல்ல நிறம் பெறும்.

மாம்பூ மற்றும் பட்டையின் மருத்துவ குணங்கள்.( Medical properties of Mangos flower,mangos stem)

மாம்பூ மற்றும் பட்டையின் மருத்துவ குணங்கள்.( Medical properties of Mangos flower,mangos stem)


1.ஜீரண சக்தி அதிகரிக்க:
1.மாம்பூவை நிழலில் உலர்த்தி எடுத்து பொடித்து நீர்விட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தினால், வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கடுப்பு போன்றவை நீங்கும். இளம் மாவடுக்களை எடுத்து காம்பு நீக்கி காயவைத்து, உப்பு நீரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து வைத்துக்கொண்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டால், ஜீரண சக்தி அதிகரிக்கும். வாந்தி, குமட்டல் நீங்கும்.
2.மாம்பட்டையைக் குடிநீருடன் சேர்த்து செய்து அருந்தினால் சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏதும் அணுகாது. மா வேர்பட்டை வயிற்றுப்புண், குருதிக்கழிச்சல் போன்றவற்றை நீக்கும்.
3.பித்த வெடிப்பு குணமாகும்
4.பித்த வெடிப்பினால் கால் வலி ஏற்படுவதோடு பாதங்கள் பார்ப்பதற்கே அருவெறுப்பாக காணப்படும். கால் பித்தவெடிப்பு உள்ள பகுதியில் மாம்பிசினைத் தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும். தேமல், படை உள்ளவர்கள் மாம்பிசினை மாம்பழச்சாறுடன் கலந்து பூசினால் தேமல், படை நீங்கும்.

மாம்பூவை நிழலில் உலர்த்தி எடுத்து பொடித்து நீர்விட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தினால், வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கடுப்பு போன்றவை நீங்கும். இளம் மாவடுக்களை எடுத்து காம்பு நீக்கி காயவைத்து, உப்பு நீரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து வைத்துக்கொண்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டால், ஜீரண சக்தி அதிகரிக்கும். வாந்தி, குமட்டல் நீங்கும்.

2.வயிற்றுப்புண், குருதிக்கழிச்சல் நீங்க:

  மாம்பட்டையைக் குடிநீருடன் சேர்த்து செய்து அருந்தினால் சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏதும் அணுகாது. மா வேர்பட்டை வயிற்றுப்புண், குருதிக்கழிச்சல் போன்றவற்றை நீக்கும்.

3.பித்த வெடிப்பு குணமாக:

பித்த வெடிப்பினால் கால் வலி ஏற்படுவதோடு பாதங்கள் பார்ப்பதற்கே அருவெறுப்பாக காணப்படும். கால் பித்தவெடிப்பு உள்ள பகுதியில் மாம்பிசினைத் தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும். தேமல், படை உள்ளவர்கள் மாம்பிசினை மாம்பழச்சாறுடன் கலந்து பூசினால் தேமல், படை நீங்கும்.

அகத்தி கீரையின் அற்புதமான 10 பயன்கள் !!

அகத்தி கீரையின் அற்புதமான 10 பயன்கள் !!

அகத்தை சுத்தம் செய்யும் தன்மை கொண்டதால் இந்த கீரை அகத்தி கீரை என அழைக்கப்படுகிறது. அகத்திக் கீரையை யாரும் எளிதில் உணவில் சேர்த்துக்கொள்வதில்லலை, ஏனென்றால் அதில் கசப்புத் தன்மை கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. சுவை கசப்பாக இருந்தாலும் இதன் மருத்துவ நன்மைகளை பார்த்தால், இதனை பிடிக்காதவர்களுக்கு கூட வியப்பாகத்தான் இருக்கும்.  அகத்தி கீரையின் முக்கிய மருத்துவ குணங்கள் பற்றி இங்கு காண்போம்.

சித்த மருத்துவம் அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக கூறுகிறது. இம்மரத்தின் பல பகுதிகள் மூலிகையாகப் பயன்படுகின்றது. 

அகத்திக் கீரையில் 8.4 விழுக்காடு புரதமும் 1.4 விழுக்காடு கொழுப்பும், 3.1 விழுக்காடு தாது உப்புகளும் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். மேலும் அகத்திக்கீரையில் மாவுச் சத்து, இரும்புச் சத்து, வைட்டமின்(உயிர்ச்சத்து) ஏ ஆகியவையும் உள்ளன.

அகத்திக் கீரையை சாப்பிடுபவர்களுக்கு பித்த சம்பந்தமான நோய்கள் நீங்குவதுடன் உணவு எளிதில் ஜீரணமாகும்.

வாரத்திற்கு ஒரு முறையாவது அகத்திக் கீரை சாப்பிட்டு வர, உடல் உஷ்ணம் குறைந்து கண்கள் குளிர்ச்சி பெரும்.

அகத்தி கீரை சாற்றை சேற்று புண்களில் தடவி வர சேற்று புண்கள் விரைவில் ஆறிவிடும்.

உடம்பில் காணப்படும் தேமலுக்கு அகத்தி கீரையீன் இலையை தேங்காய் எண்ணையுடன் வதக்கி, அதை விழுதாக அரைத்து பூசி வந்தால் தேமல் முற்றிலுமாக மறையும்.

குழந்தைகளுக்கு நீர் கோர்த்துக் கொண்டால், இக்கீரையின் சாற்றை ஐந்துக்கு ஒரு பங்கு தேன் கலந்துதலை உச்சியில் தடவினால் நீர்க்கோவை மறையும்.

அகத்தி கீரையில் சுண்ணாம்பு சத்து அதிகமாக இருப்பதால், அது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.

தொண்டை புண், தொண்டை வலி ஆகியவை உள்ளவர்கள் அகத்தி கீரையை பச்சையாக மென்று சாப்பிட்டால் விரைவில் தொண்டை பிரச்சனை குணமாகும்.

அகத்தி கீரை வயிற்றில் உள்ள புழுவை கொள்ளும், மேலும் மலச்சிக்கலை தீர்க்கும்.

குறிப்பு : இந்த கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் ரத்தம் கெட்டுப்போகவும் வாய்ப்பு உள்ளது. ஆதலால் வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தவும். 

வாயு கோளாறு உள்ளவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது.

மருந்து சாப்பிடுபவர்கள் இந்த கீரையை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் மருந்தின் வீரியத்தை அகத்திகீரை குறைத்து விடும்.

26.2.14

உடல் பருமன் குறைய-கேரட்மோர் யூஸ்

கேரட்
மோர்

தேவையான பொருட்கள்-
கேரட்
மோர்


செய்முறை:-

சிறிதளவு மோர் மற்றும் காரட் இவற்றை நன்றாக சேர்த்து அரைத்து தினமும் குடித்து வந்தால் உடல் பருமன் குறையும்

உடல் பருமன் குறைய-முள்ளங்கித்துருவல்

முள்ளங்கி

முள்ளங்கி

தேன்



தேவையான பொருட்கள்-

முள்ளங்கி

தேன்


செய்முறை-
முள்ளங்கியை துருவி மேலாகச் சிறிது தேன் கலந்து, சாப்பிட்டால் உடலில் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் பருமன் குறையும்

உடல் எடை குறைய-பப்பாளிக்காய்




பப்பாளிக்காய்





பப்பாளிக்காய்





பப்பாளிக்காயை சமைத்து உணவில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.


10 benefits of unripe green papaya

Green papaya comes fully loaded with health benefits for the presence of vital nutrients like vitamin c, b and e along with potassium, fiber, magnesium and minimal calories in it. Read ahead 10 amazing benefits of unripe green papaya for better health and vitality - 

1. Aids digestion: green papaya contains a digestive enzyme namely papain that supplements for lack of gastric juice. It renders benefits in cases of intestinal irritation and excessive mucus in stomach.

2. Soothes inflammation: green papaya has anti-inflammatory properties for benefitting patients of asthma, osteoarthritis, gout and rheumatoid arthritis. It also has vitamin a that decreases lungs' inflammation in smokers. Fresh green papaya juice can also treat inflamed tonsils.

3. Eliminates toxins: the laxative fibers of green papaya get entangled with cancerous toxins and eliminate them via bowel movements. It also renders relief from constipation, piles and diarrhea.

4. Subsides skin infection: intake as well as topical application of green papaya can show impressive improvement in psoriasis, acne, skin pigmentation, freckles or inflamed skin.

5. Arrests bad cholesterol: unripe green papaya is full of antioxidants that prevent stroke or heart attack.

6. Eases menstrual pain: consumption of unripe papaya contracts womb's muscles for easy and regulated menstrual flow. It also prevents menstruation cessation.

7. Controls bowel movements: green papaya is anti-parasitic and anti-amoebic in character thus is able to regulate bowel movement that consequently eases constipation, indigestion, acid reflux, ulcers, heartburn and gastric problems.

8. Prevents heart ailment: green papaya maintains regulated blood flow and keeps check on the sodium content present in the body. This reduces the chances of heart ailments.

9. Dissolves extra weight: green papaya is full of vitamin a, c and e for trimming down extra pounds.


10. Develops mammary glands: the enzymes present in green papaya develop mammary glands and increases the production of breast enhancing hormones. Its content of vitamin a stimulates the secretion of ovarian estrogen and female hormones.


குப்பைமேனி acalypha indica மருத்துவக் குணங்கள்








குப்பைமேனி




மருத்துவக் குணங்கள்
நெஞ்சுக்கோழையை நீக்கும். இருமலைக்கட்டுப் படுத்தும். விஷக்கடி, ரத்தமூலம், வாதநோய்,நமச்சல், ஆஸ்துமா, குடற்புழுக்கள், மூட்டுவலி மற்றும் தலைவலி போன்ற நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது. இலை வாந்தி உண்டாக்கிக் கோழையகற்றியாகவும். வேர் மலமிளக்கியாகவும் பயன்படுகிறது
சமூல சூரணம் 1 சிட்டிகை நெய்யில் காலை மாலை ஒரு மண்டலம் கொடுக்க 8 வித பவுத்திர நோயும்தீரும்.
வேர்சூரணம் 1 லிட்டர் நீரில் 1 பிடி போட்டு 8 இல்ஒன்றாய் காச்சிக் கொடுக்க நாடா புழு, நாக்குப்பூச்சிநீங்கும். பேதியாகும் சிறுவர்களுக்குப் பாதியளவு கொடுக்கவும்.
இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் கட்டிவரப் படுக்கைப் புண்கள் தீரும்.
இலைச் சூரணத்தைப் பொடி போல் நசியமிட தலை வலி நீங்கும்
இலை, சிறிது மஞ்சள், உப்பு அறைத்துப் பூசி சற்றுநேரம் கழித்துக் குளிக்கத் தோல் நோய் அனைத்தும் தீரும்.
மூலநோய் ஒரு சிக்கலான நோய்.அறுவை செய்தாலும் வளரும். மூலிகை மருந்துகள் நல்ல பயன் தரும். ஆசனமூலம், பக்க மூலம், சிந்திமூலம், மேக மூலம், சரக்கண்ட மூலம், மாலைமூலம், கொடிமூலம், கண்டமாலை என எட்டு வகைப்படும். பதினெட்டு வகை எனவும், கூறுவர். அவை இவற்றில் அடங்கும். மூலத்திற்குக் குப்பைமேனி சிறந்த மருந்தாகும். பூத்த குப்பைமேனியை வேறுடன் பிடுங்கி நிழலில் உலர்த்தி சூரணம் செய்து இதில்2 – 5 கிராம் அளவு பசும் நெய்யில் காலை மாலை 48 நாள் சாப்பிட எந்தவகை மூலமும் முற்றிலும் குணமாகும். மோரில் சாப்பிடவும். புளிகாரம் இல்லாவிடில் விரைந்து குணமடையும்.
குடற்பழுவான நாடாப்புழு, கீரிப்பூச்சி, ஆகியவற்றிக்கு, இதன் வேர் 50 கிராம்200 மி.லி. நீரில் காய்ச்சி குடிநீராக அருந்த, பூச்சிகள் அனைத்தும் வெளியேறும்
குப்பைமேனிச்சாற்றில் சுண்ணாம்பு மத்தித்துநாய், பாம்பு, எலி, முதலியனவற்றில் கடிவாயில் தடவ குணமடையும். மேகப்புண்ணும் குணமடையும்.
ஆமணக் கெண்ணையில் இந்த இலையை வதக்கி இளஞ் சூட்டுடன் வைத்துக் கட்ட படுக்கைப் புண், மூட்டு வீக்கம், வாத வலி தீரும்.
இந்த இலையின் பொடியை மூக்கில் பொடி போல் இழுக்க நீர் வடிந்து தலைவலி உடனே குணமடையும். இதனை நசியமிடுதல் என்பர். வெறிநாய்க் கடியும், சித்த பிரமையும் குணமடையும்.
குப்பைமேனி, மஞ்சள், உப்பு மூன்றும் அரைத்துப் பூசி ஒரு மணி நேரம் சென்று குளித்து வர சொறி சிரங்கு படை குணமடையும்.
எல்லா வகையான புண்களுக்கும் இதன் இலையுடன் மஞ்சள் வைத்து அரைத்துப் பூச குணமடையும், மேனி மீண்டும் எழிலோடு விளங்கும்.

கிவி' பழத்தின் மருத்துவ குணங்கள்('Kivi' fruit medicinal properties)

கிவி' பழத்தின் மருத்துவ குணங்கள்('Kivi' fruit medicinal properties)

கிவி' பழம்





1.மேலைநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் `கிவி' பழம், தற்போது நம் ஊரிலும் பெரிய குளிர்பதன காய்கறிக் கடைகளில் கிடைக்கிறது. `சீனத்து நெல்லிக்கனி' என்று அழைக்கப்படும் `கிவி', மருத்துவக் குணம் நிறைந்தது என்று ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. `கிவி'யின் மருத்துவக் குணங்கள் பற்றிப் பார்ப்போம். 
2.`கிவி' பழத்தில் கொழுப்புச் சத்து மிகவும் குறைந்த அளவில் உள்ளது. எனவே, உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் இந்த பழத்தை பயமின்றி உண்ணலாம். `கிவி'யில் `வைட்டமின் சி' அதிக அளவில் உள்ளது. நோயைத் தடுக்கும் ஆற்றலைப் 
பெற்றுள்ளது. நம் உடம்பில் கட்டுப்பாடில்லாமல் திரியும் `ராடிக்கிள்கள்'தான் பல்வகையான சிதைவு நோய்களுக்கும், செல்களின் சிதைவுக்கும் காரணமாக அமைகின்றன
3.இத்தகைய `ராடிக்கிள்களின்' கடும்தன்மையை அழித்து, நோயின்றி நம்மைக் காக்கும் ஆற்றல் கிவி பழத்திற்கு இயற்கையாக உள்ளது. முதுமையின் காரணமாக ஏற்படும் சிதைவு நோய்களான கண் புரை, விழித்திரைச் சிதைவு நோயைத் தடுக்கிறது. இதயத் துடிப்பில் சீரற்ற நிலையைத் தடுக்கத் துணைபுரிகிறது. 
4.இதயத்தின் துடிப்பைக் கட்டுப்படுத்துகிறது. உடலில் பொட்டாசியச் சத்து குறைந்தால் இதயத் துடிப்பில் சீரற்ற நிலை ஏற்படக்கூடும். கிவி பழத்தில் அதிக அளவு பொட்டாசியச் சத்து இருப்பதால், இதயத் துடிப்பைச் சீராக வைக்கிறது. மாரடைப்பையும் தடுக்கிறது.

முருங்கை moringa oleifera மருத்துவ பயன்கள்


முருங்கையின் மருத்துவ பயன்கள்

முருங்கை

.
முருங்கை இலை

உடன் வெட்டுக்காயத்துக்கு முருங்கை இலையை அரைத்து வைக்க ரத்த பெருக்கு கட்டுப்பட்டு வெட்டுக்காயம் குணமடையும்.

இது ஒரு சத்துள்ள உணவுபொருள். இது உடல் வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டுடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும்.

.இதனுடன் நெய் சேர்த்து சமைப்பது நல்லது.

.சாதாரணமாக எல்லா வீட்டுக் கொல்லைகளிலும் தென்படும் முருங்கை மரத்தை மருத்துவ பொக்கிஷம் என்றே கூற வேண்டும். எண்ணற்ற வியாதிகளுக்கு ஏன்?

அநேகமாக எந்த வியாதிக்குமே, பலவகைகளில் மருந்தாகிறது.
.முருங்கை மரத்தை விதையிலிருந்தும் அதன் கிளைகளை வெட்டி நட்டும் உற்பத்தி செய்யலாம்.
.இதில் ஒட்டுச் செடிகூட உண்டு என்றால் உங்களுக்கு வியப்பாயிருக்கும். அந்த ஒட்டு வகையில் நல்ல சதைப்பற்றான சுவையான காய்கள் கிடைக்கும். நீண்ட காய்களை காய்க்கக் கூடியதாகவும் அதிக பலனை தரக்கூடியதாகவும் வளரும்.

.முருங்கை மரத்தில் பட்டை, கீரை, காய், விதை, பிசின் அனைத்துமே பயன்படுகின்றன.

முருங்கைப் பட்டையை நீர் விட்டு அரைத்து வீக்கங்களுக்கும் வாயு தாங்கிய இடங்களுக்கும் போடுவது வழக்கம்.

.முருங்கை இலையை உருவிய பின் காம்புகளை நறுக்கிப் போட்டு மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் உண்ண, கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கி சிறு நீரைப் பெருக்கும்.
.முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்பு சத்து இவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் பொரித்துச் சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். தோல் வியாதிகள் தீரும்.

.முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்து விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் ஒரு நல்ல மருந்து.

.கடுமையான ரத்த, சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் இந்த வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து. முருங்கைக் காயை வேகவைத்து கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். இதை உண்டதும் ஒரு தம்ளர் எருமை மோர் சாப்பிடுவது சீரணத்துக்கு உதவி செய்கிறது.
.முருங்கை மரத்தின் மருந்து சக்தியை அறிந்தோ அறியாமலோ நாம் அடிக்கடி முருங்கைக்காயை உணவாகக் கொள்கிறோம். முருங்கைக்காய் சாம்பார் பலருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாயிற்றே!

.முருங்கைக் காய்ச் சாம்பார் சுவையாக இருப்பதோடு அல்லாமல், மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண்நோய் இவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

பலாப் பழத்தின் மருத்துவ பயன்கள் !

பலாப் பழத்தின் மருத்துவ பயன்கள் !



பலாப்பழம்




பலாப்பழம் முக்கனிகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த பழம் ஒரு குறிப்பிட்ட சீசனில் மட்டுமே கிடைக்க கூடியது. பலாப் பழம் சாப்பிடுவதற்கு சுவையானது மட்டுமல்ல, உடலுக்கும் நல்லது. 

பலா பழத்தின் மருத்துவ குணங்கள் :

1.பலாபழம் மூளைக்கும், உடலுக்கும் அதிக பலத்தைத் தரும். நரம்புகளை உறுதியாக்கும், ரத்தத்தை விருத்தி செய்யும்.

2.கண் பார்வைக்கு உதவும் விட்டமின் ஏ பலாப்பழத்தில் அதிக அளவில் உள்ளது.

3.அடிக்கடி நோய் தாக்கி அவதிக்குள்ளாகுபவர்கள் பலா பழம் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியம் பெறும்.

4.பாலாக்காய் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு சமைத்துக் கொடுத்தால் நன்றாக பால் சுரக்கும்.

5.பலாக்காய் உடல் சூட்டை தணிக்கும் ஆற்றல் பெற்றது.

6.பலாக் காயை சமைத்து சாப்பிட்டால் பித்த மயக்கம், அதனால் ஏற்படும் கிறுகிறுப்பு, பித்த வாந்தி போன்றவற்றைக் குணப்படுத்தும்.

25.2.14

இதயம் வலுவடைய

இதயம் வலுவடைய

மாதுளம் பழத்தை எடுத்து தோலை நீக்கி நன்கு அரைத்து பிழிந்து வடிகட்டி அந்த சாற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுவடையும்.

அறிகுறிகள்:
  • இதயம் பலவீனமாக காணப்படுதல்.
  • படபடப்பு.
  • இதயத்தில் வலி ஏற்படுதல்.

மாதுளம் பழத்தை எடுத்து தோலை நீக்கி நன்கு அரைத்து பிழிந்து வடிகட்டி அந்த சாற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுவடையும்.

நினைவுதிறன் அதிகரிக்க-உளுந்து

நினைவுதிறன் அதிகரிக்க


உளுந்து



உடலில் உளுத்துப்போன உடல் உறுப்புகளை வளர்க்கும் ஆற்றல் உடையதால் தா‌ன் உளுந்து எனப் பெயர் பெற்றது. இது நரம்புகளை பலப்படுத்தும். நீரிழிவை கட்டுப்படுத்தும்.

உளுந்தை அடிக்கடி உணவில் சேர்த்துவர இடுப்பு வலி நீங்கும். காச நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது. 

உளுந்தை‌க் கொண்டு செய்த பண்டங்களை உண்டு வர நினைவுத்திறன் அதிகரிக்கும்.

உளுந்தில் புரதம், மாவுச்சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன.

உடல் சதை வளர்ச்சிக்கு உளுந்து மிகவும் சிறந்தது. மெலிந்த உடல்வாகு உள்ளவர்கள் இதனை களி கிளறி சாப்பிட்டு வர உடல் பருமன் அதிகரிக்கும்.

விஷக்கடிகளுக்கு தோலுடன் கூடிய உளுத்தம் பருப்பை வாயிலிட்டு மென்று சிறிது நல்லெண்ணையுடன் விழுங்கி விட விஷம் முறியும்.

அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்

அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்

வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். 

குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.


வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம். 

வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண்